Published:Updated:

வார்த்தை வசீகரா!

வார்த்தை வசீகரா!
பிரீமியம் ஸ்டோரி
வார்த்தை வசீகரா!

Engliஷ் Wingliஷ்தீபா ராம்

வார்த்தை வசீகரா!

Engliஷ் Wingliஷ்தீபா ராம்

Published:Updated:
வார்த்தை வசீகரா!
பிரீமியம் ஸ்டோரி
வார்த்தை வசீகரா!

ரு சார்ட் வரைபடம் (Chart image) அல்லது கிராபிக்ஸ் மூலம் முக்கியமான சில புள்ளிவிவரங்களை அலசும் மிகச்சிறிய செய்தித் தொகுப்புக்குப் பெயர் `Charticle'. `Chart’ மற்றும் `Article’ ஆகிய இரு வார்த்தைகளின் சங்கமமே இது!

வார்த்தை வசீகரா!

* இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா வடிவத்தில் உடல் முழுவதும் மறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரு நீச்சல் உடைதான் `Burkini' or  `Burquini'. இந்த வார்த்தை `burqa' and `bikini' என்பதன் கலவை. Burkini-யில் முடி மற்றும் கழுத்தை மூடுவதற்குக்கூட `Hood' எனப்படும் அரை தொப்பி வடிவம் இருக்கும்.

* மிகப் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து வெளிவர மேற்கொள்ளும் ஒரு சிறிய இளைப்பாறலே `Chillaxing'. `chilling', `relaxing' என்ற வார்த்தைகளின் திரிபு Chillaxing.

* Icon என்பது, கணினியில் காணப்படும் சிறிய அடையாளப் படம். எடுத்துக்காட்டாக, Facebook எனும் முகநூலின் ஐகான் 'F' எனும் வெள்ளை எழுத்தில் இருப்பதை நாம் அறிவோம். ஒருவருக்கு மிகவும் பிடித்த Favourite Iconதான் `Favicon'. உங்களுக்குப் பிடித்த வலைதளத்தை Bookmark செய்ய Favicon-ஐப் பயன் படுத்தலாமே!

* தனி ஒருவரைக்கொண்டு இயங்குவதைப் போல போலி வலைதள முகவரியுடன் இயங்கும் ஏமாற்று நிறுவனத்தின் வலைப்பக்கம்தான் Flog. A fake blog என்பதன் சுருக்கம்தான் `Flog'.

* சுவையான உணவைப் பற்றிச் சிலாகித்து, விரிவான சமையல் குறிப்புடன் தங்களது தனிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்து எழுதும் கட்டுரைதான் `Foodoir' (`food' and `memoir').

* தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் சிறிய காணொலிக் காட்சிகளாக (Short video) இணையத்தில் ஒளிபரப்பு செய்வதே `Webisode' (web + episode).  பிரபலமான தொலைக்காட்சி சீரியல்கள் இன்றைக்கு நேயர்களுக்காக Webisode-களாக உலவுவதை நாம் காணலாம்.

* Skort  - பெண்கள் அணியும் வித்தியாச மான ஓர் ஆடையான இது, பார்ப்பதற்கு skirt போலவே இருக்கும். அதோடு, Shorts போல நடுவில் ஒரு பிரிவு இருக்கும்.

* வேலை ஏதும் செய்யாமல் விளையாட்டு வேடிக்கைகளில் பொழுதைக் கழித்து, அதனால் சுகம் காணும் சிலரை `Funemployed' எனக் கேலியாகச் சொல்வதுண்டு. `fun' and `unemployed' ஆகிய இரு வேறு வார்த்தைகளின் கலவையே `Funemployed'.

இதுபோலத்தான் ஆங்கிலத்தில் புதிது புதிதாகத் தோன்றும் புதிய சொற்கள், பல ஆங்கில வேர்ச்சொற்களிலிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism