Published:Updated:

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

சிறியவர்களுக்குப் பலகாரங்கள், விளையாட்டுகள். இளைஞர்களுக்கு உற்சாகக் கேளிக்கைகள். இளைஞிகளுக்குப் புத்தாடை, அணிகலன்கள். பெரியவர்களுக்கு உறவினர்களின் சந்திப்பு, அன்பான விசாரிப்புகள் எனத் திருமண நிகழ்வு  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் மகிழ்ச்சி தரும். அனைவருக்குமே பொதுவான மகிழ்ச்சி என்றால் , அது புகைப்படங்கள்தான். அதனால்தான் புகைப்படம் எடுப்பதற்கென பெரிய தொகையை ஒதுக்குவதற்கு முன்வருகின்றனர்.  இவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யும் விதமாக திருமணப் புகைப்படத்துறையும், நாளுக்குநாள் புதுப்புது யுக்திகளைச் செயல்படுத்திவருகிறது. திருமணம் முடிந்ததும் ‘எப்போது கல்யாண ஆல்பம் கிடைக்கும்?’ என்பதுதான் புதுமணத் தம்பதியரின் முதல் கேள்வியாக இருக்கிறது.

மகிழ்ச்சித் தருணங்களை எதிர்காலத்தில் நினைவுகூர்வதற்கும், அதை அப்படியே பொக்கிஷமாகப் பாதுகாப்பதற்கும் உதவியாக இருக்கும் புகைப்படங்கள் எந்த அளவுக்கு நன்றாக எடுக்கப்பட வேண்டும்? அதற்கு ஏதாவது ஒரு கேமரா போதுமா? எனில் வெடிங் போட்டோகிராபிக்குச் சிறந்த கேமரா எது? இதுபற்றி திருமணப் புகைப்படக் கலைஞர் சரவணனிடம் கேட்டோம்.

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

“இப்போது கேனான் 5டி மார்க்3-தான் பெஸ்ட் கேமரா. கல்யாணத்துல போட்டோ எடுக்கணும்னா பெரிய ஃப்ரேம் கொண்ட கேமராதான் தேவைப்படும். அப்பதான் போட்டோக்களின் ஷார்ப்னெஸ் அதிகமாகவும், டீட்டெயிலிங் தெளிவாகவும் இருக்கும். இந்த இரண்டு முக்கியமான காரணங்களால்தான், 5டி மார்க் கேமரா மத்த கேமராக்களைப் பின்னுக்குத் தள்ளிட்டு எப்பவும் முன்னிலையில இருக்கு. வெட்டிங் போட்டோகிராபிக்கு என பிரத்யேகமாக வாங்கும் கேமராக்களுக்குச் சில அடிப்படை விஷயங்கள் இருக்கு” என்கிற சரவணன் அவற்றை விவரித்தார்.

டைனமிக் ரேஞ்ச் (Dynamic range)

ஆயிரக்கணக்கில் செலவழித்து டிசைன் செய்யப்படும் மணமகளின் ஆடையில், மலைக்க வைக்கும் அளவுக்கு வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும். சிறுசிறு மணிகளும், கண்ணைப் பறிக்கும் அளவுக்கு ஜொலிக்கும் கற்களும்தான் அந்த ஆடையின் அழகை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். வளைத்து வளைத்து எடுக்கப்படும் புகைப்படங்களில், மணமகளின் அழகுக்கு மெருகு சேர்க்கும் அந்த ஆடையின் அழகும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படித் துல்லியமாகப் படமெடுக்க உதவும் விஷயத்தைத்தான் `டைனமிக் ரேஞ்ச்’ என்கிறோம்.

இமேஜ் குவாலிட்டி

சென்ற தலைமுறை, திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆல்பத்தில் பாதுகாத்துவைப்பதோடு சரி. இன்றைய காலகட்டத்தில் ஆல்பத்தோடு நின்றுவிடாமல், புகைப்படங்களை பேனர், வால் போஸ்டர்கள் என பெரிய அளவில் பிரின்ட் செய்கிறார்கள். பெரிய பேனராக பிரின்ட் செய்பவர்களும் ஏராளம். அதனால், நாம் எடுக்கும் புகைப்படங்கள் எத்தனை ஐ.எஸ்.ஓ வைத்தாலும், தரம் குறையாமல் வர வேண்டும். புள்ளிகள் (Image Noise) கூடியவரை தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு கேமராவின் தரம் மிக முக்கியம்.

யூஸர் இன்டர்ஃபேஸ்

இதற்கும் புகைப்படங்களின் தரத்துக்கும் தொடர்பில்லைதான். ஆனால், இன்டர்ஃபேஸ் எளிமையாக இருந்தால்தான் வேகமாக செட்டிங்ஸ் மாற்றி, பிடித்த மாதிரியான படங்களை எடுக்க முடியும். புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பார்க்க முடியும். படங்கள் நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வேலையைத் தொடர முடியும். எனவே, எளிமையான இன்டர்ஃபேஸ் கொண்ட கேமராக்களையே தேர்வு செய்யவும்.

உறுதித்தன்மை

திருமணப் புகைப்படங்களை பார்த்திருப்போம். அவை எடுக்கப்பட்ட விதத்தைப் பார்த்திருக்கிறீர்களா? கிடைக்கும் நேரத்தில், க்ளிக்கித் தள்ள வேண்டும். பெரும்பாலான நேரத்தில் கேமராவை ரஃப் ஆக கையாள வேண்டியிருக்கும். அதனால், உறுதியான ஃபில்டு குவாலிட்டி கொண்ட கேமராக்களையே வாங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களைக் கருத்தில்கொண்டு, இப்போது சந்தையில் இருக்கும் சிறந்த கேமராக்கள் சில உங்கள் பார்வைக்கு...

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

Canon EOS 6D

கொஞ்சம் குறைந்த பட்ஜெட் என்றால் 6டி நல்ல சாய்ஸ். மிகவும் லைட் வெயிட்டான கேமரா. அதனால், கையாள்வது எளிது. குறைந்த ஒளியிலும் பிரமாதமான புகைப்படங்கள் எடுக்க 6டி உதவும். 5டி-க்கு எந்தக் குறைவும் இல்லாத படங்களை 6டி-யிலும் எடுக்கலாம். பெரும்பாலான புகைப்படக் கலைஞர்களின் பேக்கப் கேமரா இதுதான்.

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

Canon EOS 5D Mark III

கையடக்க கேமரா, 1.5 லட்சம் க்ளிக்குகள் வரையிலான ஆயுள், சிறந்த ஆட்டோஃபோகஸ் வசதி எனப் பல விஷயங்களில் 5டி சிறப்பான கேமரா. புகைப்படங்களுடன், நல்ல தரத்தில் வீடியோவும் எடுக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். நிறைய பேரால் பயன்படுத்தப்படும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துகொண்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேறு எந்த ஸ்பெஷல் தேவையும் இல்லையென்றால், கண்ணை மூடிக்கொண்டு இந்த கேமராவை வாங்கலாம்.

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

Nikon D800

நிக்கானுக்கு என்று தனி ரசிகப்பட்டாளம் உண்டு. டி800 மாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. விலை, படங்களின் தரம், பெர்ஃபாமென்ஸ் என அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், டி800 ஒட்டுமொத்தமாக `மேன் ஆஃப் மேட்ச்’ பட்டம் வெல்லும் என்கிறார்கள் ரசிகர்கள். தூசியிலிருந்து பாதுகாக்கும் ஷட்டர், 91000 பிக்ஸெல்ஸ் 3டி கலர் மேட்ரிக்ஸ் மீட்டரிங் சிஸ்டம் என இந்த மாடலுக்கே உரிய ஸ்பெஷல் வசதிகளும் ஏராளம். நிக்கான் ஏற்கெனவே உங்களுக்குப் பரிச்சயமான பிராண்டு என்றால், தைரியமாக டி800 வாங்கலாம்.

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

Nikon D4s

சில நிகழ்ச்சிகளின்போது  தேவையான அளவு லைட்டிங்  கிடைக்காது. ஃப்ளாஷ் பயன்படுத்துவதிலும் சிக்கல்  வரலாம். அந்த நேரத்தில் கைகொடுக்கும் நண்பன் நிக்கான் D4s. டி800-ல் இல்லாத ஒரு வசதியும் இதில் உண்டு. அது லேன் (LAN). இதன் மூலம் டேட்டா பரிமாற்றம் செய்யலாம். டிரான்ஸ்மிட்டர் மூலம் வைஃபை வசதியையும் பெறலாம். விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு எக்ஸ்பெர்ட்ஸ் பரிந்துரைப்பதும் இந்த மாடலைத்தான்.

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் கேமராக்கள்! - ஒரு மினி ரிவ்யூ

Sony Alpha A99

‘சோனியா... வெடிங் போட்டோ கிராபிக்கா?’ என்று தயங்குபவர்கள் இருக்கிறார்கள். சோனியின் கடந்த காலம்தான் அதற்குக் காரணம். ஆனால், ஆல்ஃபா A99 மாடல் நிச்சயம் போட்டியாளர்களுக்குச் சரியான சவால் எனச் சொல்லலாம். 24 மெகாபிக்ஸெல் சென்சார் என்பதால் படங்கள் தரமாக இருக்கும். முன்பெல்லாம் சோனி கேமராக்களுக்கு லென்ஸ் மற்றும் ஃப்ளாஷ் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. இதை கருத்தில்கொண்டு சோனி மற்ற  நிறுவனங்களுடன் கைகோத்திருப்பதால், இந்த கேமராவுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன.

- கார்க்கி பவா