Published:Updated:

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

டூயட்

பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

ண்பதுகளில் மரத்தைச் சுற்றிச் சுற்றி டூயட் ஆடினார்கள் என்றால், இப்போது வெளிநாட்டு வீதிகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழ் சினிமா ஹீரோக்களும் ஹீரோயின்களும். ‘இதேபோல நாம் டூயட் ஆடினால் எப்படி இருக்கும்?’ என்கிற எண்ணம் எல்லோருக்குமே ஒருமுறையாவது வந்துபோகும். “நோ பிராப்ளம், உங்களையும் டூயட் ஆட வைக்கிறோம். நீங்களும் ஹீரோ- ஹீரோயின்தான்” என்கிறார்கள் ‘ஸ்டுடியோ வைபவா’வின் உரிமையாளர்கள் பிரசன்னா வைபவாவும் வினோத் வைபவாவும். எப்படி என்கிறீர்களா? அவர்களிடமே கேட்போம்.  

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

“அந்தக் காலத்தில் கல்யாண போட்டோன்னா தாலி கட்டுறது, ஆசீர்வாதம் வாங்குறது, குரூப்பா நின்னு ஃபேமிலி போட்டோ எடுக்கிறதுனு இருந்தது. போட்டோவில் இருந்து வீடியோவுக்கு மாறினப்பவும் அதே காட்சிகள்தான். அந்தக் கல்யாணம் நடக்கிறப்ப எந்தப் பாடல்கள் எல்லாம் பிரபலமோ, அந்தப் பாடல்களை வீடியோ பின்னணியில் ஒலிக்க விட்டுடுவாங்க. நாங்க அதையெல்லாம் தாண்டி, உங்க கல்யாணத்தையே அழகான சினிமாவா மாத்திடுவோம். அந்த மேஜிக்தான் எங்க ஸ்பெஷல்!” என்று சிறிய புன்னகையுடன் தொடங்குகிறார் பிரசன்னா.  

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

“சின்ன வயசுல இருந்தே போட்டோகிராபி யில் ஆர்வம் அதிகம். அதுக்காக முறைப்படி படிக்கவே இல்லை. ஜாலிக்காக கேமராவைத் தூக்கினேன். இதே கதைதான் வினோத்துக்கும். ரெண்டு பேரும் சேர்ந்து பல படங்களைச் சுட்டுத்தள்ளினோம். வேட்டை வேட்கையா மாறுச்சு. ஃபேஷன் போட்டோகிராபி, வெடிங் போட்டோகிராபி, சினிமாட்டிக் போட்டோகிராபினு 14 வருடங் களா விதவிதமா பண்றோம். ‘ஸ்டுடியோ வைபவா’ நிறுவனத்தை ஆரம்பிச்சு சென்னை, கோவை, பெங்களூர்னு மூணு இடங்களில் நடத்துறோம்” என்று பிரசன்னா விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் வினோத்.    

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

“எங்களுக்கு சினிமா ஸ்டில்ஸ் எடுக்கிற வாய்ப்புகூட வந்துச்சு. ஆனா, அதில் பெரிசா ஆர்வமில்லை. ஆனா, ‘நாம எடுக்கிற போட்டோஸே சினிமா ஸ்டைலில் எடுத்தா என்ன’ன்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் சினிமாட்டிக் போட்டோகிராபி. பொதுவா ஒரு சினிமா பார்க்கும்போது ‘இந்தப் பாடல் காட்சியோட லொகேஷன் நல்லா இருக்கே, இங்கே நாம இருந்தா இன்னும் நல்லா இருக்குமே’னு தோணும்ல? அந்த அழகான கனவை அசத்தலா நிறைவேத்துறதுதான் எங்க வேலை” என்கிறார் வினோத்.

சினிமாட்டிக் போட்டோகிராபி உருவாகும் விதம் குறித்து விளக்கத் தொடங்கினார் பிரசன்னா.

