Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன் !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன் !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: சேகர்

Published:Updated:
அனுபவங்கள் பேசுகின்றன் !

பொருளா... பணமா?!

அனுபவங்கள் பேசுகின்றன் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

எங்கள் அபார்ட்மென்ட்டில் இரண்டு வீடுகளில் குழந்தை பிறந்திருந்தது. ஒரு மாதம் கழித்துத்தான் அவர்களைப் பார்க்கச் செல்ல நேரம் கிடைத்தது.  ஒரு குழந்தைக்கு பேபி சோப், பேபி பவுடர் என்று வாங்கிக் கொண்டேன். மற்றொன்று பெண் குழந்தை என்ப தால், மனதுக்குப் பிடித்தபடி குழந்தை களுக்கு உரிய சட்டைகள், ஜட்டி என்று வாங்கினேன்.

முதல் வீட்டில் பவுடர், சோப்பு இத்யாதிகளைக் கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் குழந்தைக்கு பயத்தமாவு மட்டுமே உபயோகிப்பது தெரியவந்தது. அடுத்த வீட்டிலோ, டெலிவரியின்போதே குழந்தை நல்ல எடையுடன் பிறந்திருந்ததால், ஒரு மாதத்தில் நன்றாக உடம்பு தேறி இருந்தது. பார்த்தவுடனேயே, நான் வாங்கிச் சென்ற உடைகள் அந்தக் குழந்தைக்கு அளவு பத்தாது என்று புரிந்தது. நமக்குப் பிடித்தவற்றை வாங்குவதைவிட, பணமாக கொடுத்துவிட்டால் அவர்கள் தங்களுக்கு விருப்பமானதை, தேவையானதை வாங்கிக் கொண்டிருப்பார்களே என்ற ஞானமும் வந்தது!

இப்போது வீட்டில் நிறையப் பரிசு கவர்களை வாங்கி வைத்துவிட்டேன்!

- மீனாட்சி ரகுபதி, சென்னை-78

பெரிய கடை...பெரிய தவறு!

அனுபவங்கள் பேசுகின்றன் !

எங்கள் ஊரில் உள்ள மிகப்பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டில் வந்து சரிபார்த்தபோது,

அனுபவங்கள் பேசுகின்றன் !

30 விலையுள்ள சோப்புக்கு  

அனுபவங்கள் பேசுகின்றன் !

87 என்று பில் போட்டிருந்தார்கள். என் மகள் பில்லுடன் சென்று முறையிட, மீதி பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ''தெரு முக்கு கடையில் வாங்கின தேங்காய் சரியில்லாமல் போனாக்கூட, அத்தனை தடவை 'மன்னிச்சுக்கோங்கக்கா’னு சொல்லி, வேற தேங்காய் கொடுப்பாங்கம்மா. ஆனா, அவ்வளவு பெரிய கடையில இந்தத் தப்புக்கு ஒரு ஸாரிகூட சொல்லல'' என்று வருத்தப்பட்டாள் மகள். பெரிய கடை என்பதால், எல்லாமே சரியாக இருக்கும் என்று நம்பி பில், பொருட்களைச் சரி பார்க்காமல் வாங்கிவரும் நம்மை முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

- யசோதா பழனிச்சாமி, ஈரோடு-4

'எனி ஹெல்ப்..?’ ஏமாற்றுக்காரர்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன் !

என் தோழி தன் பெற்றோரின் வங்கிக் கணக்கில்

அனுபவங்கள் பேசுகின்றன் !

20 ஆயிரம் டெபாசிட் செய்ய, வங்கிக்குச் சென்றிருக்கிறாள். மாதத்தில் முதல் வாரமாதலால், வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது.   அலுவலகத்தில் 'பெர்மிஷன்’ கேட்டு வந்திருந்தால், முகத்தில் பதற்றத்தைக் கூட்டியபடியே டோக்கனுடன் தோழி அமர்ந்திருக்க, பக்கத்து இருக்கையில் இருந்த பெண் அதைக் கவனித்து, ''மேடம்! உங்களைப் பார்த்தா ரொம்ப அவசரமா போகணும்போல் தெரியுது. அங்க 2-ம் நம்பர் கவுன்டர்ல இருக்குற ஸ்டாஃப் எனக்குத் தெரிஞ்சவர்தான். நான் கட்டிட்டு வர்றேன். நான் வரும்வரை இந்தக் கவரை வெச்சுருங்க. இதுல

அனுபவங்கள் பேசுகின்றன் !

50 ஆயிரம் இருக்கு!'' என்று தன் கையில் இருந்த கவரை தோழியிடம் கொடுத்து, பணத்தைப் பெற்றுச்சென்று இருக் கிறார். வெகு நேரமாகியும் அவர் வராததால், சந்தேகத்தில் கவரைப் பிரித்தால், மேலும், கீழும் ஐந்நூறு ரூபாய் நோட்டும், நடுவில் வெற்றுக் காகிதங்களும் இருந்துள்ளன. தோழியின் அவசரத்தைப் பயன்படுத்தி அவரை ஏமாற்றி இருக்கிறாள் ஒரு மோசடிப் பேர்வழி!

பொது இடங்களில்  புதியவர்களை எளிதில் நம்ப வேண்டாமே!

- ஏ.பரமேஸ்வரி, சென்னை-24

அவசரம்... அவஸ்தை!

அனுபவங்கள் பேசுகின்றன் !

அமெரிக்காவில் இருந்த அந்தப் பையனுக்கு, தென் மாவட்டக் குடும்பத்துப் பெண் ஒன்று அமைந்தது. மாப்பிள்ளை அமெரிக்காவில் இருந்து வந்திருந்த சமயம் வீட்டிலேயே (மாலை மாற்றி, ஜோடியாக நின்று பேட்டோ எடுத்து) நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரே ஒரு பத்திரிகை அச்சடித்து நிச்சயத்தையே திருமணம்போல் காட்டி, பதிவும் செய்தார்கள்... தம்பதியானால் பாஸ்போர்ட் சிக்கல் இல்லாமல் விரைவில் கிடைக்கும் என்பதற்காக. மறுவாரமே மாப்பிள்ளை அமெரிக்கா சென்றுவிட்டார்.

ஆறு மாதம் கழித்து பிரமாண்டமாக திருமணத்தை முடிக்க ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், அதற்குள்  எதிர்பாராமல் பெரிய பிரச்னை வர, 'இந்த சம்பந்தம் வேண்டாம்' என்று இருவீட்டாருமே முடிவெடுத்தது அதிர்ச்சி. திருமணத்தைப் பதிவு செய்துவிட்டதால் விவாகரத்து வாங்க குறைந்தபட்சம் ஓராண்டாவது காத்திருக்க வேண்டுமே? காத்திருக் கிறார்கள் இப்போது.

திருமணமே ஆகாமல் விவாக ரத்து... எவ்வளவு விபரீத விநோதம் பாருங்கள்..?! சுபகாரியங்கள் முடிக்க அவசரம் கூடாது. நிதானமே வேண்டும்!

- விஜிலா தேரிராஜன், அருப்புக்கோட்டை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism