Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்க சரியான தருணம் கோடை விடுமுறைதான். அன்றாட பாடப்புத்தக அழுத்தங்கள் இல்லாமல், ஜாலி மூடில் இருக்கும் குழந்தைகளிடம் நான்கு நல்ல புத்தகங்களைக் கையில் கொடுத்தால், மெதுவாக ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்கிவிடலாம். ஆனால், என்ன நூல் வாங்கித் தருவது?

மீசையில்லாத ஆப்பிள் - எஸ்.ராமகிருஷ்ணன் 

நம் எல்லோர் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் இருக்கும். காய்கறிகள், பழங்கள், பால் எனப் பல பொருட்கள் வாங்கி வைத்திருப்போம். தேவைப்படும்போது அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவோம். ஆனால், சில பொருட்களை நீண்ட நாட்களாக ஃப்ரிட்ஜ்லேயே வைத்திருப்போம் அல்லவா? அவை தங்களுக்குள் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த நாவல். பரபரவெனப் படித்துவிடக்கூடிய ஜாலியான நாவல். குழந்தைகள் அன்றாடம் பார்க்கும் பொருட்களே கதைக்குள் வருவதால், உற்சாகமாகி உடனே படித்துவிடுவார்கள்.

விகடன் சாய்ஸ்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை. விலை: ரூ. 25

பாலம்

தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: யூமா வாசுகி

பல்வேறு உலக மொழிகளில் வெளியான சின்னச்சின்னச் சிறந்த கதைகளின் தொகுப்பே `பாலம்'. சுவை குறையாமல் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதைத் தொகுப்பு, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படிக்கும் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அபூர்வ சகோதரர்கள் கதையில், அண்ணன் - தம்பி இருவரும் அன்போடு வாழ்வர். ஒரு மந்திரவாதியின் சாபத்துக்கு ஆளான அண்ணனை, தம்பி மீட்பதே சுவாரஸ்யமான கதை. இதுபோல 33 கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

விகடன் சாய்ஸ்

வெளியீடு: எஸ்.ஆர்.வி தமிழ்ப் பதிப்பகம், திருச்சி-12, விலை: ரூ. 125

பச்சை நிழல் (குழந்தைக் கதைகள்) - உதயசங்கர்

சிறுவர்களுக்காக பல நூல்களை மொழிபெயர்த்த உதயசங்கர் எழுதிய கதைகளின் தொகுப்பு. சிறுவர்கள் சோர்வு இல்லாமல் படிக்கும்விதமான கதைகளை எழுதியிருக்கிறார். `பச்சை நிழல்' கதை, மிகவும் வித்தியாசமானது. தண்ணீர் பஞ்சம் உள்ள ஓர் ஊரில் ரொம்பத் தூரம் சென்று தண்ணீர் எடுத்துவருகிறார்கள் லட்சுமியும் சுகந்தியும். அந்தப் பகுதியில் பசுமையாக ஒன்றுமே கிடையாது. அங்கு முளைத்த ஒரு புல்லை இருவரும் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இந்த நூலில் உள்ள 15 கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இருப்பது இதன் சிறப்பு.

விகடன் சாய்ஸ்

வெளியீடு:என்.சி.பி.ஹெச் அம்பத்தூர், சென்னை. விலை: ரூ.60

குட்டி இளவரசன் - தமிழில் : வெ.ஸ்ரீராம்.

உலகம் முழுக்க அதிகமான குழந்தைகளால் படிக்கப்பட்ட மிக முக்கியமான சிறுவர் நாவல் இது. பிரெஞ்சு நாவலாசிரியர் அந்துவான் து  செந்த்-எக்சுபெரி எழுதிய நூலை, பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார் வெ.ராம். ஒரு சிறுவன், வெவ்வேறுவிதமான கிரகங்களுக்குப் பயணிக்கிறான். அந்தக் கிரகங்கள் பற்றியும், அங்கே அவன் சந்திக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள்கொண்ட மனிதர்கள் பற்றியும் சொல்லப்படும் அழகான பயணக் கதைதான் குட்டி இளவரசன். முழுக்க விநோதங்களும் அற்புதங்களும் நிறைந்துள்ள இந்த நாவல், கூடியசீக்கிரம் திரைப்படமாகவும் வரப்போகிறது.

விகடன் சாய்ஸ்

வெளியீடு: க்ரியா, சென்னை. விலை: ரூ. 110

வாத்து ராஜா - விஷ்ணுபுரம் சரவணன். 

பள்ளியில் படிக்கும் அமுதாவுக்கு, பாட்டி ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையை முழுவதும் சொல்வதற்குள் அமுதா தூங்கிவிடுகிறாள். அதனால் அடுத்த நாள் பள்ளியில் பார்க்கும் பொருட்கள் எல்லாம் கதையில் நடந்ததுபோலவே இருக்கின்றன. அமுதாவும் அவளின் தோழி கீர்த்தனாவும் அவர்களின் புதிய ஃப்ரெண்ட் அணிலும் சேர்ந்து கதையின் முடிவைத் தேடிப் பயணிக்கின்றனர். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள்தான் `வாத்து ராஜா'.

விகடன் சாய்ஸ்

வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை: ரூ.50