Published:Updated:

வாவ்... லாலிபாப் பொக்கே!

வாவ்... லாலிபாப் பொக்கே!
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ்... லாலிபாப் பொக்கே!

ஃப்ரெண்ட்ஷிப் கிராஃப்ட்எம்.ஆர்.ஷோபனா - படங்கள்: ப்ரியங்கா

‘`நண்பர்கள் தினத்துக்கு உங்க ஃப்ரெண்டுக்கு உங்க கையாலேயே செய்த பரிசைக் கொடுத்தா, அது பரிசு மட்டுமா என்ன... பரவசமும் தானே!” என்கிற சென்னையைச் சேர்ந்த கிராஃப்ட் கலைஞர் ஷாமிளா தேவி, அப்படியொரு அன்புப் பரிசான லாலிபாப் பொக்கே செய்ய அழகாகக் கற்றுக்கொடுக்கிறார். 

வாவ்... லாலிபாப் பொக்கே!

தேவையான பொருள்கள் 

டபிள் டுப்ளக்ஸ் க்ரேப் பேப்பர் (Double Duplex Grape Paper) - 2 (சிவப்பு மற்றும் பச்சை), ஃப்ளோரல் செல்லோ டேப் - 1,  கத்தரிக்கோல் - 1, மெல்லிய கம்பி -  7, லாலிபாப் - 7.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாவ்... லாலிபாப் பொக்கே!

படம் 1: கம்பியைச் சுற்றி ஃப்ளோரல் செல்லோ டேப்பை ஒட்டவும்.

படம் 1A: கம்பியை லாலிபாப்

குச்சிக்குள் (படத்தில் காட்டியுள்ளது போல) நுழைக்கவும். பிறகு, அந்த  லாலிபாப்புடன் இணைத்துக் கம்பியில் செல்லோ டேப்பை ஒட்டவும். இவ்வாறு ஏழு கம்பிகளை ஏழு லாலிபாப்களில் நுழைக்கவும்.   

வாவ்... லாலிபாப் பொக்கே!

படம் 2: சிவப்பு க்ரேப் பேப்பரை, 2 இன்ச்சாக வெட்டிக்கொள்ளவும்.  பிறகு ரோஜா இதழ்போல கத்தரிக்கவும்.   

வாவ்... லாலிபாப் பொக்கே!

படம் 3: இதழின் ஓரங்களை லேசாகச் சுருட்டவும். இதேபோல, ஒரு கம்பிக்கு எட்டு ரோஜா இதழ்கள் எனச் செய்யவும்.

படம் 4: இந்த எட்டு இதழ்களை,  ஏற்கெனவே செய்துவைத்திருக்கும் லாலிபாப் கம்பியுடன் சேர்த்து நூல் சுற்றிக் கட்டி, ஒரு ரோஜாவாகச் செய்ய வும். இதேபோல ஏழு ரோஜாக்களைச் செய்து கொள்ளவும்.   

வாவ்... லாலிபாப் பொக்கே!

படம் 5: பிறகு, பச்சை நிற க்ரேப் பேப்பரை, இலை  வடிவத்தில் (படத்தில் காட்டியுள்ளதுபோல) வெட்டிக் கொள்ளவும். ஒரு ரோஜாவுக்கு நான்கு இலைகள் என்ற விகிதம் செய்து கொண்டு, அந்த ரோஜாக்களுடன் சேர்த்து நூல் சுற்றிக் கட்டவும்.

படம் 6:
செய்த  ஏழு ரோஜாக்களை ஒன்றாகச் சேர்த்து, ஃப்ளோரல் டேப் கொண்டு ஒட்டவும்.

படம் 7:
பொக்கே  கவர் ஒன்றில் இந்தப் பூங்கோத்தை வைத்தால், லாலிபாப் பொக்கே தயார்!