Published:Updated:

வெயிலுக்கு ஏற்ற விசிறி!

வெயிலுக்கு  ஏற்ற  விசிறி!
பிரீமியம் ஸ்டோரி
News
வெயிலுக்கு ஏற்ற விசிறி!

கிராஃப்ட்

‘‘கிராஃப்ட்டில் நான் 16 வருஷ சீனியர். கிராஃப்ட் வகுப்புகளும் எடுக்கிறேன். கவலையே இல்லாம வீட்டில் இருந்தே சம்பாதிக்கிறேன்!’’

வெயிலுக்கு  ஏற்ற  விசிறி!

- பெருமையும் மகிழ்வுமாகச் சொல்கிறார் சென்னை, மேடவாக்கம் ‘லதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட்ஸ்'ஸின் உரிமையாளர் லதா பிரகாஷ். இங்கு நமக்கு அவர் கற்றுத்தரவிருப்பது... வெயிலுக்கு ஏற்ற விசிறி.

தேவையான பொருட்கள்: பிளாஸ்டிக் ஃபோர்க் ஸ்பூன்கள் - 24, செவ்வக வடிவ ஹேண்ட்மேட் ஷீட் - 1, மவுன்ட் போர்டு ஷீட் - 1, கிஃப்ட் ரிப்பன்- 3 இன்ச் ஒன்று, ஒரு இன்ச் ஒன்று, அலங்கார லேஸ் - அரை மீட்டர், அலங்கார ரோஸ் - 1, ஸ்டேப்ளர் பின்,  ஃபெவிக்கால், கத்தரிக்கோல்.

செய்முறை:

படம் 1: செவ்வக வடிவ ஹேண்ட் மேட் ஷீட்டை நான்காக மடிக்கவும்.

படம் 2: அதை படத்தில் காட்டியுள்ளபடி பிறை வடிவில் வெட்டவும்.

படம் 3: வெட்டிய பேப்பரைப் பிரித்துப் பார்த்தால், வட்ட வடிவில் இருக்கும். அதனைச் சரிபாதியாக நடுவில் வெட்டவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெயிலுக்கு  ஏற்ற  விசிறி!

படம் 4: அதேபோன்று மவுன்ட் போர்டையும் நான்காக மடித்து, பிறை வடிவில் வெட்டி, கிடைக்கும் வட்டமான மவுன்ட் போர்ட்டில், நடுப்பகுதியில் வெட்டவும். இப்போது அரை வட்ட வடிவிலான 2 ஹேண்ட் மேட் ஷீட், 2 மவுன்ட் போர்ட் ஷீட் இருக்கும்.

படம் 5: வட்டவடிவ ஹேண்ட் மேட் ஷீட், மவுன்ட் போர்ட் ஷீட்களை ஃபெவிக்கால் தடவி ஒன்றோடு ஒன்று ஒட்டிக் காயவிடவும். இப்போது 2 தடிமனான, விசிறிக்கான பேஸ் கிடைத்திருக்கும்.

படம் 6: காய்ந்த பிறகு எக்ஸ்ட்ரா இடங்களை வெட்டவும்.

படம் 7: காய்ந்த பேஸை வெள்ளை நிற மவுன்ட் போர்ட் ஷீட் ஒட்டியுள்ள பக்கமாகத் திருப்பி, படத்தில் காட்டியுள்ளபடி ஸ்பூன்களை ஒட்டவும்.

படம் 8: ஸ்பூன்களை ஒட்டி முடித்த பிறகு மீதமுள்ள மற்றொரு பேஸில் ஃபெவிக்கால் தடவி ஸ்பூன்கள் ஒட்டி யுள்ள பேஸில் ஒட்டிக் காயவிடவும்.

வெயிலுக்கு  ஏற்ற  விசிறி!

படம் 9: இப்போது, ஒரு இன்ச் கிஃப்ட் ரிப்பனை ஸ்பூன்களின் நடுவில்விட்டு, ஒரு ஸ்பூன் விட்டு ஒரு ஸ்பூன் என படத்தில் காட்டியுள்ளபடி சுற்றவும்.

படம் 10: மீதம் இருக்கும் ரிப்பனை, விசிறியைப் பின்புறமாகத் திருப்பி ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.

படம் 11: இதற்கு மேல் 3 இன்ச் ரிப்பனையும் இதே முறையில் ஒட்டி, மீதம் இருக்கும் பகுதியை வெட்டவும்.

படம் 12: 3 இன்ச் ரிப்பனை தேவையான அளவு எடுத்து மீண்டும் சரிபாதியாக வெட்டவும்.

படம் 13: வெட்டிய ரிப்பனை ஸ்பூன்களின் மேல் பகுதியிலும் ஏற்கெனவே ஒட்டியதுபோன்று ஒன்று விட்டு ஒன்று ஒட்டவும்.

வெயிலுக்கு  ஏற்ற  விசிறி!

படம் 14: கற்பனைத்திறனுக்கு ஏற்ப அலங்கார லேஸ், ரோஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

படம் 15: விசிறி தயார்.

``வழக்கமாகச் செய்யும் கிராஃப்ட் பொருட்களைவிட, இப்படி சீஸனுக்கு ஏற்ற கிராஃப்ட் செய்யும்போது, அதற்கான வரவேற்பு இரண்டு மடங்காக இருக்கும் என்பதை டெயில் பீஸாக குறித்துக்கொள்ளுங்கள்!’’ என்று புன்னகையுடன் கூறுகிறார், லதா பிரகாஷ்.

சு.சூர்யா கோமதி, படங்கள்:இரா.யோகேஷ்வரன், ரா.வருண் பிரசாத்