Published:Updated:

கிராஃப்ட் ஸ்கூல்!

தெர்மாகோல் ஸ்டென்சில் வொர்க் !என்.சியாமளாதேவி,படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

கிராஃப்ட் ஸ்கூல்!

தெர்மாகோல் ஸ்டென்சில் வொர்க் !என்.சியாமளாதேவி,படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
 ##~##

'அரை மணி நேரத்துல உங்களால... உங்க டிரெஸ்ஸை சூப்பரா டிசைன் பண்ணிட முடியும்'னு சொன்னா... நிச்சயம் உங்களால ஆச்சர்யப்படாம இருக்க முடியாது!

யெஸ்... 'தெர்மாகோல் ஸ்டென்சில் வொர்க்' அப்படி உங்களை ஆச்சர்யப்பட வைக்கும்கறதுல சந்தேகமே இல்ல. லெட்ஸ் ஸ்டார்ட்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையானவை: வெள்ளைநிற பனியன் (காலர் இல்லாதது) - 1, தெர்மாகோல் பிளேட் - 2, ஃப்ளாட் மற்றும் தின் பிரஷ் - தலா 1, ப்ளூ மற்றும் கோல்ட் கலர் ஃபேப்ரிக் பெயின்ட் - தலா 1 பாட்டில், த்ரீ டி ப்ளூ கலர் கிளிட்டர் - 1 பாட்டில், கத்தரிக்கோல் - 1.

செய்முறை: தெர்மாகோல் பிளேட்டின் நடுப்பகுதிகளை மட்டும் கத்தரிக்கோல் கொண்டு சதுரவடிவில் வெட்டிக் கொள்ளுங்கள் (படம்-1). தின் பிரஷ்ஷின் பின்பகுதியை பயன்படுத்தி, வெட்டி வைத்திருக்கும் தெர்மாகோல் பிளேட்கள் மீது படத்தில் உள்ளது போல வட்ட வடிவில் டிசைன் செய்யுங்கள் (படம் 2). ஃப்ளாட் பிரஷ்ஷை ப்ளூ கலர் ஃபேப்ரிக் பெயின்ட்டில் நனைத்து, ஒரு தெர்மாகோல் பிளேட்டில் உள்ள டிசைன் மீது தடவுங்கள் (படம் 3). பெயின்ட் காய்வதற்கு முன், அப்படியே, பனியன் மீது வைத்து அழுத்தவும் (படம் 4). ஓரிரு நிமிடங்கள் காய்ந்த பிறகு, மற்றொரு தெர்மாகோல் பிளேட் டில் உள்ள டிசைன் மீது இதே நிற பெயின்டை தடவி, முன்பு பதித்த டிசைன் அருகிலேயே பதியுங்கள்.

கிராஃப்ட் ஸ்கூல்!

ஐந்து நிமிடங்கள் அப்படியே காற்றில் காயவிட்டு, மீண்டும்   ஃப்ளாட் பிரஷ்ஷை கோல்ட் கலர் ஃபேப்ரிக் பெயின்டில் நனைத்து, அந்த டிசைனின் நான்குபுறமும் படத்தில் காட்டியுள்ளது போல பட்டையாக கோடுகள் வரைய வேண்டும் (படம் 5).

இனி, ப்ளூ கலர் த்ரீ டி க்ளிட்டர் கொண்டு சதுர வடிவ டிசைனின் உள்ளே மற்றும் வெளியே படத்தில் காட்டியுள்ளது போல (படம் 6) அலங்கரித்தால்... தெர்மாகோல் ஸ்டென்சில் வொர்க் ரெடி.

கிராஃப்ட் ஸ்கூல்!

நீங்கள் விரும்பிய டிசைன்களில் எல்லாம் இந்த ஸ்டென்சில் டிசை னில் கலக்கலாம். உதாரணத்துக்கு, இங்கே மாடல் காமாட்சி போட் டிருக்கும் பனியனில் இருக்கும் டிசைன்கள், இங்கே நான் செய்து காட்டியிருப்பதிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும். உங்கள் கைகளில்தான் இருக்கிறது கிரியேட்டிவிட்டி!

- இன்னும் கத்துக்கலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism