கிராஃப்ட் வொர்க் பாதி, ஃபேப்ரிக் டிசைன் மீதி... என கலவையானதொரு விஷயம்தான், இந்த இதழில் நீங்கள் கற்றுக் கொள்ளப்போகும் ஃப்ரீ ஸ்டைல் சல்வார் பெயின்ட்டிங். புதுசா இருக்குல்ல..!

தேவையான பொருட்கள்: பிங்க் கலர் காட்டன் டாப் - 1, வொயிட் கலர் ஃபேப்ரிக் பெயின்ட் - 1 பாட்டில், ஃபேப்ரிக் க்ளூ - 1 பாட்டில், ஃபைன் ஆர்ட்ஸ் பிரஷ் - 1, கத்தரிக்கோல் - 1, பெரிய சைஸ் வெள்ளை மற்றும் பிங்க் கலர் எம்ப்ராய்டரி நூல் (வழக்கமான நூலைவிட, சற்று தடிமனாக இருக்கும்) - தலா ஒரு கண்டு, பெரிய முத்து பாசிகள் - தேவையான அளவு.

செய்முறை: சல்வார் டாப்பின் இடது ஓரத்தில், கொடியோடு கூடிய தாமரைப் பூவை பென்சிலால் வரைந்து கொள்ளுங்கள் (படம் 1). ஒரு கொடியின் வலதுபுறம் ஒரு தாமரைப் பூ, எதிர்புறம் சற்று மேலாக மற்றொரு தாமரைப் பூ என்பது போல வரைந்து கொள்ளுங்கள். வெள்ளை ஃபேப்ரிக் கலரில் பிரஷ்ஷை நனைத்து, தாமரைப் பூக்கள் மற்றும் தண்டுகளின் உள்ளே கலர் அடியுங்கள் (படம் 2). பிறகு, பதினைந்து நிமிடங்கள் அப்படியே காற்றாட காய விடுங்கள்.

இனி எம்ப்ராய்டரி வேலைகளைப் பார்க்கலாம். வெள்ளை கலர் நூலில் இருந்து இரண்டு நீளமான நூல்களை வெட்டியெடுத்து, ஒன்றோடு ஒன்று முறுக்கிக் கொள்ளுங்கள். பிங்க் கலர் நூல்களை இதேபோல நான்கு துண்டுகள் வெட்டியெடுத்து, இரண்டு இரண்டாக முறுக்கிக் கொள்ளுங்கள். இணைத்துக் கொண்ட வெள்ளை மற்றும் பிங்க் நூல்களின் ஒரு முனையை முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள் (படம் 3). பிறகு ஜடை பின்னுவது போல அவற்றைப் பின்ன வேண்டும். அதாவது, இரண்டு இரண்டாக முறுக்கப்பட்டுள்ள பிங்க் கலர் நூலை இருபுறமும் வைத்து கொண்டு, முறுக்கப்பட்டுள்ள வெள்ளை நிற நூல் நடுவில் வருவது போல (படம் 4) பின்ன வேண்டும்.

இந்த நூல் ஜடையை, சுடிதார் டாப்பில் வரையப்பட்டிருக்கும் தாமரையைத் தாங்கும் தண்டுப் பகுதியில் க்ளூவைத் தடவி, படத்தில் காட்டியுள்ளது போல ஒட்ட வேண்டும் (படம் 5). தண்டுகள், கிளை தண்டுகள் என்று முழுக்க ஜடையை ஒட்டுங்கள். ஒட்டுவதற்கு முன் அதன் மேல் முடிச்சை கத்தரித்துவிடுங்கள் (க்ளூவின் மேல் நூலை ஒட்டுவதால், தானாக நூல் பிரிந்து வராது).

இனி, ஒவ்வொரு பூவின் நடுவிலும் க்ளூவை புள்ளியாக வைத்து, அதன் மேல் முத்து பாசியை ஒட்டவேண்டும் (படம் 6). டாப்ஸின் கழுத்துப் பகுதிகளிலும் படத்தில் இருப்பதுபோல ஜடையை ஒட்டி, முனையில் முத்து பாசியை ஒட்டலாம்.

எல்லாம் முடிந்த பிறகு, நாள் முழுக்க காய வைத்து, துணியை உள்புறமாக திருப்பி அயர்ன் செய்துவிடுங்கள்.

அதன் பிறகு, இதை அணிந்து நீங்கள் நடைபோட்டால்... 'இப்படிப்பட்ட டிசைன் டிரெஸ் எல்லாம் எங்கதான் வாங்குறே?' என்கிற ஆச்சர்ய குரல்கள் உங்களைச் சுற்றும்.

- இன்னும் கத்துக்கலாம்...