பெரியவர்கள் திருமண ஏற்பாடுகளை ஜரூராகக் கவனித்துக்கொண்டிருக்க, மணமக்கள் தங்களின் திருமணத்தையொட்டிய கனவுகளை நனவாக்கும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் நிற்கிறார்கள் சென்னை, அரும்பாக்கத்தில் இருக்கும் ‘ஈஸி வெட்’ நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் மற்றும் பானுசந்தர். “ரியல் லைஃப் ஹீரோ, ஹீரோயின்களின் கனவுகளை நிஜமாக்கித் தருவது மட்டுமில்லாமல், அவர்களின் க்யூட் தருணங்களை போட்டோ, வீடியோ எனக் காலத்துக்கும் நிலைத்துநிற்கும் பொக்கிஷமாக்கித் தருவதுதான் எங்களின் சவால்’’ என்கிறார்கள் கிராமப் பின்னணியிலிருந்து வந்த இவ்விரு இன்ஜினீயர்களும். மூன்று வருடங்களாக வெடிங் மேனேஜ்மென்ட் துறையில் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“நாங்க சமீபத்தில் முடித்த புராஜெக்ட் இது. மணமகன் வெளிநாட்டில் வேலை பார்த்துட்டிருந்தார். கிராமத்துப் பாரம்பர்யத்துடன் தன்னோட திருமணம் நடக்கணும்னு விருப்பப்பட்டார். திருமணத்துக்கு ஐந்து நாள்களுக்கு முன்தான் அவரால இங்கே வர முடியும் என்ற சூழ்நிலை. அவர் வந்ததுக்கு அப்புறம் அசுர வேகத்தில் மணமக்கள் ஆடைகள், நகைகள், மேக்கப், திருமண மண்டப அலங்காரம் உள்ளிட்ட அத்தனை ஏற்பாடுகளையும் ஐந்தே நாள்களுக்குள் செய்து கொடுத்தோம். மகிழ்ச்சி வெள்ளம் பெருகியது, அந்த மணவீட்டாருக்கு’’ என்கிறார் பானுசந்தர் பெருமையுடன்.

“எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் முடிச்சுட்டு ஐ.டி நிறுவனத்துல வேலை பார்த்துட்டிருந்தேன். அந்த வொர்க் பிரஷர், ‘வேற ஏதாச்சும் செய்யலாம்’னு என்னை யோசிக்க வெச்சது. என்னோட ரூம்மேட், ஃப்ரெண்ட்ஸ்னு என்னைப்போலவே சிந்திக்கிற சிலர் ஒண்ணாச் சேர்ந்து யோசிச்சோம். அதோட ஃபைனல் புராடக்ட்தான், ஈஸி வெட்’’ என்ற தீபக், “மினி பட்ஜெட், மேக்ஸி பட்ஜெட்னு பலவிதமான வாடிக்கையாளர்கள் எங்களை அணுகுறாங்க. திருமணத்துக்குக் குண்டூசி வாங்கறதில் தொடங்கி ஒவ்வொண்ணுக்கும் பெஸ்ட் யாருன்னு ஒரு லிஸ்ட்டே வெச்சிருக்கோம். வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு மேட்ச் ஆகிறவங்களை லிங்க் செய்து கொடுப்போம்.

இன்னொரு பக்கம், கான்செப்ட் வெடிங். மண்டப வாயிலில் தொடங்கி எல்லாத்தையும் கான்செப்ட்டுக்கு ஏற்ப, அதேசமயம் வித்தியாசமா செய்து கொடுப்போம். க்ரியேட்டிவிட்டிதான் எங்களோட பலமே!

இப்படி வெடிங் மேனேஜ்மென்ட் பயணத்தில் சீராகச் சென்றுகொண்டிருந்த எங்களை, ப்ரீ வெடிங் கான்செப்ட்டில் கவனம் செலுத்த வெச்சது, மணப்பெண்களோட கல்யாணக் கனவுகள்தான். பிரைடல் மேக்கப் மற்றும் காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கமான விஷயம். ‘பாகுபலி’, ‘பிக் பாஸ்’னு கான்செப்ட் ஷூட்தான் இப்போ ட்ரெண்டு.

சமீபத்தில் ‘பிக் பாஸ்’ ஸ்டைல்ல ப்ரீ வெடிங் கான்செப்ட் ஷூட் செய்தோம். இன்ட்ரஸ்டிங்’’ என்றார்.

அந்தக் காட்சி திரையில் விரிகிறது. ஒரு வீட்டின் முன்னால் ‘பிக் பாஸ்’ பேனர். ‘உங்களுக்காக ஒரு குறும்படம்’ என கமலின் குரல் ஒலிக்கிறது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவின் ‘கொக்கு நெட்டக் கொக்கு’ பாடலுக்குப் பெண் தன் தோழிகளுடன் நடனம் ஆடும் வீடியோ, போட்டோ ஷூட் என கலகலவென இருக்கிறது வீடியோ.

மணப்பெண்ணுக்கு பாகுபலியில் அனுஷ்கா அணிந்திருந்த அதே மயில் வண்ணப் பட்டு, பிளவுஸ், நகைகள் என உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்து ‘தேவசேனா’வாக மாற்றிடும் ஒப்பனை நடக்கிறது. அரண்மனைப் போன்ற ஒரு பின்னணியில் நடக்கிறது இந்த ‘பாகுபலி’ கான்செப்ட் ஷூட்.

“இந்த ‘பாகுபலி’ கான்செப்ட்டுக்காக வட மாநிலத்துல இருந்து நகைகள் வரவழைத்து, ஹேர் ஸ்டைலிலிருந்து டிரஸ்ஸிங் வரை ‘தேவசேனா’வை கொண்டுவர மெனக்கிட்டதுன்னு நிறைய வொர்க் செய்திருக்கோம். ஆனால், ஷூட் முடிந்ததும் மணப்பெண்ணின் கண்களில் கனவு நனவாகிவிட்ட மகிழ்ச்சி.

அதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் பரவசமானார். இதுபோல் வாடிக்கையாளரின் திருப்தியைப் பார்க்கும்போது சோர்வெல்லாம் போய் உற்சாகம் மட்டும்தான் மனசுல நிக்கும்’’ என்கிறார் தீபக்.

“இப்படி ஒவ்வொரு திருமணத்துக்கும் ஒரு கனவு கான்செப்ட்னு வேலை சுவாரஸ்யமா போயிட்டிருக்கு. இருந்தாலும் பொண்ணுங்களோட ‘டிரீம் போட்டோகிராபி’ எங்களுக்குக் கொஞ்சம் சவாலாதான் இருக்கு. இன்னும் என்னென்ன கான்செப்ட் எல்லாம் கேட்க போறாங்களோ!’’ என்று சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார் பானுசந்தர்.

- யாழ் ஸ்ரீதேவி