தன் துணையைக் கரம்பிடித்த தருணம், காலம் முழுக்க பசுமை மாறாமல் மனதில் நிற்கும். என்றாலும், அத்தருணத்தை வருடங்கள் பல கடந்தும் கண்களுக்கும் விருந்தாக்குவது... புகைப்படங்கள்.

‘ஸ்மைல் ப்ளீஸ்’ என ‘க்ளிக்’ செய்வதைத் தாண்டி, பல பரிணாமங்களில் வளர்ந்துகொண்டு வருகிறது திருமண புகைப்படக் கலை. வேகமெடுத்து வளர்ந்துவரும் அக்கலையை தனது தொழிலாகக் கையிலெடுத்து கலக்கிவரும் சென்னையைச் சேர்ந்த ‘ஸ்மைல் அண்ட் ட்ரீம்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் புகைப்படக் கலைஞர் ஸ்ரீநிவாஸ், ‘‘படிப்பை முடிச்சுட்டு அமெரிக்காவில் ஐ.டி துறையில வேலை செஞ்சுட்டே, வெடிங் போட்டோகிராஃபியை பார்ட் டைமா பார்த்துட்டு இருந்தேன். ஏதாச்சும் ஒண்ணுல முழுசா கவனம் செலுத்தணும்னு முடிவு செஞ்சு, ஐ.டி வேலையை விட்டுட்டு இதுலயே இறங்கிட்டேன்’’ எனும் ஸ்ரீநிவாஸ் இத்துறையின் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறார்...

‘‘வெடிங் போட்டோகிராஃபியில், மணமக்களை நிக்க வெச்சு, சிரிக்கச் சொல்லி போட்டோ எடுக்குற காலம் எல்லாம் மலையேறிடுச்சு. மேலைநாடுகளில் பிரபலமான ‘கேண்டிட் போட்டோகிராஃபி’ இப்போ நம்ம நாட்டிலும் ட்ரெண்ட் ஆகிட்டு வருது. கேண்டிட் போட்டோகிராஃபியைப் பொறுத்தவரைக்கும், நம்ம எடுக்குற போட்டோக்களை, முகூர்த்த நாளின் விடியலில் இருந்து இரவு வரை ஒரு கதை மாதிரி உருவாக்கணும். கிட்டத்தட்ட போட்டோ ஜர்னலிசம் வேலைமாதிரி. இந்தக் கதையில, மொத்தக் குடும்பம், உறவினர்கள் மற்றும் திருமணநாளுக்கே உரிய மகிழ்ச்சி, குறும்பு, நெகிழ்ச்சினு அந்த நாளின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் எல்லாத்தையும் தவறாம படம் எடுப்பதில்தான் புகைப்படக் கலைஞரின் திறமை அடங்கியிருக்கு. திருமணம் முடிஞ்சு 10, 15 வருஷம் கழிச்சு கல்யாண ஆல்பத்தை புரட்டிப் பார்க்கும்போது, அந்த நாள் அப்படியே இந்த நிமிடங்களில் நடக்குறமாதிரி மனசுல ஓடணும். அப்பதான் அது பக்கா கேண்டிட் ஷாட்ஸ்.

இப்போ எல்லாரும் விரும்புறது கேண்டிட் ஷூட்தான் என்றாலும், அதுல மட்டுமே முழுகவனம் செலுத்தாம, போர்ட்ரைட் புகைப்படங்களும் எடுக்கணும். ஏன்னா, முன்னாடி மாதிரி கல்யாணம்னா ஒரு கூரைப் புடவை, வேஷ்டி - சட்டை, வரவேற்புக்கு ஒரு டிசைனர் புடவைனு இப்போ எந்தக் கல்யாணமும் நடக்கிறதில்ல. டிரெஸ் டிசைனரை வெச்சு டிசைன் செய்துனு கல்யாணப் பொண்ணுக்கும், பையனுக் கும் மட்டும் இல்லாம ஒட்டுமொத்த குடும்பத்துக்கே திருமண ஆடைகளுக்கு மட்டும் லட்சக்கணக்குல செலவு செய்றாங்க. அதனால ஒரு நல்ல பேக்கிரவுண்ட் வெச்சு கல்யாண டிரெஸ்ல, பொண்ணு, பையனோட மொத்தக் குடும்பத்தையும் அழகா, விதம்விதமான போர்ட்ரைட் ஷூட் பண்ணித்தரலாம். தங்களோட ஆடை, ஆபரணங்கள்னு அந்த நாளுக்கான அவங்களோட அத்தனை மெனக்கெடல்களையும் ஃப்ரேமில் கொண்டுவந்து நினைவுப் பரிசாக்குறது, புகைப்படக் கலைஞரின் பொறுப்பு.

