பிரீமியம் ஸ்டோரி
ஸ்டூடன்ட் ஸ்டார்!
##~##  

ந்தத் திருத்தமும் இல்லாமல், ஒரே மூச்சில் நேர்த்தியாக ஓவியம் வரைவது ஜனார்த்தனன் ஸ்பெஷல். ஆனால், ஓவியம் வரைய ஜனார்த்தனன் தூரிகை பிடிப்பது கைகளால் அல்ல: தனது வாயால்!  

''சின்ன வயசுல நான் ரொம்ப துறுதுறு. எட்டு வயசு இருக்கும்போது, ஒரு நீளமான இரும்புக் கம்பியைத் தலைக்கு மேல தூக்கியிருக்கேன். மேலே கடந்துபோன மின் சாரக் கேபிளில் இரும்புக் கம்பி உரசி, மின்சாரம் பாய்ஞ்சு, என்னைத் தூக்கி அடிச்சிருச்சு. கண் முழித்துப் பார்த்தப்போ, ரெண்டு கையும், ஒரு காலும் காணோம். கருகிருச்சுன்னு வெட்டி எடுத்துட்டாங்க. வேத னையில் வீட்டிலேயே முடங்கிட்டேன். ஆனா, என் துறுதுறு இயல்பு என்னைச்

ஸ்டூடன்ட் ஸ்டார்!

சும்மா இருக்கவிடலை. கொஞ்சம் கொஞ்சமா வாயால் பல வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். பட்டாம்பூச்சி, பூனை, கார்னு சின்னச் சின்னதா ஓவியங்கள் வரைஞ்சேன். நண்பர்கள் உற்சாகப்படுத்தினாங்க. வாழலாம்னு நம்பிக்கை வந்துச்சு!''- மெலிதாகச் சிரிக்கும் ஜனார்த்தனன், இந்திய அளவில் 30,000 பேர் கலந்துகொண்ட ஓவியப் போட்டியில் முதற் பரிசு வென்ற திறமைக்காரர். தமிழ்நாடு கலை பண்பாட் டுத் துறையின் ஓவியப் போட்டியில் முதல் பரிசு என இதுவரை நூற்றுக்கணக்கான பரிசுகளை வென்றிருக்கிறார்.  

''தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகள் சொல்லச் சொல்ல... எழுத ஆள் (ஷிநீக்ஷீவீதீமீ) இருப்பாங்க. இந்தியாவில் முதன்முறையா ஆள் வெச்சுக்காம வாயால் பேனா பிடிச்சு பரீட்சை எழுதினேன். அதைக் கேள்விப்பட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, எனக்குக் கூடுதலா ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி கொடுத்தார். அதிலிருந்து மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலா ஒரு மணி நேரம் ஒதுக்கினாங்க. ஏதோ என்னால் முடிந்த சின்ன மாற்றம்னு மனசுக்குள்ள சின்ன திருப்தி.

எம்.காம்., பட்டதாரி ஒருவர், வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை எண்ணத்துல இருந்திருக்கார். தற்செயலா ஒரு பேப்பரில் என் கதையைப் படிச்சிருக்கார். 'எதுவும் இல்லைன்னாலும் உங்ககிட்டே வாழறதுக்கான நம்பிக்கை இருக்கு. எல்லாம் இருந்தும் அது என்கிட்டே இல்லை. அதுதான் என் பிரச்னை’ன்னு என்னைச் சந்திச்சு அழுதார். நம்பிக்கையோடு திரும்பிப் போனார். இப்போ அவருக்கு வேலை கிடைச்சிருச்சு. சந்தோஷமா இருக்கார். மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு.

இப்போ சினிமாவில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் செஞ்சுட்டு இருக்கேன். சீக்கிரமே ஒரு நல்ல அனிமேஷன் படத்தை தமிழில் எடுக்கணும்!'' நம்பிக்'கை’ குலுக்கி விடை கொடுக்கிறார் ஜனார்த்தனன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு