சூடு பறக்கும் வெயிலில் இருந்து தப்பித்து ரிலாக்ஸ் செய்ய எங்கே செல்லலாம்? இதோ சில சாய்ஸ்...

காற்றுப் படகில் சாகசப்பயணம்

காட்டுப் பகுதியில் சஃபாரி ரைடு, பறவைகளைப் பார்ப்பது, சாகச விளையாட்டுக்கள்... என `தண்டேலி'யில் என்ஜாய் பண்ண ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. குடும்பத்துடன் மகிழ்ச்சிப் பொங்க பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலம் இது. பாறைகளுக்கு நடுவே பாய்ந்தோடும் ஆற்றில், காற்றுப் படகில் கும்பலாகச் சவாரிசெய்யும் ‘ஒயிட் வாட்டர் ராஃப்டிங்’ வசதி உள்ள ஒரே தென்னிந்தியச் சுற்றுலாத் தலம் `தண்டேலி' மட்டும்தான். பாறைகளில் மோதி, தடுமாறி, மீண்டெழும் படகில், `கவிழ்ந்து விடுவோமோ!' என்ற அச்சத்துடன் துடுப்பு போடும் த்ரில் பிரத்யேகமானது. இந்த உற்சாகத்துக்காகவே இளைஞர் கூட்டம் இங்கு குவிகிறது. ராஃப்டிங்கோடு, முதலைகள் பார்ப்பது, பசுமை நடை, ட்ரெக்கிங் போன்றவையும் உண்டு. இந்த இடத்துக்குச் செல்ல, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்குச் சென்று அங்கு இருந்து பஸ்ஸில் போக வேண்டும்.

இந்தியானா ஜோன்ஸ் குகை

ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருக்கின்றன பெலும் சுரங்கக் குகைகள். இவை, 10 லட்சம் ஆண்டுகள் பழைமையானவை. அகழ்வராய்ச்சியின்போது இங்கே மனித எலும்புகளோடு சில முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளன. `இவை கி.மு 4500-ம் ஆண்டைச் சேர்ந்தவை’ என்றும், `இந்தக் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாட்சிகள் இவை’ என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சுமார் 35 அடி அகலம் உள்ள இந்தக் குகை, 3 கி.மீ அளவுக்கு நீள்கிறது. இந்தியாவில் உள்ள நீளமான குகை இதுதான். கறுப்புச் சுண்ணாம்பால் உருவான நீண்ட பாதைகளையும், சின்னச்சின்ன அறைகளையும், நல்ல நீரையும் கொண்டுள்ளன. மர்மமான குகைக்குள் பயணிப்பது மறக்கவே முடியாத அனுபவமாக இருக்கும். கூடவே குகைகளுக்குள் இயற்கையாகவே உருவான வித்தியாசமான அமைப்புகள் நம்மைச் சிலிர்க்கச்செய்யும். ஏதோ ஒரு வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வைத்தரக்கூடிய இடம் இது. ஆந்திரா மாநிலம் தாதிபத்ரி (Tadipatri)க்குச் சென்று, அங்கு இருந்து பஸ் பிடித்து இந்த இடத்துக்குச் செல்லலாம்.

மலை மேல் சொர்க்கம்

திருவனந்தபுரத்தில் இருந்து 55 கி.மீ தொலைவில் இருக்கிறது பொன்முடி. இந்த மலைப்பிரதேசத்துக்குச் செல்லும் 22 கொண்டை ஊசி வளவுகள்கொண்ட சாலை, நம்மை முழுமையாக வசீகரிக்கும். ட்ரெக்கிங் செல்வதற்கும் மலை ஏறுவதற்கும் ஏற்ற சரியான லொக்கேஷன். இயற்கையின் அழகை ஆசுவாசமாக ரசிக்க நினைப்பவர்களும், ரிலாக்ஸ்டாக ஃபீல் பண்ண விரும்புகிறவர்களும் தாராளமாக இங்கே வரலாம். சுற்றுலாத் தலங்களுக்கே உரிய பரபரப்புகள் எதுவும் இங்கே கிடையாது. பொன்முடியில் இருந்து மிக அருகில் உள்ள கல்லார் ஆறும், அதன் மீன்முட்டி அருவியும் தவறவிடக் கூடாத பிக்னிக் ஸ்பாட்கள். பொன்முடியிலேயே பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறிது தூரம் காட்டுக்குள் ட்ரெக்கிங் போனால் உற்சாகக் குளியல் நிச்சயம். இந்தக் காட்டுப் பகுதியில் ஆசிய யானைகள், சிங்கவால் குரங்குகள்... என எண்ணற்ற விலங்குகளும் இருப்பதால் அவற்றையும் ரசிக்கலாம்.

சிவப்பு ராட்சசன்

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இருக்கிறது கண்டிகோடா. மிகச் சிறிய கிராமம்தான் என்றாலும், சாகசப் பிரியர்களுக்கு இது சொர்க்கம். இந்த ஊரை `இந்தியாவின் கிராண்ட் கேன்யான்’ என அழைக்கிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் பென்னார் ஆற்றங்கரைப் பள்ளத்தாக்கு, அந்த அளவுக்கு உலக ஃபேமஸ். இந்தப் பள்ளதாக்குக்குச் சென்று சேர்வதும், இந்த இடத்தின் அழகை முழுமையாக ரசிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல. அதுவே ஒரு கடினமான ட்ரெக்கிங் மற்றும் ஹைக்கிங் அனுபவம். தைரியசாலிகள் பள்ளத்தாக்குக்குள் இறங்கி ஆற்றங்கரை வரை போகலாம். இங்கே ராட்சசன் போல நீண்டு கிடக்கும் சிவப்பு நிறப் பள்ளத்தாக்கை நாள் முழுக்க ரசிக்கலாம். சூரியன் மறைவின்போது அது காட்டும் ஒளிச்சிதறல்கள், நம் கண்களை அகலவிடாது. இதே பகுதியில் பழைமை வாய்ந்ததுடன் சிதிலம் அடைந்த கோட்டை ஒன்றும் மசூதி ஒன்றும் இருக்கின்றன. ஒன்றரை நாட்களில் முழுமையாகச் சுற்றிவிடலாம். ஹைதராபாத்தில் இருந்து ஜம்மாலமடுகுவுக்குச் சென்று, அங்கு இருந்து கண்டிகோடாவை அடையலாம்.