ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

முதுமைக்கு மரியாதை!

தோழியின் வீட்டுக்கு அண்மையில் சென்றிருந்தேன். சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மாமியாரை ஹாலில் படுக்க வைத்திருந்தாள். ''உங்கள் வீட்டில்தான் பல அறைகள் இருக்கின்றனவே.. ஏன் இப்படி விருந்தினர்கள் வந்து அமரும் இடத்தில் படுக்க வைத்திருக்கிறாய்?’' என்று அக்கறையோடு கேட்டேன். அவள் சொன்ன பதில், என்னைச் சிந்திக்க வைத்துவிட்டது. ''வீட்டில் அனைவரின் கண் பார்வையும் படும் இடத்தில் அவர் இருந்தால்தான், அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். தனி அறையில் இருந்தால் அவருக்கும் மன உளைச்சல் ஏற்படும். அதோடு, இப்படி ஹாலில் இருக்கும்போது, விருந்தினர்கள் நான்கு பேரின் முகத்தைப் பார்ப்பது ஆறுதலாகவும் இருக்கும்'' என்றாள் தோழி. இந்தப் பதிலில் இருந்த உண்மை, முதியவர்களை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கான கவுன்சிலிங்!

- பா.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை

ஆபரண ஆபத்து!

பக்கத்து வீட்டுக்காரரின் சகோதரி, வெளியூரிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தையுடன் சகோதரன் வீட்டுக்கு வந்திருந்தார். குழந்தை கழுத்தில் தங்க செயின் அணிந்திருந்தது. வீட்டில் உறவினர்கள் நிறைய பேர் வந்திருந்ததால் எல்லோரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, உள்ளே வந்தபோது கழுத்திலிருந்த செயினைக் காணவில்லை. குழந்தைக்கும் எந்த விவரமும் சொல்லத் தெரியவில்லை. தேடிக் களைத்த பின், ''செயின் இல்லாமல் போனால்... புகுந்த வீட்டில் பெரிய பிரச்னை வரும்'’ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார். வேறுவழியின்றி அதேபோல் செயின் வாங்கிக் கொடுத்து, தங்கையை ஊருக்கு அனுப்பி வைத்தார் அண்ணன்.

தங்கம் விற்கும் விலையில், விவரம் தெரியாத குழந்தைகளுக்கு நகைகளைப் போட்டுவிட்டு, பிறகு வருந்திக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

- ஜி.ராமநாதன், மேட்டுப்பாளையம்

ரயில்வேயின் கவனத்துக்கு..!

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். பயண நாளன்று, ஸ்டேஷனுக்குச் சென்றபோது, 'அந்த வண்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டி.வி., பேப்பர்களில் அறிவித்துள்ளோம்' என்று சொல்லி, கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

உடனடியாக மணியாச்சி அல்லது மதுரை சென்றாலும், முன்பதிவு இல்லாமல் வேறு ரயில்களில் பயணிப்பது சிரமமான விஷயம். வயதானவர்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு, ரொம்பவே சிரமப்பட்டோம்.

முன்பதிவு விண்ணப்பத்தில் முகவரி, தொலைபேசி எண் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்திருக்கும் இக்காலத்தில், எஸ்.எம்.எஸ். மூலமாகவாவது தகவலை அனுப்பி இருக்கலாம் அல்லது மாற்று ஏற்பாடு செய்து இருக்கலாமே ரயில்வே நிர்வாகம்!

பின்குறிப்பு: நாமும் பயணத் தேதிக்கு சில தினங்களுக்கு முன்பாகவே, இதுபோன்ற விஷயங்களை உறுதி செய்துகொள்வது அவசியம்!

- சீதாலஷ்மி, ஸ்ரீரங்கம்

அக்கம் பக்கம் பாருடா... சின்ன ராசா!

வயதான அம்மா, அப்பாவை சொந்த ஊரில் தனியே விட்டுவிட்டு, தொழிலுக்காக பக்கத்து ஊரில் வசித்து வருகிறோம். ஒரு நாள் அவர்களைப் பார்த்துவிட்டு பஸ்ஸில் திரும்பியபோது, நம்பிக்கைக்கு பாத்திரமான உறவினர் ஒருவரைச் சந்தித்தேன். ஒரே ஸீட்டில் அமர்ந்து... அம்மா, அப்பா ஊரில் தனியாக இருப்பதற்கான காரணம், எங்களுக்கும், உறவினர்களுக்கும் நடக்கும் சொத்துத் தகராறு பற்றியெல்லாம் ஆழமாக பேசிக் கொண்டே வந்தோம். அப்பா, அம்மா வயதானவர்கள் என்பதால், சொத்து பத்திரங்கள் மற்றும் நகைகளையெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் வீட்டிலேயே தனியாக பத்திரப்படுத்தி வைத்திருப்பதைப் பற்றியும்கூட அவரிடம் சொன்னேன்.

சில நாட்களில் அம்மாவிடமிருந்து அதிர்ச்சி போன். வீட்டுக்கு திருடன் வந்து, நகை வைத்திருந்த பெட்டியை எடுக்க முயற்சித்து பிடிபட்டுள்ளான்; பிடிபட்டவன் பக்கத்து ஊர்க்காரன். 'பெட்டி வைக்கப்பட்டிருந்து, யாருமே யூகிக்க முடியாத இடம், இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்று விசாரித்ததில்தான் தெரிந்தது, எங்கள் பஸ் பேச்சு தந்த வினை என்று. ஆம், பஸ் பயணத்தில் நானும் உறவினரும் அமர்ந்திருந்தது மூன்று பேர் ஸீட். அதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு நான் பேசியிருக்கிறேன். பக்கத்தில் அமர்ந்து மொத்தத்தையும் கேட்ட மூன்றாவது நபர்தான் அந்தத் திருடன்!

இடம், பொருள் தெரிந்து பேசுவதன் அவசியம் அப்போதுதான் புரிந்தது!

- ராஜலஷ்மி, பெரம்பலூர்