Published:Updated:

நினைவுகளில் என்றென்றும்...

வெடிங் போட்டோகிராஃபி

பிரீமியம் ஸ்டோரி

ரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகர். அதுவும், ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்க, புது வாழ்வுக்குள் புகும் திருமணத் தருணத்தை, காலம் கடந்தும் நம் நினைவுக்குள் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் திருப்பிப் பார்க்கவைக்கும் வல்லமை ஒரு புகைப்படத்துக்கு மட்டும்தானே சாத்தியம்! திருமண ஆல்பத்தில் அப்படியொரு படத்தை இடம்பெறச் செய்வதே புகைப்படக் கலைஞனின் ஆகப் பெரும் சவால்.

நினைவுகளில் என்றென்றும்...
நினைவுகளில் என்றென்றும்...

தம்பதியர் இருவரையும் கைகூப்பி நிற்க வைத்து, ஃபுல் லென்த், மிட் ஷாட்களில் எடுப்பதைத் தாண்டி எங்கெங்கோ வளர்ந்து கொண்டிருக்கிறது வெடிங் போட்டோகிராஃபி. “இப்ப ட்ரெண்ட் மாறிடுச்சுங்க. பின்ட்ரெஸ்ட், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்னு ஏகப்பட்ட விஷயங்கள் வந்துட்டே இருக்கு. அதுல `கப்பிள் ஷூட்’னு டைப் செய்தா, அவ்வளவு புகைப்படங்கள் கண்முன்னே வரிசைகட்டி வருது. இதையெல்லாம் பாத்துட்டு புதுசு புதுசா ஐடியாஸ், தீம் கிரியேட் பண்ணதுக்கு அப்புறம்தான், போட்டோகிராஃபரையே புக் செய்யறாங்க. அதனால நம்ம வேலை ஈஸி” என்று கலகலவென பேச ஆரம்பித்தார், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ‘தி ரெட் கிராப் போட்டோகிராஃபி’ கம்பெனியின் நிறுவனர் நாகூர்.

‘‘அண்ணா யுனிவர்சிட்டில எம்.எஸ்.எலெக்ட்ரானிக்ஸ் பண்ணிட்டு இருந்தேன். அதுல போட்டோகிராஃபி சப் கோர்ஸா இருந்தது. அப்பதான் போட்டோகிராஃபி மேல இன்ட்ரஸ்ட். அடிச்சுப் பிடிச்சு பழகி, ‘தி ரெட் கிராப்’னு ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணேன். ஃப்ரெண்ட்ஸ் மூலமா திருமண ஆஃபர்ஸ் பிடிச்சேன். ஒரு வருஷத்துல பக்காவா ஒரு டீம் ஃபார்ம் பண்ணி, இப்ப சூப்பரா போயிட்டிருக்கு’’ என்கிற நாகூரிடம் ``ஊரில் எத்தனையோ போட்டோகிராஃபர்ஸ் இருக்காங்க. உங்களிடம் என்ன ஸ்பெஷல்?’’ என்றால்...

‘‘ரொம்ப சிம்பிள்! சில விஷயங்களை அழகா காமிக்கணும். அதுவும் கல்யாண ஆல்பம்னா சும்மாவா... ஆனால், அழகா காமிக்கணும்னு போட்டோ எடுத்து அதை மெனக்கெட்டு எடிட் செய்து செயற்கைத்தனமா காட்டுறதுல எனக்கு விருப்பம் இல்ல. இதுவரைக்கும் நான் யாரையுமே போட்டோஷாப்ல வொர்க் பண்ணி, எடிட் பண்ணி அழகா காமிச்சது இல்லை. கல்யாணம் முடிஞ்சதும் எப்போ போட்டோ ஆல்பம் வரும்னு மாப்பிள்ளை - பொண்ணு ரெண்டுபேரோட குடும்பத்தினரும் ஆவலா எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. அந்த சமயம் பாத்து போட்டோ ஆல்பத்துல இருக்கறது நம்மளமாதிரியே இல்லையேனு அவங்க ஃபீல் பண்ற மாதிரி நம்ம வொர்க் இருக்கக்கூடாதுங்கிற விஷயத்துல நான் ரொம்பவே கவனமா இருப்பேன். சிலருக்கு பிம்பிள் மார்க், அடிபட்ட தழும்பு இருக்கும். அதை சரிபண்ண சொன்னா மட்டும்தான் எடிட் பண்ணுவேன். மத்தபடி, இயல்பா இருக்குறதை இருக்குறமாதிரியும் அதேசமயத்துல எந்த ஆங்கிளில் மணமக்களை அழகா காட்ட முடியும்ங்கறதையும்தான் அதிகம் ஃபோகஸ் செய்வேன். இதுதான் என்னோட ஸ்டைல்” என்பவரிடம், திருமணப் புகைப்படத் துறையில் இப்போ என்னமாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு? என்று கேட்டதற்கு,

நினைவுகளில் என்றென்றும்...
நினைவுகளில் என்றென்றும்...

‘முன்னாடி எல்லாம் பேரன்ட்ஸ்தான் எங்களை புக் பண்ண வருவாங்க. இப்ப அப்படி கிடையாது. பொண்ணு, மாப்பிள்ளையே ஜோடியா வந்து எங்களை மீட் பண்றாங்க. லொகேஷன்ல, காஸ்ட்யூம், மேக்கப்னு ஆரம்பிச்சு போட்டோ ஆல்பம் என்ன டிசைன் என்பது வரைக்கும் அவங்களே ஐடியாஸ் கொடுக்குறாங்க. முன்ன எல்லாம், போட்டோகிராஃபர்தான் இப்படி நில்லுங்க, அப்படி நில்லுங்கன்னு சொல்வாங்க. இப்ப அப்படி இல்லை. அவங்களே போஸ் பண்ணுவாங்க... நாங்க எடுப்போம்னு. வெடிங் போட்டோகிராஃபி வேற லெவல்ல போயிட்டிருக்கு” என்பவர் தொடர்ந்து,

“அரேஞ்டு மேரைஜைவிட லவ் மேரேஜ் கப்பிள் ஷூட்னா, இன்னும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ப்ரீ வெடிங், போஸ்ட் வெடிங் ஷூட்னு கலக்கலா இருக்கும். பொதுவா லவ் மேரேஜ் பண்றவங்கதான் ப்ரீ வெடிங் ஷூட்டுக்கு சம்மதிப்பாங்க. பீச், மகாபலிபுரம், ரிசார்ட், ஸ்டார் ஹோட்டல்னு வசதிக்கேத்த மாதிரி இடம் செலக்ட் பண்ணுவாங்க. ஒரு சிலர் கல்யாணம் பண்ண ஹோட்டல்லயே, ஒரு வாரம் கழிச்சு போட்டோ ஷூட் பண்ணுவாங்க. லீலா பேலஸ், ஹயாட் ஹோட்டல், பாண்டிச்சேரி, சிதம்பரம் கோயில்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடம் போவாங்க.

அவுட்டோர் ஷூட்ல ஒரு சிக்கல் என்னன்னா, சீக்கிரம் டயர்ட் ஆயிடு வாங்க. அவங்களை உற்சாகப்படுத்தறதுக் காகவே, ஷூட்டுக்கு அவங்களோட ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வரச் சொல் வோம். எல்லாத்தையும்விட, `நான் அழகா இருக்கேன்’ என்கிற விஷயம் பொண்ணு மைண்ட்ல வந்திருச்சுன்னா, அந்த நாள் முழுக்க ஷூட் நல்லா இருக்கும்.

நினைவுகளில் என்றென்றும்...
நினைவுகளில் என்றென்றும்...
நினைவுகளில் என்றென்றும்...

ஆனா, பசங்க சைட்ல இருந்து புகாரே வராது. `மச்சான் நீ எப்டி வேணா எடுத்துக்கோ’னு சிக்னல் கொடுத்துடுவாங்க. அவங்களுக்கு ரெண்டே ஷாட்தான். ஒண்ணு ஸ்மைல். இன்னொண்ணு முறைக்கிறது. பசங்களைப் பொறுத்தவரை ஜென்டிலா நிக்கணும், மனைவியை கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண வைக்கணும்... அவ்வளவுதான். பொண்ணுங்களுக்குத்தான் அதிக வேலை. `அவரைப் பாத்து வெட்கப்படுங்க. கூச்சமா பாருங்க. ஸ்மைல் பண்ணுங்க. நல்லா ஸ்மைல் பண்ணுங்க. ஃப்ரெண்ட்லியா பேசுங்க’ன்னு சொல்லிட்டே இருக்கணும்.

நினைவுகளில் என்றென்றும்...

ரூ. 50 ஆயிரத்துல இருந்து 4.5 லட்சம் வரை போட்டோகிராஃபிக்கு செலவு பண்றாங்க. அதுக்கேத்த மாதிரி ஃபோட்டோஸ் கொடுக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா? எல்லாத்தையும் முன்கூட்டியே பிளான் பண்ணி ஷூட் பண்ணா, அந்த திருமண ஆல்பமும் கூடவே புகைப்படக் கலைஞரின் திறமையும் காலத்துக்கும் பேசும்.

இருக்காதா பின்னே... முதல்முறையாக வீட்டுக்கு வரும் விருந்தாளி யிடம் காபிக்கு முன் நீட்டப்படுவது கல்யாண ஆல்பம்தானே!

 - தா.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு