தன்னம்பிக்கை
Published:Updated:

கல்லிலே கலைவண்ணம்!

கல்லிலே கலைவண்ணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கல்லிலே கலைவண்ணம்!

கிராஃப்ட்

கல்லிலே கலைவண்ணம்!

பார்த்தவுடன் தன் அழகில் ஈர்க்கும் கூழாங் கற்களை, தன் கைவண்ணத்தில் மேலும் அழகாக்கி ஒரு கலைப்பொருளாக காட்சிப்படுத்துகிறார், ராஜபாளையத்தைச் சேர்ந்த ரம்யா.. இதோ, இவர் செய்துகாட்டும் கூழாங்கல் கிராஃப்ட்டுகள்...

கல்லிலே கலைவண்ணம்!

தேவையானவை :

கூழாங்கல் (அலங்கார மீன் விற்பனையகம் அல்லது செடிகள் விற்பனையகத்தில் கிடைக்கும்) ஃபேப்ரிக் கலர், தேவையான அளவுகளில் பெயின்ட், பிரஷ், பென்சில்.

செய்முறை :

1. முட்டையிலிருந்து வெளிவரும் கோழிக்குஞ்சு செய்வதற்கேற்ற முட்டை வடிவ கூழாங்கல்லை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

2. கூழாங்கல்லை மூன்று பாகமாக பிரிக்கும் வண்ணம் வட்ட வடிவத்தில் இல்லாமல், பென்சிலால் ஸிக்ஸாக் வடிவத்தில் வரைந்துகொள்ளவும். இது முட்டை உடைந்த தோற்றத்தைத் தரும்.

3. படத்தில் காட்டியுள்ளபடி இரு கண்கள் மற்றும் மூக்கு வரைந்து கொள்ளவும்.

4. மூன்று பகுதியாக பிரித்த கூழாங்கல்லின் மேல் மற்றும் அடிப்பகுதியில் வெள்ளை நிற பெயின்ட்டை அடித்துக்கொள்ளவும்.

கல்லிலே கலைவண்ணம்!

5. மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பெயின்ட்டை கலந்துகொள்ளவும்.

6.  கல்லின் நடுப்பகுதியில் கண் மற்றும் மூக்கு தவிர மற்ற இடங்களில் மஞ்சள் நிறம் அடித்துக்கொள்ளவும்.

7. பென்சிலால் வரைந்த ஸிக்ஸாக் கோட்டின் மேல் கறுப்பு பெயின்ட்டால் வரைந்துகொள்ளவும்.

8. சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தை சேர்த்து பிங்க் நிறமாக கலந்துகொள்ளவும்.

9. பிங்க் நிறத்தை பிரஷ்ஷால் தொட்டு மூக்குக்கு அடிக்கவும்.

10. அடுத்ததாக, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் சேர்த்து, ஆரஞ்சு வண்ணமாக குழைத்துக் கொள்ளவும்.

11. ஆரஞ்சு நிறத்தை நடுப்பகுதியில் உள்ள மஞ்சள் நிற கோழிக்குஞ்சின் உடல் பகுதியில் ஆங்காங்கே அடுக்கடுக்கான கோடுகளாக தீட்டவும். இது கோழிக்குஞ்சின் இறகுப் பகுதி.

12. கடையில் ரெடிமேடாக கிடைக்கும் இது போன்ற பறவைக் கூடுகள் அல்லது தேங்காய் நாரிலிருந்து நீங்களே இதுபோன்ற கூட்டை உருவாக்கிக்கொள்ளலாம்.

‘லேடி பேர்டு’ வண்டு

1. ‘லேடி பேர்டு’ வண்டு  செய்வதற்கேற்ற வடிவத்தில் கூழாங்கல்லை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அது முழுவதும் சிவப்பு வண்ணம் தீட்டவும்.

2. கல்லின் கால் பகுதியில் கறுப்பு வண்ணம் தீட்டவும். இது வண்டின் முகம்.

3.
கல்லின் ஒரு பகுதியை மேல் பாகமாக வைத்து, அதனை கறுப்பு நிறக் கோட்டால் இரண்டு பகுதியாக பிரிக்கவும்.

கல்லிலே கலைவண்ணம்!

4. கோட்டின் இரு பகுதிகளிலும் படத்தில் உள்ளதுபோல் ஆங்காங்கே கறுப்பு புள்ளி வைத்துக்கொள்ளவும்.

5. முகத்தில் வெள்ளை நிற பெயின்ட்டால் கண் மற்றும் வாய் வரைந்துகொள்ளவும்.

6. அழகிய ‘லேடி பேர்டு’ வண்டு ரெடி!

தேனீ

‘ஹனி பீ' செய்வதற்கேற்ற சற்று தட்டையாக அதேசமயம் உருளையாக உள்ள ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

1 ‘லேடி பேர்டு’ வண்டு போன்றே, இதற்கும் முகத்துக்காக கால் பகுதியை விட்டுவிட்டு மற்ற இடங்களில் படத்தில் உள்ளதுபோல் வரிவரியாக கோடுகள் வரையவும்.

2. முகத்துக்கான கால் பகுதியில் கறுப்பு வண்ணம் தீட்டவும்.

கல்லிலே கலைவண்ணம்!

3. வரிவரியாக போட்ட கோடுகளில் ஒன்று விட்டு ஒன்றில் கறுப்பு நிறத்தை அடிக்கவும்.

4. மற்ற பகுதியில் மஞ்சள் நிறம் தீட்டவும்.

5. இப்போது முகத்தில் வெள்ளை நிறத்தை தொட்டு கண் மற்றும் வாய் வரைந்து கொள்ளவும்.

6 படத்தில் உள்ளது போல் தேனீயின் முதுகுப் பகுதியில் அதாவது மேல் பகுதியில் வெள்ளை நிறத்தால் இறகு வரைந்து அதற்கு கறுப்பு நிறத்தில் அவுட்லைன் கொடுக்கவும்.

இந்துலேகா.சி, படங்கள்:தி.குமரகுருபரன்