Published:Updated:

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!
மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

பிரீமியம் ஸ்டோரி

“சின்னச் சின்னத் தருணங்கள்தான் நம்முடைய வாழ்வையே அழகாக்குகின்றன. ஆனா, பெரும்பாலும் அந்தத் தருணங்கள் எல்லாமே நம்மகிட்ட நினைவா இருக்குமே தவிர, பதிவா இருக்காது. அந்த அழகான நொடிகளைப் பதிவுசெய்றதுதான் கேண்டிட் போட்டோகிராஃபி. இன்னிக்குப் பெரும்பாலான திருமணங்கள்ல, மணமக்களுக்குப் பொக்கிஷமா இருக்கிறது இந்த கேண்டிட் போட்டோஸ்தான்...” என்று தன் கேமரா லென்ஸ்களைச் சுத்தப்படுத்தியபடியே பேசத் தொடங்குகிறார் ராகேஷ்... `பிக்ஸர்’ (Pixuur) நிறுவனர்களில் ஒருவர்.

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!
மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐ.டி துறையில் பணிபுரிந்து வந்தவர் ராகேஷ். போட்டோகிராஃபி மீதான ஆர்வத்தின் காரணமாக, தன் வேலையைத் துறந்துவிட்டு  நண்பர்களுடன் சேர்ந்து `பிக்ஸர்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

மணப்பெண்ணின் சில நொடி மெளனம், பழைய உறவுகளைப் பார்க்கும் தருணங்களில் வெளிப்படுத்தும் ஆச்சர்ய சந்தோஷம், கையில் இடப்பட்டிருக்கும் மருதாணியின் வடிவங்கள், மேடையில் குறுக்கே ஓடும் சிறு குழந்தையை மணமக்கள் பார்த்துச் சிரிக்கும் காட்சி, வயதான அப்பத்தா மணமகளின் கன்னத்தை அழுத்தி மனமார வாழ்த்தும் மகிழ்ச்சித் தருணம், தாலி கட்டும் வேளையில் வெளிப்படும் சில கண்ணீர்த் துளிகள் என ஒவ்வொரு நொடியையும், வாழ்க்கைப் பதிவாக்குகிறது இவரின் கேமரா. 

“கேண்டிட் போட்டோக்களை அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது... நிகழ்ச்சியை, அதன் சடங்குகளை, சொந்த பந்தங்களை படம் எடுக்கும் ட்ரெடிஷனல் போட்டோகிராஃபி வேலைகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும். இரண்டு பேர் முழுக்க முழுக்க கேண்டிட் போட்டோ எடுப்பதில் ஈடுபட்டிருப்பார்கள். சுற்றி நடப்பவற்றை நன்கு கவனிக்கும் திறன் கேண்டிட் போட்டோகிராஃபர்களுக்கு அவசியம் வேண்டும்...” என்கிறார். 

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

முன்பெல்லாம், ஒரு திருமணத்தின் முழுப் பொறுப்பையும் பெரியவர்களே எடுத்துக்கொண்டு, முன்னின்று நடத்துவார்கள். ஆனால், இன்று பெரும்பாலும் மணமக்கள்தாம் தங்களுக்குப் பிடித்த வகையில் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். உடைகள், மேடை அலங்காரம், போட்டோகிராஃபி என தங்களுக்குப் பிடித்த விஷயங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்கிறார்கள்.  

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

“திருமண நாள் அன்று திடீரென மணமக்களைப் பார்த்து கேமராவை வைத்தால்... போட்டோக்கள் சரியாக வராது. திருமணத்துக்கு முன்பே குறைந்தது மூன்று தடவை அவர்களை நாங்கள் சந்திப்போம். அவர்களின் தேவை என்ன, அவர்களின் டேஸ்ட் என்ன, அவர்களுக்கு என்ன மாதிரியான படங்கள் வேண்டும் என்பதை எல்லாம் கேட்டு அறிந்துகொள்வோம். மணமக்களோடு எந்தளவு எங்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப் உருவாகிறதோ... அந்தளவு போட்டோக்கள் சிறப்பாக வரும்” என்று சொன்னவர், தன் டேப்லெட்டில் இருக்கும் சில அவுட்டோர் போட்டோ ஷூட்களின் தொகுப்பைக் காட்டுகிறார். சினிமாவில் வரும் காதல் பாடல் காட்சிகளின் உணர்வில், அவுட்டோர் போட்டோகிராஃபியிலும் கலக்கி வருகிறார் ராகேஷ்.

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

“அவுட்டோர் போட்டோ ஷூட்டில் மணமக்களின் ரியாக்‌ஷன்ஸ் ரொம்ப முக்கியம். எல்லோரும் சினிமா நடிகர்கள் கிடையாது. அதனால், கேமராவை அவர்களுக்கு சகஜப்படுத்த வேண்டும். நாங்கள் அங்கிருப்பதையும், கேமராவையும் அவர்கள் மறக்க வேண்டும். அப்போதுதான் போட்டோக்கள் ரொம்ப இயற்கையாக இருக்கும். அதே மாதிரி உடைகளுக்கும் அவுட்டோர் போட்டோகிராஃபியில் மிக முக்கியப் பங்கிருக்கிறது” என்று சொல்பவர் தொடர்கிறார்... 

மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!
மெளனம், சிரிப்பு, மருதாணி... - சில மகிழ்ச்சிப் பதிவுகள்!

“ஒரு போட்டோவுக்குப் பின்னால் இத்தனை வேலைகள் இருந்தாலும், இந்த பிரஷர் எதுவும் மணமக்களுக்குத் தெரியக் கூடாது. மணமக்களுடைய அண்ணனோ, தம்பியோ... யாரையாவதுதான் எங்கள் தேவைகளுக்குத் தொடர்பு கொள்வோம். மணமக்களை அந்தத் தருணங்களை முழுமையாக அனுபவிக்க வைக்க வேண்டியதும் போட்டோ கிராஃபரின் கடமைதான். ஏன்னா, அந்தக் கல்யாணத்தின் ஹீரோ, ஹீரோயின் அவர்கள்தான்...” என்று சொல்லிச் சிரிக்கிறார் ராகேஷ். அவருக்குப் பின்னால், அழகான சிரிப்போடும், காதலோடும் இருக்கும் ஜோடிகளின் போட்டோக்கள் சுவரை நிறைத்திருக்கின்றன. 

- இரா.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு