Published:Updated:

வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!

வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!
பிரீமியம் ஸ்டோரி
வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!

கிராஃப்ட்

வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!

கிராஃப்ட்

Published:Updated:
வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!
பிரீமியம் ஸ்டோரி
வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!
வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!

‘‘பழைய, பயன்படுத்தாத ஜீன்ஸ் பேன்ட்டுகள் பலரது வீடுகளிலும் இருக்கும். அவற்றை வீணாக்காமல், வீட்டை அழகுபடுத்தும் பொருட்கள் செய்யலாம்’ என்கிறார், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள ‘சித்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெய்லரிங் அண்ட் ஆர்ட்ஸ் - கிராப்ட்ஸ்'ஸின் உரிமையாளர் சித்ரா. தன் டெய்லரிங் வகுப்புகளில் வீணாகும் துணிகளில் பல கலைப்பொருட்கள் தயாரித்து வரும் இவர், இங்கு நமக்குக் கற்றுத் தருவது, ஹேங்கிங் ஜீன்ஸ் பென் ஹோல்டர்.

தேவையான பொருட்கள்: பழைய ஜீன்ஸ் - 1, லேஸ் ரோப் - 3 மீட்டர், மரக்கம்பு, கத்தரிக்கோல், சாக்பீஸ், இன்ச் டேப், ஃபெவிக்கால், நூல்கண்டு.

செய்முறை:

படம் 1: ஜீன்ஸ் பேன்ட்டின் கால் பகுதியை தேவையான உயரத்துக்கு வெட்டவும்.

படம் 2: கால் பகுதியின் ஓரங்களை படத்தில் காட்டியுள்ளபடி வெட்டவும்.

படம் 3: பென் ஹோல்டருக்கான பேஸ் ரெடி.

படம் 4: பேஸின் மேல் பகுதியில் கம்பு கோப்பதற்கு ஏதுவாக ஜீன்ஸ் துணியை படத்தில் காட்டியுள்ளபடி மடித்துத் தைக்கவும்.

படம் 5: பேஸின் மற்ற மூன்று பகுதியையும் படத்தில் காட்டியுள்ளபடி பின்புறமாக மடித்துத் தைக்கவும்.

வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம் 6: வெட்டி எடுத்ததுபோக மீதமுள்ள பேன்ட்டில், படத்தில் காட்டியுள்ளபடி சாக்பீஸால் படம் வரையவும்.

படம் 7: எத்தனை துளைகள் தேவையோ அத்தனை பாக்கெட்டுகள் வெட்டி எடுக்கவும்.

படம் 8: அதன் ஓரங்களை மடித்துத் தைக்கவும்.

படம் 9: ஓரங்கள் மடித்த முக்கோண வடிவ பாக்கெட்டுகளை ஜீன்ஸ் பேஸின் மேல் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி தைக்கவும்.

படம் 10: மடித்துத் தைத்த பேஸின் துளையில் மரக்கம்பை நுழைக்கவும்.

வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!

படம் 11: ஹோல்டரை சுவரில் மாட்டுவதற்கு ஏதுவாக கம்பின் இரு முனைகளிலும் லேஸ் ரோப்பை முடிச்சிடவும்.

படம் 12:
கற்பனைக்கு ஏற்ப அலங்கரிக்கவும்.

படம் 13: சூப்பரான பென் ஹோல்டர் தயார்!

``இதேபோன்று பவுச், குஷன் கவர், டேபிள் கிளாத் என...கற்பனையைத் தட்டிவிட்டு, கலைப்பொருட்கள் செய்து அசத்தலாம்!’’ என்று உற்சாகப் படுத்துகிறார் சித்ரா.

சு.சூர்யா கோமதி, படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்