வாசகிகள் பக்கம்
ஓவியங்கள்: சேகர்

உடல் இளைக்க அம்மி!

நகரத்தில் வசிக்கும் தோழி வீட்டுக்குச் சென்றிருந்தேன், வீட்டில் மிக்ஸி இருந்தும் சமையலுக்குத் தேவையான விழுதுகளை அம்மியிலேயே அரைத்தாள். 'ஏன்?' என்று கேட்டபோது, ''மிக்ஸியில் அரைப்பதால் சமையல் வேலை சீக்கிரம் முடிந்து, பகல் பொழுதைத் தூங்கியும், டி.வி. பார்த்தும் கழிப்பதால் உடல் எடை கூடுவதோடு, சோம்பேறியாகவும் ஆகிவிட்டேன். அதனால் அவசரமான சமையலுக்கு மட்டும் மிக்ஸியைப் பயன்படுத்துவேன். சமையலுக்கு ரெடிமேட் பொடிகளை பயன்படுத்தாமல் மசாலாவுக்கு அவ்வப்போது அம்மியில் விழுது அரைத்தே பயன்படுத்துவேன். இப்போது என் உடல் எடையும் சீராக இருப்பதோடு, அம்மியில் அரைக்கும்போது உடற்பயிற்சி செய்வது போன்ற புத்துணர்ச்சியும் கிடைக்கிறது!'' என்றாள்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சௌகரியப்படாது என்றாலும், வீட்டில் இருக்கும் பெண்கள் இதைப் பின்பற்றலாம்தானே?!

- பா.முத்துமாணிக்கம், பில்லங்குழி

வண்டு தாம்பூலம்!

வீட்டு விசேஷத்தின்போது, வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பதற்காக மஞ்சள் மற்றும் குங்குமம் டப்பிகள் இரண்டு டஜன்கள் வாங்கினேன். வீட்டுக்கு வந்து பார்த்தால், எந்த டப்பியைத் திறந்தாலும் வண்டு வைத்திருந்தது. நல்லவேளை, அடுத்தவர்களிடம் கொடுக்கும் முன்பாக சோதித்ததால், 'ம்... வீட்டுல கிடந்த பழசையெல்லாம், தானம் பண்ணிட்டா' என்று தேவையில்லாமல் அவர்களின் வாயில் சிக்கி வறுபடுவதில் இருந்து தப்பினேன்.

பேக்கிங் மட்டும் பளிச் என்று செய்து, பழைய சரக்கை விற்கும் கடைக்காரர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை இந்த அனுபவம் மூலமாக புரிந்து கொண்டேன். வீட்டுத் தேவைக்கு வாங்கினாலும் சரி... மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கினாலும் சரி... மஞ்சள், குங்கும டப்பிகளை திறந்து பார்த்து சோதித்துவிடுவது நல்லது!

- வசுமதி கண்ணன், சென்னை-53

ஃப்ரீ ஹேர் பிராப்ளம்!

அன்று நான் சென்ற பேருந்தில், ஓர் இளம் பெண் தன் நீண்ட கூந்தலை 'ஃப்ரீ ஹேர்’ஆக விரித்துவிட்டுஇருந்தார். அவர் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் அவசரமாக இறங்க முயன்றபோது, ஸீட்டில் அமர்ந்திருந்த ஒரு குழந்தையின் கம்மலில், அந்த ஃப்ரீ ஹேர் மாட்டி இழுக்க, குழந்தை அழுது துடித்தது. அப்பெண்ணும் பதற்றமாகிவிட்டார். அதற்குள் பஸ்ஸில் ஒரே கூச்சல். பஸ் நிறுத்தப்பட்டு, அருகில் இருந்த பெட்டிக்கடையில் பிளேடு வாங்கி, அவர் முடியை கட் செய்த பிறகே, குழந்தையின் அழுகை நின்றது. சற்று முன் வரை நீள கூந்தலால் பலருடைய பார்வையை ஈர்த்த அப்பெண், கடைசியில் அனைவரின் ஏச்சுக்கும், குழந்தையின் தாய் விட்ட சாபத்துக்கும் ஆளானது சோகம். 'ஃப்ரீ ஹேர்’ விஷயத்தில் 'கேர்லெஸ்’ ஆக இருக்காதீர்கள் தோழிகளே!

- எஸ்.கே. விஜி, சேலம்

சிக்கலைத் தீர்க்கும் பாரம்பரியம்!

நான், என் கணவர், எங்கள் குடும்ப நண்பர், அவருடைய மனைவி, 10 வயது மகள் என அனைவரும் குருவாயூர் சென்றிருந்தோம். சிறுமி ஜீன்ஸும், ஷர்ட்டும் அணிந்திருந்ததால், கோயில் காவலாளி அவளை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அந்தக் கோயிலின் நடைமுறைகள் படி... வேட்டி, சேலை, பாவாடை, சட்டை போன்ற உடைகளுக்குத்தான் அனுமதி. அனைவரும் செய்வதறியாமல் நிற்க, எனக்கு ஒரு யோசனை கிடைத்தது. என் கணவர் தோளில் இருந்த துண்டை அவள் இடுப்பில் கட்டி, அங்கவஸ்திரம் ஒன்றை அவளை உடுத்தச் செய்து, அவளை உள்ளே அழைத்துச் சென்றோம். கோயிலின் விதிகளைக் குறை செல்வதற்குப் பதில், கோயிலுக்குச் செல்லும்போதாவது பாரம்பரிய உடையில் சென்றால், இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்தானே!

- லலிதா ராமன், மும்பை