Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

ஓவியங்கள் சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

ஓவியங்கள் சேகர்

Published:Updated:

 எங்கேயும் எப்போதும்!

##~##

சமீபத்தில் பஸ் ஸ்டாண்டில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது... என்னருகில் ஓர் இளம்பெண் வந்தமர்ந்தாள். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தவள், அப்படியே மயங்கிச் சரிந்தாள். பதற்றமடைந்த நான், அவளுடைய பையில் ஏதாவது தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை; என்னிடமும் இல்லை. அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கிக் கொடுத்து அவளை சுயநினைவுக்குக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. விசாரித்தால், ''நான் கர்ப்பமா இருக்கேன். டாக்டர்கிட்ட செக்கப்புக்குப் போயிட்டு வீட்டுக்குத் திரும்பிட்டு இருந்தப்போதான் இப்படி ஆயிடுச்சு'' என்றாள் பரிதாபமாக. '’இப்படித் தனியா வரலாமாம்மா?'' என்று கடிந்துகொண்டதற்கு, ''இல்லம்மா... என் வீட்டுக்காரர் ஹாஸ்பிட்டல் வரைக்கும் வந்துட்டு, அங்கேயிருந்து ஆபீஸ் போயிட்டார். என்ன பண்றது..?'' என்றாள் இயலாமையுடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவங்கள் பேசுகின்றன !

தனிக்குடித்தனங்கள் அதிகரித்துவிட்டதன் விளைவு இது. ''கர்ப்ப காலத்தில் எங்கேயும், எப்போதும் துணையுடன் போய் வாம்மா. தண்ணீர் பாட்டில் உடன் இருக்கட்டும்'' என்றேன் ஓர் தாயாக. பாதுகாப்பு என்பது நம் கைகளில்தானே இருக்கிறது சகோதரிகளே?!

- பா.முத்து மாணிக்கம், பட்டுக்கோட்டை

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்!  

அனுபவங்கள் பேசுகின்றன !

என் செல்போனில், நான் ஆக்டிவேட் செய்யாமலேயே பல சர்வீஸ்களை ஆக்டிவேட் செய்துள்ளதாகக் கூறி பணம் பிடிப்பதை, தோழியிடம் கூறினேன். உடனே அவள் அந்த செல்போன் நிறுவனத்தின் புகார் பிரிவுக்குப் போன் செய்து, ''ஏன் இப்படி செய்கிறீர்கள்..?'’ என்றாள். அங்கிருந்தவர்களோ... ''நீங்கள்தான் ஆக்டிவேட் செய்துள்ளீர்கள்' என்று வலுவாகக் கூறியதுடன், அதற்குண்டான பணத்தை ரிட்டர்ன் செய்ய முடியாது என்றும் கண்டிப்போடு கூறிவிட்டனர். என் தோழி உடனே, ''நீங்கள் எங்களை ஏமாற்றியதாக 'டிராய்’க்கு (TRAI - Telecom Regulatory Authority of India)மெயில் அனுப்புவேன்' என்றாள் விடாமல். உடனே, ''உயர் அதிகாரிக்கு உங்கள் போனை டிரான்ஸ்ஃபர் செய்கிறேன்...'’ என்று எதிர்முனை பணிய, லைனில் வந்த உயர் அதிகாரி, எங்கள் குற்றச்சாட்டைக் கேட்டு, பிடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் கிரெடிட் செய்ய சம்மதித்தார்.

டிராய் என்றால்தான் அலறுகிறார்கள் இவர்கள். சூப்பர் அனுபவம் இது!

- பி.கவிதா, கோவிலாம்பூண்டி

செல்லக் குழந்தையாம் பள்ளியிலே..!  

அனுபவங்கள் பேசுகின்றன !

நான் அரசுப் பள்ளியில் (பிரைமரி) பணிபுரிகிறேன். குழந்தைகளின் உளவியல் குறித்த 'அவள் விகடன்’ கட்டுரை ஒன்றில், செல்லப் பெயர் வைத்து அழைக்கப்படும் குழந்தைகள், அப்படி அழைப்பவர்களை மனதுக்கு நெருக்கமாகக் கருதுவார்கள் என்பதைப் படித்தேன். எங்கள் பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் இரண்டு, மூன்று சகோதர, சகோதரியுடன்... வறுமையான குடும்பத்தில் இருப்பவர்களே. எனவே, அவர்களில் பலருக்கு நானே செல்லப் பெயர் வைத்தேன். சிலருக்கு இருக்கும் செல்லப் பெயரைச் சொல்லி வகுப்புகளில் அழைத்தேன். வகுப்பு விதிமீறல் மற்றும் வீட்டுப்பாடம் செய்யாமைக்கு நான் அவர்களைக் கடிந்து கொண்டாலும், அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள முயல்கிறார்கள். தன் டீச்சருக்கு, தான் என்றும் ஸ்பெஷல் என்று நினைக்கிறார்கள். இப்படிச் சின்னச் சின்ன வழிமுறைகளால் மாணவர்களை நாம் விரும்புகிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால், அவர்களின் மனதுக்கு நெருக்கமான ஆசிரியர் ஆகலாம், அவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரத் துணையாக இருக்கலாம். சக ஆசிரியர்களுக்கு இது என் வேண்டுகோள்!

- எஸ்.கஸ்தூரி, புதுக்கோட்டை

இண்டக்ஷன் பாத்திரங்கள் உஷார்!

அனுபவங்கள் பேசுகின்றன !

சமீபத்தில் பெரிய பாத்திரக் கடை ஒன்றில், எவர்சில்வர் கடாய் வாங்கினேன். வாங்கும்போதே, ''இதை இண்டக்ஷன் ஸ்டவ்வில் வைக்கலாமா..?'' என்று பல முறை கேட்டுதான் வாங்கினேன். ''தாராளமா பயன்படுத்தலாம்மா... ஒண்ணும் ஆகாது'' என்று உறுதி கொடுத்தார் கடைக்காரர். வீட்டுக்கு வந்து கடாயை இண்டக்ஷன் ஸ்டவ் மேல் வைத்து ஒரு கிரேவி செய்யலாம் என்று ஆரம்பித்தால், கடாயின் உள்ளே ஓர் இடத்தில் மட்டும் தீப்பொறி கிளம்பியது. அது இண்டக்ஷன் ஸ்டவ்வுக்கு ஏற்ற பாத்திரமல்ல என்பது புரிந்தது.  மறுநாளே பில்லுடன் அந்தக் கடைக்குச் சென்று விவரம் கூறி கடாயைக் காண்பிக்க, கடைக்காரர் அதை ரிட்டர்ன் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். பணம் செலவானதுதான் மிச்சம்.

இண்டக்ஷன் ஸ்டவ்வுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது, இரண்டு, மூன்று கடைகளில் விசாரிப்பதுடன், முடிந்தால் செயல்முறை விளக்கமும் (டெமோ) பார்த்த பின்னே வாங்குங்கள் தோழிகளே!

- என்.மல்லிகா, சென்னை-5

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism