Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

Published:Updated:
அனுபவங்கள் பேசுகின்றன!
##~##

படித்தவர்கள்தான்... ஆனால்?

எங்கள் பகுதியில் ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். மண் தோண்டும்போது பக்கத்தில் உள்ள சாக்கடையில் சரிந்து, அது அடைத்துக் கொண்டது. அக்கம்பக்கம் வீடுகளில் வெளியேறும் நீர் சாக்கடையில் தேங்கிவிட்டது. ''அந்த மண்ணை அகற்றுங்கள். சாக்கடையின் மேலே ஒரு

அனுபவங்கள் பேசுகின்றன!

சிமென்ட் பலகை போட்டால் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் வந்து செல்ல வசதியாக இருப்பதோடு, சாக்கடையில் மண், கல், ஜல்லி போன்ற பொருட்கள் விழாமல் இருக்கும்’' என்று சம்பந்தப்பட்ட வீட்டுக்காரரிடம் கூறினோம். ''இப்படி மண் அடைத்துக் கொண்டதால் நீர் தேங்கி கொசுக்கள் பரவுகின்றன'’ என்பதையும் எடுத்துச் சொன்னோம். ஆனால், 'இதோ இன்று செய்து விடுகிறேன்... நாளை செய்து விடுகிறேன்...' என்று நாட்களைக் கடத்துகிறாரே தவிர, மண்ணை அகற்றி சாக்கடையை சுத்தம் செய்தபாடில்லை. ஏன் இப்படியரு அலட்சியம் என்று புரியவில்லை!

அந்த வீட்டின் கணவன், மனைவி இருவரும் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள். ஆனால், படித்தவர்களே இப்படி தன் வேலையானால் சரி, அடுத்தவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற நினைப்பில் செயல்பட்டால், மற்றவர்களை என்ன சொல்ல முடியும்?

- வீ.ஸ்ரீவித்யா, ஓசூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

சைலன்ஸர்கள் ஜாக்கிரதை!

நான்கு வயதாகிறது என் பேத்திக்கு. அன்று அவள் அப்பா வெளியே சென்றுவிட்டு பைக்கில் வந்து இறங்கியதும், 'டாடீ’ என்று உற்சாகமாக ஓடி வந்தவள், துரதிர்ஷ்டவசமாக சைலன்ஸரில் கால் வைத்துவிட்டாள். துடித்த குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். ''எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இப்படி சைலன்ஸரில் சுட்டுக்கொள்ளும் குழந்தைகள் கேஸ் வந்துகொண்டேதான் இருக்கிறது'’ என்று வருத்தப்பட்ட டாக்டர், ''ஒரு நொடி கவனக்குறைவுதான் காரணமாக இருக்கும். பைக்கில் இருந்து இறங்கும் ஆண், சுதாரித்து கொஞ்ச நேரம் குழந்தைகளை அதனருகில் செல்லவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

சைலன்ஸர் புண்கள் இனியும் தராதீர்கள் குழந்தைகளுக்கு!

- ஆர்.சகுந்தலா, மேற்கு மாம்பலம்

அனுபவங்கள் பேசுகின்றன!

பக்தர்களே கவனியுங்கள்!

ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் தாயார் சந்நிதியில் பரிகார பூஜை ஒன்றுக்காக ஒன்பது அகல் விளக்குகள் ஏற்றிவிட்டு, தாயாரை மனமுருக வணங்கித் திரும்பினேன். காலில் 'சுள்’ளென்று எரிச்சல். பார்த்தால், யாரோ விளக்கேற்றிய பிறகு தூக்கிப் போட்ட தீக்குச்சி என் காலை பதம் பார்த்திருந்தது. 'பரிகார பூஜை முடித்து வரும்போது இப்படியா?' என ஏக மனவருத்தத்துடனும்... கால் எரிச்சலுடனும் மீண்டும் சந்நிதிக்குள் சென்று தாயாரை வணங்கினேன். விளக்குகளை வைப்பதற்கென்று தனியாக ஓர் இடம் ஏற்பாடு செய்திருப்பது போல், தீக்குச்சிகளைப் போடவும் ஏற்பாடு செய்திருக்கலாம். பக்தர்களாவது தீக்குச்சிகளை அணைத்துப் போட்டிருக்கலாம். கவனியுங்கள் தோழிகளே!

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

அனுபவங்கள் பேசுகின்றன!

சின்ன அன்பளிப்பு...    பெரிய பலன்!

தனியார் டிராவல்ஸ் மூலம் காசி யாத்திரை டூர் சென்றோம். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்தார்கள். புதியவர்கள் என்பதால், பயணம் ஆரம்பித்தபோது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. டிரெயின் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஒருவரோடு ஒருவர் விரும்பி அறிமுகம் செய்துகொண்டார்கள். சிலர், பயணத்துக்கு அத்தியாவசியமான சின்னஞ்சிறு பொருட்களை அனைவருக்கும் அன்பளிப்பாக கொடுத்தார்கள். உதாரணமாக... பிளாஸ்டிக் கொக்கி (டிரெயினில் ஏதாவது மாட்ட உதவும்), பிளாஸ்டிக் ஊசி (பாவாடை நாடா கோர்ப்பது. நாடாதான் நேரம்கெட்ட நேரத்தில் உள்சென்று விடுமே! இது மிகவும் யூஸ்ஃபுல் ஆக இருந்தது), கால் வலிக்கு தேய்க்கும் ஆயின்மென்ட், விக்ஸ், இஞ்சி முரப்பா, எலந்த வடை, காசியில் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட்... இதுபோல் அவர்களால் முடிந்த பரிசுப் பொருட்களை அனைவருக்கும் வழங்கி, ஃப்ரெண்ட்ஸ் ஆனார்கள். எவ்வளவோ செலவு செய்து சுற்றுலா செல்கிறோம். அதில் ஒரு சின்ன செலவாக நம்மால் முடிந்த இந்த மாதிரி சின்ன பொருட்களை கொடுத்தால், நிறைய உபயோகப்படுவதோடு, புது நட்பும் கிடைக்கும்!

- ஜே.ஷீலா, குளித்தலை