Published:Updated:

மூன்று பெண்களின் முத்தான முயற்சி

மூன்று பெண்களின் முத்தான முயற்சி
பிரீமியம் ஸ்டோரி
மூன்று பெண்களின் முத்தான முயற்சி

நம்பிக்கைபா.விஜயலட்சுமி

மூன்று பெண்களின் முத்தான முயற்சி

நம்பிக்கைபா.விஜயலட்சுமி

Published:Updated:
மூன்று பெண்களின் முத்தான முயற்சி
பிரீமியம் ஸ்டோரி
மூன்று பெண்களின் முத்தான முயற்சி

வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகள் என்று எல்லாருமே வாழ்வில் ஒரு நாளாவது இந்த அவஸ்தையை அனுபவித்திருப்போம். ஆம்... கல்லூரி நேரத்தில் அல்லது அலுவலக நேரத்தில் திடீரென்று ‘பீரியட்ஸ்’ ஏற்பட்டு, நாப்கினுக்காக நம்மைத் தத்தளிக்க வைத்துவிடும். அருகில் கடைகள் இல்லாமல், தோழிகளிடம் நாப்கின் கடன் கேட்டு, கிளாஸ் ரூம் கிளாஸ் ரூமாக, கேபின் கேபினாக அலைய வேண்டி இருக்கும்.

மூன்று பெண்களின் முத்தான முயற்சி

நாகரிகத்தில் ஊறிப்போன நம்மைப்போன்ற பெண்களுக்கே ‘அந்த மூன்று நாட்கள்’ கஷ்டமான நிலைமை என்னும்போது பள்ளி, கல்லூரிக்கே பல கிலோ மீட்டர் தூரம் நடந்துபோக வேண்டிய, சுகாதார நிலையம்கூட சரிவர அமைந்திராத குக்கிராமங்களில், ரிமோட் பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் வளரிளம் பெண்களின் நிலைமை எவ்வளவு கொடுமை?

நமக்குத் தோன்றும் இந்தக் கேள்வி மனதில் எழுந்ததும் மூன்று சட்டக் கல்லூரி மாணவிகள் உடனடியாகச் செய்த ஒரு விஷயம், இன்று எத்தனையோ கிராமப்புறப் பெண்களுக்கும், மாதாந்திர நாட்களில் துணிக்குக்கூட வழியில்லாத இளம் சிறுமிகளுக்கும் பேருதவியாக அமைந்துள்ளது.

சரா ஃபாத்திமா, ஆயுஷி டாங்க்ரே, ப்ரீத்திஸ்ரீ தாஸ் ஆகியோர்தான் அந்த மூன்று இளம்பெண்கள். கேரளாவில் அமைந்துள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மாணவிகள். கேரளாவின் ஆலப்புழையைச் சேர்ந்தவர் சரா. ஆயுஷி நாக்பூரிலிருந்தும், பிரீத்திஸ்ரீ ஒடி சாவிலிருந்தும் கேரளாவுக்குச் சட்டக் கல்விக்காக இடம் பெயர்ந்தவர்கள்.

மூன்று பெண்களின் முத்தான முயற்சி

இம்மூவரும் இணைந்து ‘கோட்  ரெட்’ என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். “வேறொரு ஐடியா வுக்காக நாங்கள் மூவரும் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் இந்த விஷயம் கண்ணில்பட்டது” என்கிறார் ப்ரீத்திஸ்ரீ.

“வரைவதிலும் கிராஃப்ட் வேலை களிலும் ஆர்வமிருந்ததால், நாங்கள் புத்தகத்துக்கான புக்மார்க் செய்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்திருந்தோம். அதில் கிடைக்கும் வருமானத்தை அருகில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்துக்்குக் கொடுக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தோம்.

அதற்காக அந்த இல்ல நிர்வாகியிடம் பேசிய போதுதான் ஷாக்கிங்கான இந்த விஷயம் தெரியவந்தது. அங்கிருக்கும் பெண்பிள்ளைகள் நிறைய பேருக்கு நாப்கின் என்றாலே என்ன வென்று தெரியவில்லை. மாதவிடாய் நேரங்களில் அவர்களுக்கு முறையான நாப்கின் வசதி கிடைத்ததே இல்லை.

அங்கிருந்த சிறுமிகள் மாதவிடாய் காலங் களில் துணிகளையே உபயோகப்படுத்தி வந் துள்ளனர். அதைச் சுத்தப்படுத்துவதற்கான சரியான வழிமுறைகளும், வெந்நீர், டெட்டால் போன்ற வசதிகளும் அவர்களுக்கு இல்லை.

இந்த நிலை கருப்பை சார்ந்த நோய்களுக்கும், தொற்றுகளுக்கும் வழிவகுக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தவுடன், அவர்களுக்கு நாப் கின்களை வழங்க முடிவெடுத்தோம்” என்று ‘கோட் ரெட்’ பிறந்த கதையைச் சொன்னார் ஆயுஷி.

மூன்று பெண்களின் முத்தான முயற்சி

முதல்கட்டமாக 1,600 ரூபாய் நிதி திரட்டி ஆதரவற்றோர் இல்லப் பெண்களுக்கு நாப்கின்களை வழங்கினர் இந்தத் தோழிகள். இவர்களுடைய ‘கோட் ரெட்’ திட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், நாப்கின் பாக் கெட்டுகளை வாங்கி நன்கொடையாக அளிக்கலாம். இல்லையெனில், நாப்கின் களுக்கான பணத்தை ‘கோட் ரெட்’டிடம் அளிக்கலாம்.

“விலையுயர்ந்த நாப்கின்களையெல்லாம் வாங்கி அளிக்கத் தேவையில்லை. சாதாரண காட்டன் நாப்கின்களை வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அல்லது மாதம் 50 ரூபாய் கொடுத்தால்கூட போதும். ஒவ்வொரு 50 ரூபாயும் ஒரு பெண்ணின் பீரியட்ஸ் நாட்களை ஆரோக்கியமானதாக மாற்ற உதவும்” என்கிறார் சரா.

இப்போது கேரளாவில் மட்டுமே செயல்படும் இந்தத் திட்டத்தை விரைவில் இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல முடிவெடுத்துள்ளனர் இத்தோழிகள். அதற்கான முதல்கட்ட முன்னெடுப்பாக ‘கோட் ரெட்’ இணையதளத்தை கட்டமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

“மாதவிடாய் ஓர் இயற்கை நிகழ்வு. ஆனால், அந்த மூன்று நாட்களும் சுகாதாரம் மிகவும் முக்கியம். எங்களது முயற்சி இன்னும் பலரது மனக்கதவுகளைத் திறந்துவைத்தால் அதுதான் எங்களுக்குக் கிடைத்த உண்மையான வெற்றி” என்கின்றனர் மூவரும் கோரஸாக.

கங்கிராட்ஸ் கேர்ள்ஸ்!