Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

வர்றான் மோக்லி!

90-களின் குழந்தைகளுக்கு, `தி ஜங்கிள் புக்’கையும் மோக்லியையும் மறக்கவே முடியாது. எத்தனையோ ஆண்டுகளின் ஞாயிறு காலைகளை கரடியார் பாலுவும், கறுஞ்சிறுத்தை பகீராவும், வில்லன் புலி ஷேர்கானும் குதூகலமாக்கியிருக்கிறார்கள். இந்தி புரியாதுதான்... ஆனாலும் இன்னும் மனசுக்கு நெருக்கமான கார்ட்டூன் என்றால், அது `தி ஜங்கிள் புக்’தான். ‘ஜங்கிள் ஜங்கிள் பத்தாச் செல்லாகே... ஜட்டி பெக்ன்கே பூல்கிலாகே...’ பாடலை ஒரு சொல்கூட அர்த்தம் புரியாமல் வாசித்த தலைமுறைதானே நாம்.

விகடன் சாய்ஸ்

இப்போது அதே `தி ஜங்கிள் புக்’ கதையை, டிஸ்னி பிக்சர்ஸ் நேரடி திரைப்படமாக எடுத்து வெளியிட உள்ளது. இதில் ரியல் மனிதர்கள் நடிக்க, மிருகங்கள் மட்டும் கிராஃபிக்ஸில் தத்ரூபமாக வரப்போகின்றன. சமீபத்தில் இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ‘ஜங்கிள் ஜங்கிள் பத்தாச் செல்லாகே...’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். பாலிவுட் பாடலாசிரியர் குல்சார், இசையமைப்பாளரும் இயக்குநருமான விஷால் பரத்வாஜ் ஆகியோர் இணைந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். நான்கு குழந்தைகள் சேர்ந்து பாடும் இந்தப் பாடலைக் கேட்கும்போது, 90-களின் காலை நேரத்து சூரியனின் வெப்பம் நம் நினைவுகளில் தகிக்கிறது. பாடலுக்கான லிங்க்...  www.youtube.com/watch?v=RnO1usyMyEo

மைனஸ் டிகிரி மாரத்தான்!

‘லடாக் மாரத்தான்’ - உலகின் மிக உயரமான இடத்தில் நடக்கும் மிகவும் கடினமான ஓட்டப்பந்தயம். கடல் மட்டத்தில் இருந்து 3,500 மீட்டர் உயரத்தில் ஓடும் அனுபவம், நிச்சயம் புதுமை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் சாய்ஸ்

இமயமலைச் சிகரங்களில், ஆறுகளைத் தாண்டியும், பள்ளத்தாக்குகளின் வழியாகவும், லடாக்கிய மக்களின் மிகச் சிறிய கிராமங்களின் வழியாகவும் ஓடுவது மறக்கவே முடியாத நினைவுகளை நமக்குத் தரும். இந்தப் போட்டி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டத்தின் ‘லே’ நகரத்தில் செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதைப் பார்க்க, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள். ஆக்ஸிஜன் குறைவான பகுதி என்பதால், ஒரு வாரத்துக்கு முன்னரே அங்கு சென்று ஊரை நன்றாகச் சுற்றிப்பார்த்து, மைனஸ் டிகிரி குளிர் என்பதால் உடலை அந்தத் தட்பவெப்ப நிலைக்குத் தயார்ப்படுத்திக்கொள்வர். எந்த அனுபவமும் இல்லாதவர்களும் ஓடலாம். இதற்காகவே ஏழு கி.மீ `ஃபன் ரன்' வைத்திருக்கிறார்கள். ஒரு நபர், சென்னையில் இருந்து விமானத்தில் சென்று வர 30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மாரத்தான் லவ்வர்கள் தவறவிடக் கூடாத போட்டி இது. www.ladakhmarathon.com/

என்னாச்சு...குழந்தை அழுதே!

விகடன் சாய்ஸ்

புதிதாக `பாப்பா' பெற்றுக்கொண்ட இளம் அம்மாக்களுக்கான செயலி ‘Glow Baby'. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நமக்குத் தேவையான அறிவுரை கூறி எப்படி நம்மை வழிநடத்துவார்களோ, அப்படி உடன் இருந்து பாப்பாவை வளர்க்க உதவுகிறது இந்த செயலி. குட்டி பாப்பாவுக்கு எப்போது பசிக்கும், எப்போது தாய்ப்பால் தரவேண்டும், எப்படித் தூங்கவைக்கவேண்டும், அழுதுகொண்டே இருந்தால் எப்படிச் சாந்தப்படுத்த வேண்டும் என, ஏகப்பட்ட விஷயங்களில் இந்தச் செயலி உதவுகிறது. கூடவே எந்த நாளில் தடுப்பூசி போடவேண்டும், எத்தனை மாதங்களுக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கலாம் என்பதையும் குறிப்புகளாகத் தருகிறது. `இது பால் கொடுக்கும் நேரம்’, `இது பாப்பாவுக்கு டயாப்பர் மாற்றும் நேரம்’ என அலாரம்கூட வைத்துக்கொள்ளலாம். புதிதாக குழந்தை பெறும் இளம் பெற்றோருக்கு, இந்தச் செயலி நிச்சயம் ஒரு குட் பார்ட்னர்! play.google.com/store/apps/details?id=com.glow.android.baby