Published:Updated:

கிராஃப்ட் ஸ்கூல் !

சூப்பர் சுடிதார் டிசைன் !என்.சியாமளாதேவி படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஒரே ஒரு சுடிதார் டாப்பில், பலவிதமான டிசைன்களையும் நம் கிரியேட்டிவிட்டியை நுழைத்து உருவாக்கினால் எப்படி இருக்கும்! அப்படியரு அட்டகாசமான டிசைனைத்தான் இந்த இதழில் கற்றுக் கொள்ளப் போகிறோம். மொத்தம்... எட்டு விதமான ஸ்டிரோக் டிசைன்ஸ்!

தேவையான பொருட்கள்: ஓ.ஹெச்.பி ஷீட் - 1  (எல்லா விதமான கிராஃப்ட் கடைகளிலும் கிடைக்கும்), பிளாட் பிரஷ் - 1, காட்டன் டாப் - 1, சிவப்பு, மஞ்சள், மெஜந்தா, பிரவுன், வெள்ளை, ரெட், பச்சை - ஃபேப்ரிக் கலர்ஸ் பாட்டில் - தலா 1.

செய்முறை: வெள்ளை டாப்பின் முன்பக்கத்தில், ஒருபுறத்தில் ஆரம்பித்து மறுபுறம் வரை செல்வது போல டிசைன் செய்யப் போகிறோம். முதலில், பிரவுன் கலர் ஃபேப்ரிக் பெயின்ட்டில், பிளாட் பிரஷ்ஷை நனைத்து... படத்தில் காட்டியுள்ளது போல குறுக்கும் நெடுக்குமாக தேவையான இடைவெளிகள் விட்டு, பட்டையான கோடுகளை வரைந்து (படம் 1) இரண்டு நிமிடம் காயவிடுங்கள்.

கிராஃப்ட் ஸ்கூல் !

பிறகு, பிரஷ்ஷை கழுவிக் கொண்டு, பச்சை ஃபேப்ரிக் பெயின்ட்டில் நனைத்து, ஏற்கெனவே வரைந்திருக்கும் கோடுகளின் மீது, பூக்கள் இல்லாமல் வெறும் காம்புகளை வரையுங்கள். அதாவது, ஒரு காம்பில் இருந்து மற்றொரு காம்பு பிரிவது போல, கட்டங்கள் முழுவதும் படத்தில் காட்டியுள்ளது போல வரையுங்கள் (படம் 2). இதையும் இரண்டு நிமிடம் காய விடுங்கள்.

இனி, ஓ.ஹெச்.பி ஷீட் மேலே  மஞ்சள் மற்றும் பச்சை கலரை ஒன்றன் கீழ் ஒன்றாக ஊற்றிக் கொள்ளுங்கள். இரண்டையும் பிளாட் பிரஷ்ஷால் அழுந்தத் தொட்டு (படம் 3), ஏற்கெனவே வரைந்துள்ள காம்புகளில் (படம் 4), கண் போல வரைந்தால்... மஞ்சள் மற்றும் பச்சை என இருவண்ணத்தில் இலை ரெடி. அத்தனை காம்புகளின் இரண்டுபுறங்களிலும் இதே போல இலையை வரைந்து, இரண்டு நிமிடம் காயவிடுங்கள்.

இனி, இலைகளுடன் கூடிய காம்புகளுக்கு அருகில் மஞ்சள் ஃபேப்ரிக் பெயின்ட்டை பிளாட் பிரஷ்ஷில் தொட்டு ஆங்காங்கே தடவுங்கள்.

கிராஃப்ட் ஸ்கூல் !

அடுத்து, மெஜந்தா மற்றும் வெள்ளை கலரை ஓ.ஹெச்.பி ஷீட்டில் ஒன்றன் கீழ் ஒன்றாக ஊற்றி, பிளாட் பிரஷ்ஷால் அவற்றை மேலிருந்து கீழே இழுக்க...இரண்டு கலரும் இணைந்தே இருப்பது போன்ற கலர் கிடைக்கும். இதை பிரஷ்ஷால் தொட்டு, படத்தில் உள்ளது போல எல்லா காம்புகளிலும் பூ வரையுங்கள் (படம் 5). பூவின் அடி பாகம் வெள்ளை, மேல் பாகம் மெஜந்தா என அமைவதுதான் இதன் சிறப்பு! இதையும் இரண்டு நிமிடம் காய விடுங்கள்.

கிராஃப்ட் ஸ்கூல் !

பிறகு, ஏற்கெனவே இலைகள் வரைந்த அதே நிறத்தைப் பயன்படுத்தி பூக்களின் அடியில் படத்தில் காட்டியுள்ளது போல இலைகளை வரைய வேண்டும் (படம் 6). இலைகளில் இருந்து பூ பூப்பது போல தோற்றம் கிடைக்கும்.

பைனல் டச்சாக, சிவப்பு கலர் ஃபேப்ரிக் கலரில் பிளாட் பிரஷ்ஷை நனைத்து... ஏற்கெனவே வரைந்த பூக்களுக்கு இடையில் அல்லது காம்புகளில் தீற்றலாக படத்தில் உள்ளது போல தீற்ற வேண்டும் (படம் 7). இப்படி நான்கைந்து இடத்தில் வரைய வேண்டும்.

சுடிதாரின் முன்பக்கத்தில் மேலிருந்து சாய்வான கோடு போல இந்த டிசைனை     வரைய வேண்டும். ஒட்டு மொத்தமாக வரைந்து முடித்த தும், ஒரு நாள் முழுக்க காயவிடுங்கள். மறுநாள் டாப்ஸை உள்புறமாக திருப்பி அயர்ன் செய்தால், வாவ் சொல்ல வைக்கும் இந்த கிரியேட்டிவ் டிசைன்!

- இன்னும் கத்துக்கலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு