Published:Updated:

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

Published:Updated:
பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

பாப் டிலனுக்கு, இலக்கியத்துக்கும் கவிதைக்குமான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, சிலர் சற்றே கசப்பான புன்னகையுடன் பாப் காஃப்மேனையும் (Bob Kaufman)நினைத்துக்கொண்டார்கள். டிலனின் கவிதைகள் கவிதைகளே அல்ல; பாடல்கள் என்று கூச்சலிட்டவர்கள் பாப் காஃப்மேனைப் பற்றி என்ன சொல்வார்கள்?

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

பாப் காஃப்மேன் தனது கவிதைகளை ஒருபோதும் எழுதியதே இல்லை! அவருடைய கவிதைகள் எப்போதும் தன்னெழுச்சியாகப் பாடப்பட்டவை. இரவு விடுதிகளிலும், குடி இரவுகளிலும், போதைமருந்துக் கூடுகைகளிலும், ஏன்... தெருக்களிலும், கடும் போக்குவரத்து நெரிசல்களுக்கு நடுவே சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும்போதும் அவர் தனது கவிதைகளைப் பாடினார். நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்ப்படும் அறிமுகமற்ற மனிதர்களிடம் அவர் தனது கவிதைகளைச் சொல்லியிருக்கிறார். அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும்; தான் ஒரு கவியாகப் பெயர்பெற வேண்டும் என்றெல்லாம் அவர் நினைத்ததே இல்லை. உண்மையில் பெயரற்றுப்போவதே தனது லட்சியம் என்று அவர் சொல்லியதுண்டு. கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டபோது முற்றிலுமாக உலகத்திலிருந்து விலகி ஏறக்குறைய பத்தாண்டுகள் மௌனவிரதம் இருந்திருக்கிறார். பின்னர், யாரோ அவரது கவிதைகளைத் தொகுத்து; புத்தகமாக வெளிவந்து; அது பிரான்ஸில் பெரிய ரசிகர்களைப் பெற்றபோதுகூட (பிரான்ஸில் அவர் கருப்பு ரிம்பாட் என்று அழைக்கப்பட்டார்) அவரது வாழ்க்கை குறித்த அலட்சியம் மாறவில்லை. பிரான்ஸிலிருந்து ஒரு டி.வி, அவரைப் பற்றி ஆவணப் படம் எடுக்க அமெரிக்கா வந்தபோது அவர்கள் திரும்பிச் செல்லும் வரை பாப், அவர்களின் கண்ணிலேயே படாமல் மறைந்து திரிந்தார். இந்த ‘மறைந்து போவதற்கான ஏக்கம்’ அவரும் ஆலன் கின்ஸ்பெர்க்கும் தொடங்கிய  ‘பீட்’ தலைமுறை எனப்படும் ஹிப்பிகள் இயக்கத்திலிருந்து வந்திருக்கலாம்.உண்மையிலேயே அந்தத் தலைமுறையைக் குறிக்கும் ‘பீட்னிக்’ என்ற வார்த்தையே காஃப்மேன் அளித்ததுதான். அவரும் ஆலன் கின்ஸ்பெர்க்கும் சேர்ந்துதான் பீட்னிக் என்ற அந்தப் புகழ்பெற்ற ஹிப்பி பத்திரிகையைத் தொடங்கினார்கள். ஆனால், ஆலன் கின்ஸ்பெர்க் அளவுக்கு இன்று பாப் காஃப்மேன் பற்றிய அறிமுகம் குறைவு. தமிழில் இல்லவே இல்லை என்றுகூடச் சொல்லலாம். அதற்கு அவர் கறுப்பர் என்பதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். அப்போது அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் அனைவருமே தங்கள் பெயர்களின் அரசியலை அறிந்துகொள்ளத் தொடங்கியிருந்தார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட கறுப்பினத்தவர்களின் பெயர்களை, அவர்களது வெள்ளை முதலாளிகள் கவனமாக வைத்தார்கள். பெரும்பாலும் அவை ‘இந்த முதலாளியுடையவர்’ என்ற பொருளுடன் அவர்களின் பெயர்களின் பின்னே இணைந்தே இருக்கும். அல்லது அவர்கள் ‘விலங்குகள்’ போன்றவர்கள்  ‘குழந்தைத்தனமானவர்கள்’ என்ற பொருள்படும் ‘சீசர்’, ‘ரோமன்’ போன்ற பெயர்களாக இருக்கும். சிலர், இந்தப் பெயர்களிடமிருந்து தப்பிக்க மதம் மாறினார்கள். சிலர் ‘மால்கம் எக்ஸ்’ போலத் தங்களது பின்பெயரை அனாமியாக வைத்துக்கொண்டார்கள்.