கேண்டிட் ஷூட் தவிர, இண்டோர், அவுட்டோர் என ப்ரீ வெடிங் மற்றும் போஸ்ட் வெடிங் ஷூட்டும் இப்போதைய ஹாட் ட்ரெண்ட். இதுல நல்ல ரம்மியமான இயற்கை காட்சி நிறைந்த இடம், திருமண ஜோடிகள் முதன் முதலில் சந்தித்துக்கொண்ட இடம், காதலிச்ச காலத்துல அடிக்கடி சந்திச்ச இடம்னு அவங்க விருப்பத்துக்கு ஏத்தமாதிரி அவுட்டோர் ஷூட் பண்ணலாம். இதுலயும் இப்போ புதுசா சில கான்செப்ட்டுகள் உருவாகியிருக்கு.

அதாவது, ‘ஏதாச்சும் வித்தியாசமா பண்ணலாமே..?’னு கேட்கிற வித்தியாச விரும்பிகளுக்கு ஏத்தமாதிரி, நீருக்கு அடியில் எடுக்குற அண்டர் வாட்டர் போட்டோகிராஃபி, ஸ்போர்ட்ஸ் விரும்பிகளுக்கான கிரிக்கெட், கோல்ஃப் மாதிரியான கான்செப்ட் போட்டோ ஷூட்னு இதுமாதிரி ஏதாச்சும் பிரத்யேகமா பண்றதுல இந்த தலைமுறை ரொம்ப ஆர்வமா இருக்காங்க.

அதேமாதிரி இண்டோர் ஷூட்னு எடுத்துக்கிட்டா வீட்டிலேயே ஒரு ‘ரொமான்டிக் டே’ கான்செப்ட்ல எடுக்கிறது தான் பரவலா நடந்திட்டு இருக்கு. இல்லைன்னா ஒரு ரிசார்ட், ரிச்சான ஹோட்டல், அதுவும் இல்லைன்னா போட்டோ ஷூட்டுக்காகவே பங்களா டைப் வில்லா மாதிரியான இடங்களை ஒரு நாள் வாடகைக்கு எடுக்கலாம். நம்ம ரசனை மற்றும் கான்செப்ட்டுக்கு ஏத்தமாதிரி பாரம்பர்ய வீடு அல்லது மாடர்ன் வீடுன்னு வாடகைக்கு எடுத்து ஷூட் பண்ணிக்குற ஆப்ஷனும் இருக்கு.

ப்ரீ வெடிங் போட்டோ ஷூட் மற்றும் போஸ்ட் வெடிங் போட்டோ ஷூட் செய்வதும் ரகளையான அனுபவம். இதுக்கு பொண்ணும் பையனும் முன்கூட்டியே ஷூட்டுக்கான கான்செப்ட் மற்றும் கான்செப்ட்டுக்குப் பொருத்தமான ஆடைகளைத் தேர்வு செய்றது, ஷூட்டுக்கான நேரம் பகலா, ராத்திரியானு இதுமாதிரியான விஷயங்களை முன்கூட்டியே புகைப்படக் கலைஞரிடம் பேசி முடிவு செய்றதுனு திட்டமிடல் மற்றும் நல்ல புரிதலோட போட்டோ ஷூட்டை நடத்தினா, பலன் உங்கள் புகைப்படங்களில் தெரியும்!’’

- தன் அனுபவத்தில் உத்தரவாதம் அளிக்கிறார் ஸ்ரீநிவாஸ்.

- இந்துலேகா.சி