கலைகள் பல வளர்த்த மண் என்ற பெருமை கொண்ட தஞ்சையில், உலகம் வியக்கும் இந்தியக் கலை நுட்பங்களில் ஒன்றான ஐம்பொன் சிலைக் கலைக்கூடங்களும் அமைந்துள்ளன. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது சுவாமிமலை. இந்த ஊர்தான் ஐம்பொன் சிலைகளின் பிறப்பிடம் என்கிறது வரலாறு. இதை அங்கீகரிப்பது போலவே உலோகச் சிலைகள் தயாரிப்புக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சுவாமிமலைக்கு அண்மையில் (ஜூலை) புவிசார் குறியீட்டுச் சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

சோழமண்டலத்தின் கலைக்கிராமமான சுவாமிமலை, முருகப்பெருமானின் அறுபடைகளில் நான்காவது வீடு. உலகம் முழுவதும் 60 சதவிகிதம் ஐம்பொன் சிலைகள் இங்கிருந்துதான் செல்கின்றன. இந்தத் தொழிலில் 200-க்கும் மேற்பட்ட பாரம்பர்யச் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐம்பொன் சிலைகள் மட்டுமன்றி, கோயில் திருப்பணிகள், கல் விக்ரகங்கள், பல்லக்குகள், கதவுகள், கொடி மரங்கள், படியலங்காரம் செய்வோரும் இங்கே வசிக்கிறார்கள். சுவாமிமலையில் ராஜவீதியும், வடம்போக்கி தெருவும் பாரம்பர்யச் சிற்பக் கலைக்கூடங்கள் நிறைந்தவை. தீமங்குடி, வளப்போட்டை, துரும்பூர்ப் பகுதிகளிலும் ஐம்பொன் பட்டறைகள் உள்ளன. எல்லாக் காலங்களிலும் இங்கு வேலைக்குப் பஞ்சமில்லை. இரவு பகல் பாராமல் இயங்குகிறது இங்குள்ள உற்பத்திக்கூடம். இதைச் சார்ந்து இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வில் பட்டினி இல்லை என்பதே இந்த தெய்வீகக் கலையின் வெற்றிக்குச் சாட்சி.

``பொதுவாக அந்தக் காலத்தில் உலோகத்தை ‘பொன்’ என்ற பெயரில் அழைப்பது மரபு. ஐம்பொன் சிலைகளைப் பொறுத்தவரையில் செம்பு, பித்தளை, காரீயம், வெள்ளி, தங்கம் ஆகியவை சேர்ந்திருக்கும். அதனால்தான் இதை `ஐம்பொன்' என்கிறார்கள். ஐம்பொன் என்று கூறப்பட்டாலும் அதில் 85 சதவிகிதம் செம்பு, 13 சதவிகிதம் பித்தளை, 2 சதவிகிதம் காரீயம் கலந்திருக்கும். கிராம் கணக்கில் வெள்ளியும், தங்கமும் அதனுடன் சேர்க்கப்படும். இது சிலையின் எடைக் கணக்கில் வராது. வெள்ளியும் தங்கமும் வசதியைப் பொறுத்து, கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும்'' என்கிறார் முனைவர் மோகன்ராஜ் ஸ்தபதி.

கண்ணால் கண்டால் கருத்தில் ஒட்டிக்கொள்வதல்ல சிலைத் தொழில். விடாத ஆர்வமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. ஐம்பொன்னில் அழகு காட்டும் ஒரு சிலைக்குப் பின்னால் கடும் உழைப்பு இருக்கிறது.

``ஐம்பொன் சிற்பங்கள் செய்வதில் பெரிதாக இயந்திரங்களுக்கு வேலையில்லை. முழுக்க முழுக்கக் கைவேலைப்பாடுகள்தான். ஓர் ஆலயத்துக்குரிய சிலையைச் செய்வதற்கு முன்பு, செய்யப்படும் `விக்ரக' பொருத்தங்கள் சரிபார்க்கப்படும். இதை `ஆயாதி கணித்தல்' என்போம். அந்தக் கணிதத்தின் அடிப்படையில்தான் விக்ரகத்தின் உயரத்தைத் தீர்மானிப்போம். சிலையின் உயரத்துக்குத் தென்னை ஓலையை நறுக்கி, 124 பாகங்களாக மடித்து, அந்த மடிப்புகளை வைத்தே சிற்பத்தின் அங்கங்களைத் தீர்மானிக்கிறோம். அப்படி, ஒரு விக்ரகத்தில் உச்சி முதல் பாதம் வரை 123 பாகங்கள் வடிக்க வேண்டும். சிலை வார்க்கும் பணி மூன்று கட்டங்களாக நடக்கும். முதலில் மெழுகு கலந்த கலவையைச் சிற்ப சாஸ்திரப்படி தென்னை ஓலைகொண்டு கணக்கிடுவோம். பின்னர், தேவையான மெழுகைச் சேர்த்து அலங்கார வேலைகளைச் செய்வோம். இது சாதாரண மெழுகல்ல... ஒருவகை மரத்தில் இருந்து உருகி வழியும் மெழுகு. அதோடு சம அளவுக்குக் `குங்கிலியம்' கலந்து உருக்கி வைத்துக்கொள்வோம். அப்போதுதான் கைக்கு இலகுவாக இருக்கும். இந்த மெழுகை வைத்துத் தேவையான அளவுக்கு ஒரு சிலை உருவாக்கப்படும். பிறகு, வண்டல் மண்ணையும் களி மண்ணையும் அந்த மெழுகுச் சிலையின் மீது பூசி வார்ப்பு (mould) செய்ய வேண்டும். இதுதான் கரு. இந்தக் கரு உடைந்துவிடாமலும் வெடித்துவிடாமலும் இருப்பதற்காக, அதன் மேல் லாகவமாகக் கம்பியைச் சுற்ற வேண்டும். கம்பியைச் சுற்றிய பிறகு தீ மூட்ட வேண்டும். பின்பு கருவைத் தலைகீழாக வைத்து லேசான பதத்தில் சூடாக்க வேண்டும். இவ்விதம் சூடாக்கும்போது உள்ளே இருக்கும் மெழுகு கரைந்து, அதற்கென்று இடப்பட்டிருக்கும் துளை வழியாக வெளியேறிவிடும். உட்கூடாக இருக்கும் கருவை வெகு கவனமாக சூளையில் இட்டுச் சுடுகின்றனர். சுட்ட கருவின் வாய் மேற்புறம் தெரியும்படி பூமியில் புதைக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் செம்பு, பித்தளை, காரீயம், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் `மூசை' என்கிற குவளையிலிட்டு சூடாக்கப்படுகிறது. இந்த மூசைக் குவளைகள் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரிப் பகுதியில் கிடைக்கும் ஒரு வகை மண்ணால் தயாரிக்கப்படுகிறது. 2,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கக்கூடியது இந்தக் குவளை. 1,400 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இந்த உலோகங்களை உருக்கி, அதனைச் சிலையின் அடிப்பகுதியில் போடப்பட்டிருக்கும் துளையில் (கருவின் வாய் வழியே) ஊற்றுவோம். அதாவது, கருவைத் தலைகீழாக மண்ணுக்குள் புதைத்து வைத்து, அதன் கால் பகுதி வழியாகத்தான் உலோகக் குழம்பை ஊற்றுவது வழக்கம்.

போதுமான நாள்கள் இடைவெளியில் உலோகம் குளிர்ந்தவுடன் மேல்கூட்டை உடைத்தால் சிலையின் பாகம் தயார். அதைக் குளிர வைப்பதற்கும் நாள் கணக்கீடு உண்டு. உதாரணத்துக்கு, ஆறு அங்குல ஐம்பொன் சிலையின் வார்ப்படம் சுமார் ஒரு மணி நேரம் மண்ணுக்குள் புதைந்திருந்தால் போதும், குளிர்ந்துவிடும். அதுவே மூன்றடி சிலையாக இருந்தால் குளிர ஒரு நாளாகும். இத்துடன் இரண்டாம் கட்டப் பணி முடிவடைகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, சுத்தியலை வைத்து மண்ணைத் தட்டி உடைத்தால், உள்ளுக்குள்ளே கருவிலிருந்த உருவம் உலோகமாகப் பிசிறு தட்டி நிற்கும். சிலையின் தேவையில்லாத பகுதிகளை நீக்கி, சுத்தம் செய்து, பாலிஷான பிறகு `நகாசு' வேலை செய்யப்படும். இறுதியாக முகம் சம்பந்தப்பட்ட பணிகளை முடித்தால், அழகான ஐம்பொன் சிலை தயார். இப்படித்தான் மனிதர்களைப்போல, கருவிலிருந்து சிலையாக உயிர் பெறுகிறது ஐம்பொன் சிலையும்'' என்று சிலை செய்யும் நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டார் மோகன்ராஜ் ஸ்தபதி.

தஞ்சை மண் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல, கலைக்களஞ்சியமும்கூட... சுவாமிமலை அதற்கு சாட்சி!

- ஜி.லட்சுமணன்,
படங்கள்: மா.அரவிந்த்

சிற்பக் கலைக் கிராமமாக மாறியது எப்படி?

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் பெரிய கோயிலைக் கட்டுவதற்காக செஞ்சி, காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சிற்பக்கலைஞர்களைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார். நூற்றுக்கணக்கான சிற்பிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து எழுப்பியதுதான் தஞ்சைப் பெரிய கோயில். பெரிய கோயிலுக்குச் சிலை வடிக்கும் பணிகள் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் நடந்தன. அதில், சுவாமிமலையும் ஒன்று. அந்தப் பணிகள் முடிவுற்றதும் `கங்கை கொண்ட சோழபுரம்,' `தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்’ பணிகள் தொடர்ந்தன. அக்காலகட்டத்தில், உற்சவமூர்த்திகளை ஐம்பொன்னில் வார்க்க வசதியாகக் காவிரித்தாய் தன் மடி முழுக்க வண்டல் மண் சுமந்து நின்றாள். சுவாமிமலையைத் தழுவிச் செல்லும் காவிரியிலும், அதன் கிளையான அரசலாற்றிலும் அரை அடி உயரத்துக்கு வண்டல் மண் படிந்து கிடந்தது. நயமான இந்த வண்டல் மண்ணைத்தான் வெளிமாநில சிற்பிகளெல்லாம் வந்து வாரிச் செல்கிறார்கள். இந்தியாவில் வேறெங்கும் கிடைக்காத அந்த வண்டல் மண் வார்ப்பை எளிதாக்கி, படைப்பைச் சிறப்பாக்கியது. இதுதான் சுவாமிமலை சிற்பக் கலைக் கிராமமான வரலாற்றுச் சுருக்கம்.