“வழக்கமா மண்டபத்தில் போட்டோ எடுப்பதைவிட அவுட்டோரில் போட்டோ எடுப்பதைதான் பலரும் விரும்புறாங்க. முதலில் திருமண ஜோடியிடம் டிஸ்கஸ் செய்வோம். சிலர் இந்த இடத்தில் ஷூட்டிங் எடுத்தால் நல்லாயிருக்கும்னு சொல்வாங்க. சில பேர், ‘எந்த இடமா இருந்தாலும் பரவாயில்லை’னு சொல்வாங்க. முதலில் இடங்களைத் தேர்ந்தெடுத்து, அதுக்கேத்த உடைகளைத் தேர்ந்தெடுப்போம். உதாரணத்துக்கு ஹம்பி மாதிரியான வரலாற்று முக்கியத்துவம்கொண்ட
இடங்கள்னா, அதற்கு ஏத்தமாதிரி லெஹெங்கா அல்லது இண்டோ-வெஸ்டர்ன் காஸ்டியூம்ஸ் போடச் சொல்லுவோம். பீச்சில் எடுப்பதாக இருந்தால் ஃப்ளோரல் டிசைனில் காஸ்ட்யூம்ஸ் தேர்ந்தெடுப்போம். இயற்கை கொஞ்சும் இடங்கள்னா நீளமான கவுன், ஜீன்ஸ் மாதிரியான காஸ்ட்யூம்ஸ் போடச் சொல்வோம்.    

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

அடுத்ததா மேக்கப்பில் கவனம் செலுத்துவோம். இடத்துக்கும் உடைக்கும் தகுந்த மேக்கப் இருக்கணும்னு சொல்லிடுவோம். அவங்களுக்கு மேக்கப் போடத்தெரிந்தால் அவங்களே போட்டுக்குவாங்க. இல்லைன்னா, நாங்களே சில மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களைப் பரிந்துரைப்போம். இது எல்லாம் முடிந்த பிறகு அவங்களை லொகேஷனுக்கு அழைத்துச் சென்று ஷூட் பண்ணுவோம்.

அதுக்கு முன்னாடி போட்டோ ஷூட்டுக்கு, அந்த ஜோடியை மனதளவில் தயாராக்குவதுதான் எங்களுக்கான டாஸ்க். அரேஞ்ச்டு மேரேஜ் தம்பதிகளுக்குள் அவ்வளவு பழக்கமிருக்காது. அதனால் போட்டோ எடுக்க ரொம்பவே கூச்சப்படுவாங்க. அவங்க செட்டில் ஆகறதுக்கு அவகாசம் கொடுப்போம். அதுக்கப்புறம்தான் ஷூட்டிங்கே ஆரம்பிப்போம். சில நேரம் நாங்க எதிர்பார்த்த மாதிரி வரலைனா, ‘வந்தவரைக்கும் போதும்’னு விட்டுட மாட்டோம். மறுபடி மறுபடி ஷூட் செய்து, பிரமாதமான அவுட்புட்டைக் கொண்டுவருவோம்” என்றார் பிரசன்னா.  

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

இன்னும் நுட்பமாக விவரிக்கிறார் வினோத்.

“சினிமாட்டிக் போட்டோஸ்னு சொன்னதும் சில பேர் அவங்களாகவே கூகுளில் தேடி, ‘இந்த மாதிரி போஸில் எங்களை போட்டோ எடுங்க’னு சொல்வாங்க. எல்லோருக்குமே எல்லா போஸும் பொருந்தாது. அவரவர் உடல்வாகுக்குத் தகுந்தமாதிரி போஸ் கொடுத்தாத்தான் நல்லா இருக்கும். ஆனா, அது அவங்களுக்குப் புரியறதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும். முதலில் அவங்களை இயல்பாகப் பேசவிடுவோம். அதிலேயே பல அழகான தருணங்கள் க்ளிக் செய்துடுவோம். பிறகு, அழகான போஸைத் தேர்ந்தெடுத்து, அதை அவங்கக்கிட்ட இருந்து வரவழைப்போம்.

ஷூட்டிங்கில் பெரிய பிரச்னையே கிளைமேட்தான். அதிக குளிர் உள்ள இடங்களிலும் எடுத்திருக்கோம். அதிக வெயில் உள்ள இடங்களிலும் எடுத்திருக்கோம். ஒரு தம்பதிக்கு காஷ்மீர்ல போஸ்ட் வெட்டிங் ஷூட் பண்ணப் போயிருந்தோம்.  அப்போ அங்கே அதிக பனி மூட்டமும் குளிரும் இருந்தது. இருபதாயிரம் அடி உயரமுள்ள ஒரு மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டும். அந்த மலைக்கு வின்ச் (winch) மூலமாகச் சென்றுதான் புகைப்படங்கள் எடுத்தோம். பின்னர் மலையிலிருந்து கீழே இறங்குவதற்கு வின்ச்சில் ஏறப்போகும் நேரத்தில் மழை வந்ததால் அந்தச் சேவையை நிறுத்திட்டாங்க. நல்ல மழை ஒருபக்கம், பனி ஒருபக்கம். வேற வழியே இல்லாமல் அங்கிருந்து நடந்தே கீழே வந்தோம். இப்போ நினைச்சாலும் உதறுது. பாவம், எங்களுடன் அந்த ஜோடியும் கஷ்டப்பட்டார்கள். இருபதாயிரம் அடி உயரமானதால் கீழே வந்துசேர 12 மணி நேரம் ஆகியது. எங்க கேமரா லென்ஸ்சும் உடைஞ்சு ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஆனா, அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்திடுச்சு. அதிக வெயில் உள்ள ஜெய்ப்பூர்ல ஷூட் பண்ணதும் பெரிய சவாலா இருந்தது” என்றார் சிரித்தபடி.  

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!
நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

``ப்ரீ வெடிங் மற்றும் போஸ்ட் வெடிங் போட்டோ ஷூட்டுக்கு, சினிமாவில் டூயட் சாங் எடுக்கும் லொக்கேஷன்களுக்குச் சென்று எடுத்துள்ளோம். மணமக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தில் எந்த இடமாக இருந்தாலும் போய் ஷூட் பண்ணுவோம். ஒரு ஜோடிக்கு ‘ஹெலனா’ பாடலில் வரும் தாய்லாந்தில் உள்ள புக்கெட்டுக்குச் சென்று ஷூட் செய்ய பிளான் போட்டோம். அங்க ஒவ்வோர் இடத்திலும் ஷூட் செய்வதற்குக் குறைவான நேரம்தான் கிடைச்சது. அந்த நேரத்துக்குள்ள ஷூட் முடிக்கறது சிரமமா இருந்துச்சு. 

சில ஜோடிகள் அவங்க பட்ஜெட்டு ஏத்தமாதிரி சில நாடுகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்வாங்க. அவங்களுக்கு அந்த நாட்டைப் பத்தித் தெரியுமே தவிர, அங்க எந்தெந்த இடங்கள் அழகானவை, ஷூட் பண்ணப் பொருத்தமானவைனு தெரியாது. அதனால் அந்த நாட்டுக்குச் சென்றதும், முதலில் நாங்கள் அந்த ஏரியாவைச் சுத்திப் பார்த்துட்டு, அழகான இடங்களைத் செலக்ட் செய்வோம். அதுக்கப்புறம் அவங்களை அழைச்சுட்டுப்போய் ஷூட் பண்ணுவோம். இதனால் நேரம் மிச்சம்” என்று தங்கள் திட்டமிடுதலைச் சொல்கிறார் பிரசன்னா.   

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

“சினிமாவுக்கு என்னென்ன கருவிகளைப் பயன்படுத்துறாங்களோ, அதையேதான் நாங்களும் பயன்படுத்துறோம். லென்ஸ்கள், லைட்டுகள்னு நாங்க உபயோகிக்கும் எல்லாமே ஹை லெவல் எக்யூப்மெண்ட்தான். எடிட் செய்வது கூட திரைப்படங்களில் வருவது போலவே தரமானதா இருக்கும்” எனத் தங்கள் வேலையின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறார் வினோத்.

திருமணம் தாண்டி, சமீபத்தில் குழந்தை பெறவிருக்கும் தம்பதிகளுக்கு, ப்ரீ டெலிவரி வீடியோவாக... ‘ஓ மை டியர் ஜூனியர்’ என்றொரு பாடலை இயற்றி இயக்கியிருக்கிறார்களாம். காலத்துக்கு ஏற்றவாறு புதுமைகளைப் புகுத்தி, மனதுக்கு நெருக்கமான நிகழ்வுகளை அழகியல்கொண்டு இழைத்துப் பிரமிக்க வைக்கிறார்கள் இந்த ஜோடி கலைஞர்கள்!

- சு.கற்பகம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு