ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ஓவியங்கள்: சேகர்

வாசகிகள் பக்கம்

நினைவிருக்கட்டும் நாமினேஷன் !

ஒரு நபரின் அநியாய அலட்சியம், விபத்து என்கிற பெயரில், இருபத்தியன்பதே வயதான என் கணவரின் உயிரை காவு வாங்கிவிட்டது. வாழ்க்கையை ஆரம்பிக்கக் காத்திருந்த நிலையிலேயே, அது முடிந்துவிட்ட கொடுமை ஒரு பக்கம் இருக்க, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் அனுபவிக்கும் துயரங்கள், கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக, வங்கி சம்பந்தப்பட்ட சில நடைமுறைகள் நம்மை அதிக அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.

தன் வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்று என் கணவர் குறிப்பிடாமல் விட்டது... இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அத்தனை சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

என் நிலை மற்றவர்களுக்கும் நேரக்கூடாது என்றுதான் இன்னல்களுக்கு இடையிலும் இதை எழுதுகிறேன். சகோதரிகளே... வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்பதைக் கட்டாயம் குறிப்பிடுங்கள். இதுவரைக் குறிப்பிடாவிட்டாலும் இப்போது கிளம்புங்கள் முதல் வேலையாக!

சுபா, தஞ்சாவூர்

தாத்தாவுக்கு நண்பன்... பேரன்!

சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய மாமனார் ரேஷன் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் தன் ஐந்து வயது மகனையும் அனுப்பி வைத்தாள் தோழி. ''ஏண்டி சின்னப் பையனை கடைக்கு அனுப்புறே..?'' எனக் கேட்டேன். அவள் சொன்ன பதில் யோசிக்க வைத்தது. ''ரேஷன் கடையில க்யூவுல நின்னு பொருட்கள் வாங்கும்போது, மாமா ஞாபகமறதியா கார்டை ஒருமுறை அங்கேயே விட்டுட்டு வந்துட்டார். பக்கத்து வீட்டுக்காரம்மா பார்த்து அதை எடுத்து வந்து கொடுத்தாங்க. இப்போ இவனையும்கூட அனுப்புறதால அவர் எதையாவது மறந்தாலும் இவன் ஞாபகப்படுத்துவான். கூடவே போகும் போதும் வரும்போதும் அவரோட கையைப் பிடிச்சுக் கூட்டிட்டிப் போய்னு, பெரியவங்களை பரிவோட நடத்தவும் பழகிக்குவான். பெரியவங்களுக்கும் நாம நிராகரிக்கப்படுறோம்ங்கிற உணர்வு வராது!'' என்றாள். சபாஷ்!

பி.எஸ்.கேத்தரின், சேலம்

மோசடிகள் ஆயிரம்!

வேலூர், பொற்கோயிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வெளியில் வந்த பிறகு சாமி படங்கள் வாங்கினேன். கூடவே, சாமி ஸ்தோத்திரங்கள் அடங்கிய 'சி.டி’யை அறுபது ரூபாய் கொடுத்து வாங்கினேன். வீட்டுக்கு வந்து அதைப் 'ப்ளே’ செய்தால், ஏமாற்றம்தான் மிச்சம். ஸ்தோத்திர பாடல் சி.டி. வாங்கினால், பொதுவாக இரண்டரை மணி நேரம் 'ப்ளே’ ஆகும். ஆனால், இது அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது. கூட்டம் அதிகமாக வரும் இடங்களில் பொருட்களை வாங்கும்போது, 'அலர்ட்’ ஆக இருக்க வேண்டும் என்ற படிப்பினையைக் கொடுத்துவிட்டது இந்த திருத்தல பயணம்!

ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி

மிக்ஸியில் அரைபட்ட விரல்!

என் மகள் ஸ்ரீ-க்கு ஒரு வயது. ஒரு நாள் இரவு மிக்ஸியில் மசாலா அரைத்துக்கொண்டு இருந்தேன். அரைபட்டதா என்று தெரிந்து கொள்வதற்காக, பிளக் பாயின்ட்டில் 'ஸ்விட்ச் ஆஃப்’ பண்ணாமல் மிக்ஸியை மட்டும் ஆஃப் செய்துவிட்டு விரலால் மசாலாவை சரிபண்ணிக் கொண்டு இருந்தபோது... திடீரென்று என் மகள் மிக்ஸியை ஆன் செய்துவிட்டாள். என் கை விரல்கள் மிக்ஸி பிளேடில் மாட்டி... அப்பப்பா. விபரீதத்துக்குக் காரணம்... என் அலட்சியமே. அன்று முதல் மிக்ஸி மற்றும் மேல் ஸ்விட்ச் இரண்டையும் கவனமாக அணைத்துவிடுவதை பழகிக்கொண்டேன்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது ஒரு பாடமே!

வனிதா சரவணன், பகுடுப்பட்டு (சேலம்)