தீபாவளி நெருங்கியாச்சு. ஆசை ஆசையா உங்க குட்டி ஏஞ்சலுக்கு பட்டுப் பாவாடை-சட்டை வாங்கியிருப்பீங்க. என்னதான் கடையில வாங்கினாலும், அதுல நம்மளோட குட்டியூண்டு எக்ஸ்ட்ரா கிரியேட்டிவிட்டியை சேர்த்தா... மெருகு இன்னும் கூடும்தானே! குழந்தைங்களோட டிரெஸ்ல கண்டதையும் டிசைன் பண்ணிட முடியாதே... அவங்களுக்கு புடிக்கணுமேனு நீங்க கேட்குறது புரியுது. பொம்மைகளை விரும்பாத குழந்தைங்க உண்டா? யெஸ்... 'பொம்மி கலெக்ஷன் டிசைன்ஸ்’ பத்திதான் இந்த இதழ்ல சொல்லித் தரப்போறேன். லெட்ஸ் ஸ்டார்ட்!

தேவையான பொருட்கள்: கரும் பச்சை, வயலட், ப்ளூ, வொயிட், ரெட், பிங்க் மற்றும் மஞ்சள் ஃபேப்ரிக் கலர் (உங்களுக்கு விருப்பமான எத்தனை கலரையும் எடுத்துக் கொள்ளலாம்) - தலா ஒரு பாட்டில், நம்பர் 6 கொண்ட ஃபைன் ஆர்ட்ஸ் பெயின்ட் பிரஷ் - 2, மஞ்சள் கலர் கார்பன் ஷீட் - 1, குழந்தைக்கான பச்சை சட்டை மற்றும் வெள்ளைப் பாவாடை - 1 செட், டிரேஸிங் ஷீட் - 1, ஃபேப்ரிக் க்ளூ - 1 பாட்டில், துணியில் ஒட்டக் கூடிய கலர்ஃபுல் லேஸ் - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளைப் பாவாடை யின் பார்டருக்கு மேல், மஞ்சள் கலர் கார்பன் ஷீட்டை வைத்து, அதன் மீது டிரேஸிங் ஷீட்டை வைத்து, படத்தில் இருப்பது போன்ற பொம்மை உருவங்களை வரையுங்கள். அது, பாவாடையில் பதிந்து விடும். பிறகு, சிவப்பு ஃபேப்ரிக் கலரில் பிரஷ்ஷை நனைத்து, அந்த பொம்மை உருவத்தின் பாவாடை மற்றும் சட்டை முழுக்க கலர் அடியுங்கள் (படம் 1). பொம்மை போர்த்தியிருக்கும் ஷாலுக்கு ப்ளூ கலர் அடியுங்கள் கை, கால், கண், மூக்கு, வாய் என பொம்மையின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒவ்வொரு கலர் கொடுங்கள் (படம் 2).

இதேபோல விருப்பமான உருவங்களை வரைந்து கலர் அடித்து முடித்தவுடன், லேஸ்களின் அடியில் க்ளூ தடவி, அவற்றை பொம்மைகளின் இரண்டு பக்கத்திலும் படத்தில் காட்டியுள்ளது போல ஒட்டிவிடுங்கள் (படம் 3). அடுத்தடுத்து இப்படி படங்களை வரைந்து, லேஸ்களை ஒட்டி பாவாடையின் கீழ்ப்பகுதி முழுக்க அலங்கரியுங்கள். அடுத்து, ஒரு வெள்ளை துணியில் இதேபோல பொம்மை வரைந்து கலர் அடித்து, அந்தத் துணியை அழகாக வெட்டிஎடுத்து, சட்டையில் சிறிது டெக்கரேஷனோடு ஒட்டிவிடுங்கள் (படம் 4).

வரையும்போது ஏதோ குழந்தைத்தனமாகத் தோன்றினாலும், துணியை உங்கள் குழந்தைக்கு போட்டுப் பார்க்கும்போது, கிராண்டாக தெரியும். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உடையாகவும் இந்த பொம்மி கலெக்ஷன் டிசைன்ஸ் இருக்கும்!

- இன்னும் கத்துக்கலாம்...