Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ் ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ் ஓவியங்கள்: சேகர்

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

150

 'கிரில்’லில் சிக்கிய தலை!

அனுபவங்கள் பேசுகின்றன!

றவினர் வீட்டில் சமீபத்தில் நடந்த சம்பவம் இது. விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் குழந்தை, எதிர்பாராதவிதமாக வாசலில் இருந்த கிரில் கேட் கம்பிகளுக்கு இடையே தலையை நுழைத்து மாட்டிக் கொண்டது. மீண்டும் தலையை வெளியே எடுக்கத் தெரியாமல் பயந்து குழந்தை அலறல் போட... அம்மா, அப்பா என யார் நெருங்கி வந்தாலும் அழுது ரகளை வேறு செய்ய... என்ன செய்வதென்றே தெரியாமல் அனைவரும் கையைப் பிசைந்து நின்றனர். தெய்வாதீனமாக... பக்கத்தில் கட்டட வேலை செய்தவர்கள் ஓடி வந்து, பக்குவமாக குழந்தையின் கவனத்தை ஈர்த்து, சமய சஞ்சீவியாக உதவிபுரிந்து, தலையை மெதுவாக வெளியில் எடுத்துவிட்டார்கள்.

கிரில் கேட் மற்றும் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே... அதிகம் இடைவெளியில்லாமல் நெருக்கமாக இருக்கும்படி அமையுங்கள் தோழிகளே!

- ஆர்.பிரேமா, மேற்கு மாம்பலம்

அனுபவங்கள் பேசுகின்றன!

கூனிகளாக மாறாதீர்!

றவினர் ஒருவர் இறந்துவிட, வெளிநாட்டில் இருந்த அவருடைய உறவுகள் புறப்பட்டு வந்தனர். தந்தையின் ஈமச்சடங்கு முடிந்தபின், ''நான் மட்டும் கிளம்புகிறேன். வயதான என் அம்மாவுக்குத் துணையாக ஆறு மாதம் வரை என் மனைவி இங்கே தங்கட்டும்'’ என்று கூறினார் கடைக்குட்டி மகன். அந்த மருமகளும் பொறுப்பை உணர்ந்து மாமியாருடன் தங்குவதற்கு தலையசைக்க... அனைவருக்கும் நிம்மதி. கொஞ்ச நேரத்திலேயே... அங்கிருந்த ஒரு மூதாட்டி, ''வெளிநாட்டுல இருக்குற மூத்த மருமக வந்து பார்த்துக்கட்டுமே... நீ மட்டும் ஏன் உன் புருஷனைப் பிரிஞ்சு கஷ்டப்படணும்....'' என்று பேச்சோடு பேச்சாக புத்திமதி (!) சொல்ல ஆரம்பித்துவிட்டார். அந்தப் பெண்ணுக்கும் குழப்பம் வந்து, கணவரிடம் போய் சொல்ல, வீட்டில் ஒரு சண்டை வெடித்து வீதிக்கும் வந்துவிட்டது!

சில மூதாட்டிகள், கூனியாகவே காலம் தள்ளுவதிலிருந்து மாற மாட்டார்கள் போலிருக்கிறது!

- மரகதம் ராகவசிம்ஹன், திருவல்லிக்கேணி

அனுபவங்கள் பேசுகின்றன!

சர்க்கஸுக்கும் ஐ.டி கார்டு!

தோழி, தன் இரண்டு மகன்களையும் தாத்தா - பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்காக அனுப்பியிருந்தாள். ஊரில் இருந்து போன் செய்தவர்கள், சர்க்கஸ் அழைத்துச் செல்வதாகச் சொல்லியுள்ளனர். 'அவர்களிருவரும் வயதானவர்கள்; விடுமுறை நாள் என்பதால் கூட்டமும் அதிகம் இருக்கும்; அதோடு... ப்ரீ கே.ஜி, முதல் வகுப்பு என படிக்கும் மகன்கள் இருவரும் படுசுட்டி' என்றெல்லாம் யோசித்து தயங்கினாள் என் தோழி. தாத்தாவோ மிகவும் ஆசைப்பட்டுக் கேட்க, ''சரி, டிரெஸ்கூட சேர்த்து அவங்களோட ஸ்கூல் ஐ.டி கார்டையும் கொடுத்துவிட் டிருக்கேன். அதை அவங்க கழுத்தில மாட்டி கூட்டிட்டுப் போங்க. ஒருவேளை கூட்டத்தில் தொலைந்து போனாலும் ஸ்கூல் அட்ரஸ், வீட்டு அட்ரஸ், போன் நம்பர்னு எல்லாம் இருக்கும்'' என்றாள் தோழி.

அவளுடைய சாதுர்யத்தை நான் பாராட்ட, குழந்தைகளை எங்கு வெளியில் அழைத்துச் சென்றாலும் இதை வழக்கமாக கடைப்பிடிப்பதாகக் கூறினாள்!

குட் ஐடியாதானே!

- உஷாபிரியா இளங்கோவன், வெள்ளனூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

வயதானவர்களுக்கு வேண்டாமே இரண்டாவது மாடி!

திர்வீட்டில் அடித்தளத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, முதல் மாடியில் ஹவுஸ் ஓனர் குடும்பம் வசிக்கிறது. இரண்டாவது மாடியில் ஒரே ஒரு அறையைக் கட்டி, 85 வயதான அவர்களுடைய தாயை தங்க வைத்துள்ளனர். வேளைக்கு உணவு, தண்ணீர் அனைத்தையும் மாமியாருக்குக் கொண்டு போய் கொடுப்பார் அந்த வீட்டு மருமகள். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென வீடு இடிவதுபோல சத்தம் கேட்க, தெருவே பதறி அடித்து வெளியே வந்து பார்த்தபோது, அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். வயதான அந்த பாட்டி, தன் பேத்தியைப் பார்ப்பதற்காக கீழே வர முற்பட்டிருக்கிறார். திடீர் என்று தலை சுற்றி, இரண்டாவது மாடியிலிருந்து தவறி, பக்கத்து ஓட்டு வீட்டில் விழுந்துவிட்டார். கை, கால், தலை அனைத்தும் அடிபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லட்சக்கணக்கில் செலவு செய்து அவரைக் காப்பாற்றினார்கள்.

வயதானவர்களை முடிந்த வரை வீட்டின் அடித்தளத்திலேயே குடியிருக்கச் செய்வதுதான் சிறந்தது. அதைவிடச் சிறந்தது, கூடவே தங்க வைத்துக் கொள்வது!

- தி.சங்கீதா கணேசன், திருச்சி