Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

யாருக்கும் வேண்டாத கண் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) மலையாள மூலம்: சிஹாபுதீன் பொய்த்தும்கடவு, தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ, வெளியீடு: வம்சி புக்ஸ், பக்கங்கள்: 136, விலை: 120 ரூபாய்.

நீங்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது, பாதையில் ஒரு மனிதனின் கண் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் உயிர்ப்போடு, விழியை உருட்டுகிற, இமையை மூடித் திறக்கிற, துக்கத்தில் அழுகிற ஒரு கண்! இந்த அதிர்ச்சியூட்டும் ஆரம்ப வரிகளே முழுக்கதையையும் படிக்கத் தூண்டிவிடுகின்றன. கண்டெடுத்தவன், மனைவியிடம் விவரத்தைச் சொல்ல, ‘போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் போகாதீங்க. புடிச்சு உள்ள வெச்சிருவாங்க. எங்கே எடுத்தீங்களோ அங்கேயே கொண்டுபோய்ப் போட்டுட்டு வாங்க!’ எனப் பதறுகிறாள் மனைவி. இரக்கமும் மனிதநேயமும் கொண்ட அவனுக்கோ, அப்படிச் செய்ய மனம் வரவில்லை. கண்ணைக் கையில் வைத்துக்கொண்டு அவன் தவிக்கும் தவிப்பை விவரிக்கிற கதை, இறுதியில் நம்மைக் கலங்கச் செய்துவிடுகிறது.

விகடன் சாய்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொகுப்பில் இருக்கும் எல்லா கதைகளுமே எளிய மனிதர்கள், அவர்கள் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டவை. கேட்டோ, பார்த்தோ அறியாத அபூர்வ சம்பவங்களைக் கொண்டு கதைகள் நகர்த்தப்பட்டாலும், எல்லாமே மனித வாழ்க்கையின் உச்சபட்ச துயரத்தை விவரிப்பதற்காக உருவாக்கப்பட்டவை; எல்லா மனிதர்களிடமும் நாம் அன்பு செலுத்தவேண்டிய அவசியத்தை நுட்பமாக உணர்த்துபவை. மனிதம் பேசும் கதைகள்!

சிவப்புச் சந்தை
(மொழிபெயர்ப்புக் கட்டுரை) - ஸ்காட் கார்னி, தமிழில்:

செ.பாபு ராஜேந்திரன், வெளியீடு: அடையாளம் பதிப்பகம், பக்கங்கள்: 286,

விலை: 250 ரூபாய்.

விகடன் சாய்ஸ்

உலகின் அதிக லாபம் ஈட்டும் சந்தைகளுள் ஒன்று சிவப்புச் சந்தை. தோல், தசை, எலும்புகள், ரத்தம், விழித்திரை, சிறுநீரகம், ஈரல், இதயம், கர்ப்பப்பை, விந்து, தலைமுடி... என மனித உடலின் ஒவ்வோர் உறுப்பும் விற்பனைப் பண்டமாகும் மனித உறுப்புகளின் சந்தை. பெரும் பணக்காரர்களின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றிக்கொள்ள, ரகசியமான மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்த... எனப் பல காரணங்களுக்காக உயிருள்ள அல்லது இறந்த மனிதர்களின் உடல்கள் தேவைப்படுகின்றன. இந்த வர்த்தகத்தில் நடக்கும் பணப் பரிமாற்றம், மூளைச்சலவை, திருட்டு, கடத்தல் போன்ற நடைமுறை உண்மைகள் நம்மால் ஜீரணிக்க முடியாதவை. பெரும்பாலும் இந்தச் சந்தையால் பாதிக்கப்படுகிறவர்கள், ஏழை எளியவர்கள், பெண்கள், குழந்தைகள். இவர்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் என்பது அதிர்ச்சி. மனித உடல் சார்ந்து இயங்கிவரும் இந்த வர்த்தக உலகை, அதன் உலகளாவிய நெட்வொர்க்கை இந்தியாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்து, ஆய்வுசெய்து ‘சிவப்புச் சந்தை’ என்ற நூலாக தனது அனுபவங்களை எழுதியுள்ளார் ஸ்காட் கார்னி. அவரது சுவாரஸ்யமான எழுத்து நடையால், அந்த விபரீத உலகத்தின் ரகசிய சந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் மனிதனும் வணிகத்தில் ஒரு விற்பனைப் பொருளாக இணைக்கப்பட்டுவிட்டான் என்ற கொடூர உண்மையை உணர்த்தும் `சிவப்புச் சந்தை' சமகாலத்தின் முக்கியமான நூல்.

தாண்டுகால் (கவிதை) - தவசிக்கருப்புசாமி, வெளியீடு: களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம், பக்கங்கள்: 64 விலை: 70 ரூபாய்.

தமிழ் நவீனக் கவிதைகளின் மொழியும் வடிவமும், அன்றாடம் பல புதுமைகளை நோக்கிப் பயணிக்கின்றன. இதுவரை பெரும்பாலும் கவிதைக்குள் வராத வட்டார மொழிகள், பழங்குடி மொழிகள், தொழில் சார்ந்த அனுபவங்கள் இன்று கவிதைகளில் நுழைந்து பன்முகம் காட்டுகின்றன. அந்த வரிசையில் தவசிக்கருப்பசாமியின் `தாண்டுகால்' கவனிப்புக்கு உரியது.

விகடன் சாய்ஸ்

கிராம வாழ்வின் பெண்களுக்கே உரிய சிக்கலான அனுபவங் களையும், நவீன பொருளாதார, நுகர்வுக் கலாசாரத்தால் நிகழும் அறம் சார்ந்த குழப்பங்களையும், சாதியத்தின் முகமாறுதல்களையும் வட்டாரப் பேச்சுமொழியில் கவிதையாக்கியிருக்கிறார் தவசி. பெரும்பாலான கவிதைகள் வசவுத்தொனி கொண்டவை. அவையே, இந்தக் கவிதைகளின் பலமும் பலவீனமும். இதன் மொழி மற்றும் சொல் முறையின் அடிப்படையில் தனித்த அடையாளம்கொண்ட தொகுப்பு!