அறிவிப்புகள்
Published:Updated:

ஜூட் நைட் லேம்ப்... ஜோர்!

ஜூட் நைட் லேம்ப்... ஜோர்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூட் நைட் லேம்ப்... ஜோர்!

கிராஃப்ட்

ஜூட் நைட் லேம்ப்... ஜோர்!

‘‘சின்ன ஐடியா, எளிமையான செய்முறை. ஆனா, முடிச்சுட்டுப் பார்த்தா அழகில் அசந்து போவீங்க. அதுதான் இந்த ஜூட் நைட் லேம்ப். ஆர் யூ ரெடி..?’’ -

உற்சாகமாக ஆரம்பித்தார், சென்னை, கொரட்டூர் ‘சாய் கிரியேஷஸ்’ஸின் உரிமையாளர் ஷோபனா ஹரிராஜன்.

தேவையான பொருட்கள்:

காற்றடித்துப் பயன்படுத்தும் பந்து - 1, மீடியம் சைஸ் சணல் பண்டல் - 2, பலூன் - 1, வயரிங் செய்த ஜீரோ வாட் பல்பு - 1, பவுல் - 1, ஃபெவிக்கால், கத்தரிக்கோல், காற்றடிக்கும் பம்ப், பெட்ரோலியம் ஜெல்லி.

செய்முறை:

படம் 1: பந்து முழுவதும் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவும்.

படம் 2: பவுலில் தண்ணீர் எடுத்து, அதில் ஃபெவிக்கால் சேர்க்கவும். 

படம் 3: பெவிக்கால் கட்டிபடாமல் தண்ணீருடன் மிக்ஸ் ஆக, படத்தில் காட்டியுள்ளபடி கையால் கரைக்கவும்.

படம் 4: சணலை ஃபெவிக்கால் கலந்த தண்ணீரில் அமிழ்த்தவும்.

படம் 5: பந்தின் வாய்ப் பகுதியில் இருந்து, சணலைச் சுற்ற ஆரம்பிக்கவும்.

ஜூட் நைட் லேம்ப்... ஜோர்!

படம் 6: படத்தில் காட்டியுள்ளபடி சணலை இறுக்கமாகவும், குறுக்கு நெடுக்காகவும் சுற்றவும்.

படம் 7: பந்து முழுவதும் சணலைச் சுற்றி முடித்ததும், முடிச்சுப் போடவும்.

படம் 8: சணல் சுற்றிய பந்தை 12 மணி நேரம் காயவிடவும்.

படம் 9: அடுத்ததாக, பலூனில் காற்றடித்து முடிச்சிடவும்.

படம் 10: பலூனைச் சுற்றிலும் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவும்.

படம் 11: சணலை ஃபெவிக்கால் தண்ணீரில் அமிழ்த்தி, பந்தில் சுற்றியது போலவே பலூனிலும் இறுக்கமாகவும், குறுக்கு நெடுக்காகவும் சுற்றி, இறுதியில் முடிச்சிடவும்.

படம் 12:
சணல் சுற்றிய பலூனை 12 மணி நேரம் காயவிடவும்.

படம் 13: பந்து காய்ந்ததும் அதன் மேல் பகுதியில் சுற்றிய சணலை கத்தரிக்கோலால் வெட்டி எடுத்து, ஒரு துளையிடவும்.

படம் 14: அதேபோல பலூனில் சுற்றிய சணலையும் பலூனுடன் சேர்த்து மேல் பகுதியில் வெட்டிவிடவும். இதனால் பலூனில் உள்ள காற்று வெளியேறிவிடும். பின்னர் வெட்டிய பகுதி வழியாக பலூனை வெளியே எடுத்து விடவும்.

படம் 15: இப்போது பந்தில் உள்ள ஏர் லாக்கரை திறந்துவிடவும்.

படம் 16: காற்று வெளியேறியதும், ஏற்படுத்திய துளை வழியாக பந்தினை படத்தில் காட்டியுள்ளபடி வெளியே எடுக்கவும்.

படம் 17: நைட் லேம்ப் பேஸ் ரெடி.

ஜூட் நைட் லேம்ப்... ஜோர்!

படம் 18: பலூனைச் சுற்றி செய்துவைத்திருக்கும் சணல் உருண்டையை, படத்தில் காட்டியுள்ளபடி பாதியாக வெட்டவும். லேம்ப்க்கான மூடி தயார்.

படம் 19: நைட் லேம்ப் பேஸில், ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ள துளை யின் வழியாக வயரிங் செய்த குண்டு பல்ப்பை உள்ளே நுழைக்கவும்.

படம் 20:
பல்ப்பில் வயரிங் செய்த பிளக் பாயின்ட்டை பலூனால் செய்த லேம்ப் மூடியில் உள்ள துளையின் வழியாக உள்ளே நுழைத்து, கீழிருந்து மேலாக படத்தில் காட்டியுள்ளபடி எடுக்கவும்.

ஜூட் நைட் லேம்ப்... ஜோர்!

படம் 21: இனி லேம்ப் பேஸையும் லேம்ப் மூடியையும் ஃபெவிக்கால் தடவி ஒன்றோடு ஒன்று ஒட்டவும்.

படம் 22: 
ஜூட் நைட் லேம்ப் ரெடி. இதை அலங்கார விளக்காக தேவைப்படும்போது மட்டும் பயன் படுத்த வேண்டும்.

``இதே முறையில், கலர் நூலிலும் செய்யலாம். உங்க வீட்டின் இரவு சூழ்நிலையை வசீகரமாக்க, சூப்பர் ஐடியா கிடைச்சாச்சா?!’’ என்று புன்னகையுடன் கேட்கிறார் ஷோபனா.

சு.சூர்யா கோமதி ,படங்கள்:பா.காளிமுத்து