முன்திட்டமிடல் முக்கியம்!

நண்பரின் மகள் இன்டர்வியூக்காக ஹைதராபாத் செல்ல வேண்டி இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் எல்லாம் போட்டு வைத்துவிட்ட நண்பர், அங்கே இருக்கும் தன்னுடைய மைத்துனி வீட்டில் மகளை தங்க வைக்கவும் முடிவு செய்திருந்தார். ஆனால், இது தொடர்பாக முன்கூட்டியே மைத்துனிக்கு தகவல் தரவில்லை. இன்டர்வியூ நாளில் அங்கே போய் இறங்கிய நண்பரின் மகள், சித்திக்கு போன் செய்தால்... 'தெரிந்தவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவசரமாக வெளியூர் கிளம்பி வந்துவிட்டேனே' என்று பதில் வந்தது. மாலை ஏழு மணி வரை திண்டாடியவள், தன்னுடன் ஹாஸ்டலில் ஒன்றாக படித்த தோழி, ஹைதராபாத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து, அவளுக்கு விஷயத்தைச் சொல்ல, தோழியின் அப்பா வந்து அவளை அழைத்துச் சென்றார். அவரும் இல்லை என்றால்?

எதிலுமே முன் திட்டமிடல் என்பது இல்லாமல் போனால், இந்த கதிதான்!

- கி.மஞ்சுளா, திருவாரூர்

இது நல்ல யோசனை!

குஜராத் செல்வதற்காக ரயில் ஏறினோம். அருகில் அமர்ந்து வந்த கல்லூரி மாணவர், தன் புத்தகத்தை மறந்து வைத்துவிட்டு, திருப்பூரில் இறங்கிவிட்டார். அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது, மாணவருடைய பெயரும், அவருடைய மொபைல் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. உடனே என் கணவர் அந்த நம்பருக்கு போன் செய்து, அடுத்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் புத்தகத்தை ஒப்படைப்பதாக அந்த மாணவரிடம் தெரிவித்தார். அதேபோல் ஒப்படைத்துவிட்டு, நாங்கள் குஜராத் சென்றுவிட்டோம். இரண்டு நாட்கள் கழித்து போன் செய்த அந்த மாணவர், புக் கிடைத்துவிட்டதாகச் சொல்லி நன்றி தெரிவித்தார்.

நம் உடைமைகளில் செல்போன் நம்பரைக் குறித்து வைப்பது, அவற்றை நாம் தவறவிடும்பட்சத்தில் மீண்டும் கிடைக்கப்பெற வழிவகை செய்யக் கூடும்தானே..?!

- முகிலா கதிரேசன், குஜராத்

மலிவு விலை... மனம் தடுமாறுகிறதா?

'தள்ளுபடி விலையில் விற்பனை’, 'இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’, 'இன்னும் சில நாட்களுக்கே இந்த ஆஃபர்’

- இப்படியான கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றை நம்பி, 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள (!) டிஜிட்டல் கேமரா ஒன்றை, 4 ஆயிரம் ரூபாய்க்கு சென்னையின் பெரிய்ய்ய்ய பஜார் ஒன்றில் வாங்கினார் என் கணவர். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று எங்களுடன் அந்த கேமராவும் பயணித்தது. ஆனால், ஒவ்வொரு இடத்திலும் ஓரிரு படங்களை மட்டும் எடுத்துவிட்டு, அது படுத்துக் கொண்டது. ஒவ்வொரு தடவையும் கம்பெனியின் சர்வீஸ் சென்டருக்குத் தூக்கிக் கொண்டு ஓடினால், பேட்டரி லீக், பேட்டரியின் பவர் போதாது, கார்டு (சிப்) சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, ஒவ்வொன்றாக மாற்றச் சொன்னார்கள். ஆனால், அந்தக் கேமராவுக்கு ஏற்ற கார்டைத் தேடி கடை கடையாக அலைந்தும் எங்குமே கிடைக்கவில்லை.

'இந்த கேமராவெல்லாம் பழைய மாடல் சார். அதான் தள்ளு படியில தள்ளிவிடறாங்க. பல பேரு இப்படித்தான் ஏமாந்து போய் வாங்கிட்டு, கடைசியில நொந்து போய் தூக்கி மூலையில போட்டுடறாங்க’ என்று எலெக்ட்ரானிக்ஸ் கடைக்காரர் ஒருவர் சொன்னபோதுதான் புரிந்தது, நாங்கள் ஏமாந்த கதை.

நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்பத்தான் பொருளின் தரம் இருக்கும். 'தள்ளுபடி ஆசை'யில் மனம் தடுமாறக்கூடாது என்ற புத்தி இப்போதுதான் வந்திருக்கிறது!

- ஏ. உமாமகேஸ்வரி, சென்னை-92

பூவுக்கும் வேஷம்!

சமீபத்தில் சேலத்திலிருந்து கடலூருக்குப் பயணம் செய்தேன். வழியில் உளுந்தூர்பேட்டையில் சில நிமிடங்கள் பேருந்து நிற்க, சாலையோரக் கடை ஒன்றில் பச்சைக் காம்பும், வெள்ளைச் சிரிப்புமாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த முல்லைச்சரங்கள் கண்களைப் பறித்தது. ஆசையாக ஐந்து முழம் வாங்கினேன். வாழை இலையில் வைத்து மடித்துக் கொடுத்தார் பூக்காரப் பெண். அவசரமாக 'பேக்’குக்குள் வைத்துக்கொண்டு, பேருந்து ஏறினேன்.

வீடு வந்து சேர்ந்ததும் பூவை வெளியே எடுத்தால், வெள்ளை முல்லையில் பச்சை படர்ந்திருந்தது. புரியாமல் 'பேக்’குக்குள் பார்த்தால், அதில் இருந்த துணிகள், பேப்பர்கள், முக்கிய கோப்புகளிலும் பச்சை. மேலும் குழம்பி, முல்லைச் சரத்தை எடுத்துப் பார்த்தால், இப்போது என் கைகளிலும் பச்சை. புரிந்தது. ஃப்ரெஷ்ஷாகத் தெரிவதற்காக முல்லைப்பூவின் காம்பில் பச்சை சாயம் தெளித்திருக்கிறார்கள். பூக்களுக்கும் செயற்கை சாயம் பூசும் இந்த வியாபார தந்திரத்தை என்னவென்று நோக..?!

- பாத்திமா, நெல்லிக்குப்பம்