பாப் காஃப்மேன் தன்னை மறைத்தொழுக, கூடுதல் காரணங்களும் இருந்தன. அவரது ரத்தத்தில் யூதக் கலப்பும் இருந்தது. அப்போது அமெரிக்காவில் கறுப்பினத்தவர் அளவுக்கு யூதர்களும் வெறுக்கப்பட்டார்கள். கூடவே, அவர் ஒரு மாலுமி வேறு. மாலுமிகள் அன்றைய அமெரிக்காவில் இந்தியாவின் தோட்டிகள்போல நடத்தப்பட்டார்கள். பார்க்கப்பட்டார்கள். வினோதமான ஓர் இரட்டை நிலை அவர்களைக் குறித்துச் சமூகத்தில் இருந்தது. அவர்கள் காட்டுமிராண்டிகள் என்பது போன்ற ஓர் ஒதுக்கல் உணர்வு இருந்தது. உண்மையில் அமெரிக்க வெள்ளையர்களுக்கு இந்த மாலுமிகள்தான் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவந்தார்கள். அடிமைகள் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. ஆனால், அவர்களைக் கொண்டுவந்த மனிதர்கள் மீது வெறுப்பு இருந்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

இதன் காரணமாகவே, பாப் காஃப்மேன் திரும்பத் திரும்ப அமெரிக்காவின் சட்ட ஆண்டைகளால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டார். கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது பச்சைய நாட்களில் சிறைகளில் உலரவிடப்பட்டார்.அவருக்குக் கட்டாயமான மனநோய் மருந்துகள் புகட்டப்பட்டன. ஆனால், பாப் காஃப்மேன் தனது கவிதைகளை உடைக்கவிடவில்லை. அவரது வாழ்வோடு ஒன்றாகக் கலந்துவிட்ட ஜாஸ் இசையை நிறுத்த அனுமதிக்கவில்லை. உண்மையில் அவரது பெரும்பாலான கவிதைகள் ஜாஸ் இசைக்குத் துணையாகவும் ஜாஸ் இசை குறித்தும் எழுதப்பட்டவையே. அப்போது ஜாஸ் இசை கறுப்பு நிறத்தவரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலை வடிவமாக எழுந்துவந்தது. ஜாஸ் இசையின் பிறப்பிடமாகக் கருதப்படும் நியூ ஆர்லியன்ஸில்தான் அவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் ஜாஸை, நமது பறை இசைபோலச் சொல்லலாம். ஆனால், ஜாஸ் இசை பெரும் கலைவடிவமாகப் பல்வேறு உணர்வுகளைச் சொல்லும் ஊடகமாக இன்று மாறி நிற்கிறது. ஜாஸ் இசைக் கலைஞர்கள் தவிர, ஜாஸ் கவிஞர்கள் என்று ஒரு பிரிவினரும் உருவாகி வந்தார்கள். ‘லாங்ஸ்டன் ஹ்யூஸ்’ அவர்களில் புகழ்பெற்றவர்.

காஃப்மேன், ஜாஸ் இசையை- நிறவெறி, போர்வெறி, ஆதிக்கவெறி, இனவெறித் ததும்பும்- முற்றிலும் குழந்தைகளின் மரணம் உட்பட எல்லாவற்றையும் நுகர்வுப் பண்டங்களாக மாற்றிவிட்ட முதலாளித்துவ உலகத்துக்கு- மாற்று உலகமாகக் கருதினார். உண்மையில் கீழ்க்காணும் அவரது இரண்டு கவிதைகள் ஜாஸ் இசையையே வாழ்க்கை என்று சொல்கின்றன. அதற்கு வெளியே இருப்பதெல்லாம் மரணம்தான்.

இதை நம்புங்கள், இளம் ஆப்பிள் விதைகளே
விம்மி விரியும் இளம் மார்பே !
நீல வானங்களில் நம்பிக்கை கொள்.
நீல சூட்டு அணிந்துகொண்டு
சமூகத்தின் ஆடைகளை நிரப்பும் பூச்சிகளில் அல்ல
மெதுவாக அசையும் ஜாஸ் இசையில் நம்பிக்கை வையுங்கள்
இரவை மிக நுண்ணியத் துண்டுகளாகக் கிழித்து
திரும்பவும் அதை மிகவும் சரியான வடிவங்களில் அடுக்கிவிடும் அதன் திறமை குறித்து
வெடிகுண்டுகளை மட்டுமே கண்டுபிடித்த நோய்கொண்ட கண்காணிப்பாளர்களை அல்ல.
இறந்த கவிகளின் குரல்கள் உங்கள் காதுகளில் ஒலிக்கட்டும்
பூசனம்பிடித்த தலையங்கங்களிலிருந்து கிறீச்சிடும் வாய்வீச்சுகளைவிட பலமாக
நூற்றாண்டுகளின் இசையைக் கேளுங்கள்
இந்தக் காளான் காலத்துக்கும் மேலாக..

2


தொடக்கத்தில், அந்த ஈரமான கதகதப்பான இருட்டறையில்
வெளியே வரத்துடித்துக்கொண்டு, வினோதமான குழாய்களைப் பிராண்டிக்கொண்டு
அவளது கூச்சல்களைக் கேட்டுக்கொண்டு, சிரித்துக்கொண்டு இருந்தோம்.
“பிறகு எங்களை நாங்கள் மன்னித்துக்கொண்டோம்
அப்போது எங்களுக்குத் தெரியவில்லை”

அப்போது ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது
“இரு. போகாதே !’’

பொறுமையின்றி அப்பாவிகளாய் ஓடிவந்தோம்
நாம் இந்தத் தாய் தந்தையர் உலகத்துக்கு
குருதியின், நம்பிக்கையின் சிரிக்கும் கட்டிகள்.
எங்கே சிரிப்பு அந்நியமாக உள்ளதோ அங்கே
ஆகவே நாம் அழக் கற்றோம் .
அவர்கள் மகிழ்வடைந்து நம்மை மனிதர் என்று அறிவித்தார்கள்

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்

ரகசிய ஜாஸ் பெருமூச்சுவிட்டது
பழக்கமான குரல் மீண்டும் கூவி அழைத்தது
“பொறு. சிலர் தீயவர்கள். சிலர் உங்களை வெறுப்பார்கள்”

நாம் சிரித்தோம், ஓடினோம்
“அதுதான். அந்த ஜாஸ் மறுபடியும் உளறுகிறது”

ஜாஸ் பறந்துகொண்டிருந்த இரவில்
நாம் ஒருவரை ஒருவர் தள்ளினோம். பிடித்தோம்.

ஆனால், சட்டென அவர்கள் ஓர் எளிய சத்தத்தைக் கேட்க முடியாத அளவுக்கு
வேலையுடையவர்கள் ஆனார்கள்
வாழ்ந்த இடத்திலேயே இறந்துகொண்டிருந்த
மனிதர்களின் வாய்களில் மண்ணைத் திணிக்கும் வேலை அவர்களுக்கு இருந்தது
பதக்கங்களைச் சம்பாதிக்கும் வேலை அவர்களுக்கு நிறைய இருந்தது
கைவிடப்பட்ட வீதிமுனைகளில் குழந்தைகளைக் கொல்லும் வேலை
அவர்களது தந்தையை ஆக்கிரமித்து அன்னையரை வல்லுறவுக்குள்ளாக்கும் அதிகவேலை
அதிகவேலைகொண்ட மானுடர் நாம்
ஜப்பானியக் குழந்தைகள் எரிவதை அட்டாமிக் கலர் சினிமாஸ்கோப்பில்
படம்பிடிக்கும் வேலை
ஸ்டீரியோ அலறல்களுடன்

பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே!” - போகன் சங்கர்


எந்த நூறு சதவிகிதச் சிவப்பு ரத்தக் காட்டுமிராண்டி
ஜாஸ் கேட்டுக்கொண்டு தனது நேரத்தை விரயம் செய்வான்,
சுற்றிலும் முக்கியமான பல விஷயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது ?
ஆனால், மிகுந்த தகுதிவாய்ந்த கொலைகாரர்கள்கூட ஓய்வெடுக்க வேண்டும்
ஆகவே, அவர்கள் நமது ரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் அமர்ந்தார்கள்
நமது மரணத்தில் புதைந்த
தொலைந்துபோன ஜாஸ் இசையைக் கேட்டார்கள்
அவர்கள் வாழ்வின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள்
நம்மிடமிருந்து மிக விலகிப்போனதால்
நமது சீழ்க்கை ஒலிகள், ஆடல், பாடல், சிந்தனைகள் எல்லாம் அவர்களை வெறுக்கச் செய்தன

அவர்கள் அதற்காக அழுதார்கள் அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்
அதைக் காதலித்தார்கள், முத்தமிட்டார்கள், இணைந்துகொண்டார்கள்
நாம் அதைக் குடித்தோம், புகைத்தோம், அதை உண்டு அதனோடு உறங்கினோம்
அவர்கள் நமது பெண்களை உறவுகொள்ளும்போது
அதை அபத்தமான பின்னலிட்ட கவுன்களுக்குப் பதிலாக
அணியச் செய்தார்கள்
அப்போது அந்தக் கொடிய தருணங்களில்
வேறு யாரையும் அனுமதிக்காத நமது ரகசியத் தருணங்களில்
நமது மிக இருளான நினைவுகள் வரும்போது
குற்ற உணர்வுடன் நாம் திரும்பவும் காலத்தில் சுருண்டுகொள்ளும்போது
அவர்கள் ஒரு பழகிய ஓசையைக் கேட்கிறார்கள்
ஜாஸ் இசை...
பிராண்டியபடி, தோண்டிக்கொண்டு, தனக்குள் முனகிக்கொண்டு, தள்ளாடிக்கொண்டு
அவர்கள் அதைக் கேட்கிறார்கள்
பின்பு இறந்து போகிறார்கள்.

பாப் காஃப்மேன், அமெரிக்காவின் அறியப்படாத கவிப் பாடகன், இசைப் பாடகன்...பிறப்பு: 18 - ஏப்ரல் 1925. இரண்டாவது முறையாக ‘நீண்ட மவுனத்துக்குள்’ சென்றது 12 - ஜனவரி 1986. இடையில், பிறர் தொகுத்த ஏழு கவிதைத் தொகுப்புகள், யாரும் தொகுக்காது கைவிட்டுப்போன எண்ணற்ற ஜாஸ் இசைப் பாடல்கள், நீண்ட சிறைவாசங்கள், மது, போதை மருந்துகள், மின்னதிர்ச்சி சிகிச்சைகள், மேலும், முற்றிலுமாக இந்த உலகின் மீது தனது முதுகைத் திருப்பிக்கொள்ள எண்ணற்ற முயற்சிகள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism