Published:Updated:

பிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்!

பிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்!

கிராஃப்ட்

பிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்!

‘‘அவள் விகடனில் வந்த கிராஃப்ட் பக்கங்களைப் பார்த்துதான் நிறைய கிராஃப்ட் வேலைகள் செய்யக் கத்துக்கிட்டேன். நாளடைவில் இதுவே என் தொழிலா மாறிடுச்சு. இப்போ கிராஃப்ட் மூலம் எனக்கான மாத வருமானத்தை ஈட்டிக்கிறேன்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த தீபலட்சுமி, யூஸ் அண்ட் த்ரோ கப்பில் நைட் லேம்ப் செய்யக் கற்றுத்தருகிறார் இங்கு.

தேவையானவை: யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் கப்புகள் - 50, சீரியல் பல்ப் செட் - 1, மெழுகுவத்தி, தீப்பெட்டி, ஸ்டாப்ளர், இரும்புக் கம்பி.

படம் 1: இரும்புக் கம்பியை எரியும் மெழுகுவத்தியில் காட்டி சிறிது சூடாக்கிக்கொள்ளவும்.

படம் 2: 
யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி (எத்தனை வேண்டுமானாலும் அடுக்கிக்கொள்ளலாம்), சூடான இரும்புக்கம்பியால் ஒருசேர துளையிட்டுக்கொள்ளவும்.

படம் 3: துளையிட்ட கப்புகளை பக்கவாட்டில் ஒன்றுடன் ஒன்று இணைத்து படத்தில் காட்டியுள்ளபடி ஸ்டாப்ளரால் இணைத்துக்கொள்ளவும்.

படம் 4: படத்தில் காட்டியுள்ளபடி டம்ளர்களை பக்கவாட்டில் இணைத்துக் கொண்டே வரவும்.

படம் 5: தேவையான அகலத்துக்கு கப்புகளை இணைத்த பின், இரண்டு முனைகளையும் ஒன்று சேர்த்து ஸ்டாப்ளரால் வட்ட வடிவில் இணைக்கவும்.

படம் 6: இணைக்கும்போது டம்ளர்கள் ஒன்றோடு ஒன்று இணையில்லாமல் இருந்தால் சரிசெய்த பின் இணைக் கவும். இப்போது லைட் லேம்ப்க்கான முதல் வரிசை தயார்.

பிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படம் 7: முதல் வரிசை டம்ளர்களின் மீது, படத்தில் காட்டியுள்ளபடி டம்ளர்களை அடுக்கி ஸ்டாப்ளரால் இணைத்து இரண்டாவது வரிசையை ஆரம்பிக்கவும்.

படம் 8: இறுதியில் ஸ்டாப்ளரால் இணைத்து முடிக்கவும்.

பிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்!

படம் 9: இதேபோன்று மூன்றாவது வரிசையையும் தயார் செய்துகொள்ளவும். ஒவ்வொரு வரிசையிலும் டம்ளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

படம் 10: இவ்வாறு டம்ளரின் எண்ணிக்கை ஒன்று வரும்வரை வரிசைகளை இணைத்துக்கொண்டே வந்தால், லைட் லேம்ப்புக்கான பேஸ் ரெடி.

படம் 11: சீரியல் பல்பை நைட் லேம்பில் இணைத்துள்ள டம்ளர்களில், நடு டம்ளரில் இருந்து பொருத்த ஆரம்பிக்கவும்.

படம் 12: டம்ளர்களில் இருக்கும் துளையின் வழியாக ஒவ்வொரு டம்ளரிலும் சீரியல் பல்பை பொருத்தவும். பிளக் பாயின்ட்டில் கனெக்‌ஷன் கொடுக்கவும்.

படம் 13: அழகான நைட் லேம்ப் ரெடி.

``விலைகுறைந்த, சமயங்களில் வீண் என வீசப்படும் பொருட்களால் ஆர்ட் பொருட்கள் செய்து வீட்டை அழகுபடுத்தலாம் என்பதற்கு, இந்த நைட் லேம்ப் நல்ல உதாரணம்தானே?!’' என்று புன்னகையுடன் கேட்கிறார் தீபலட்சுமி.

 சு.சூர்யா கோமதி, படங்கள்: தி.குமரகுருபரன்