Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150

Published:Updated:
##~##

பேருந்து பயணம்... பறிபோன பணம்!

தினமும் பேருந்து மூலம்தான் அலுவலகம் சென்று வருகிறேன். எங்கள் பகுதியில் போதுமான பேருந்து வசதிகள் இல்லாததாலும், காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அதிகமிருப்பதாலும்... ஒவ்வொரு நாளும் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழியும். அதை சமாளித்து நிற்பதே சிரமமாக இருக்கும். அதனால், இருக்கையில் அமர்ந்து வருபவர்களிடம் என் தோள்பையைக் கொடுத்து, இறங்கும் இடம் வந்ததும் பெற்றுக்கொள்வேன். அடையாள அட்டைகள், ஏ.டி.எம் கார்டு, தேவையான அளவு பணம் எல்லாம் அதில்தான் இருக்கும். அன்று ஒரு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவங்கள் பேசுகின்றன!

பெண்மணியிடம் இப்படி கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்ன நான், இறங்கும் இடம் வந்ததும் வழக்கம் போல பையை வாங்கிக் கொண்டு அலுவலகம் வந்துவிட்டேன். அதன்பிறகுதான் கவனித்தேன் என்னுடைய தோள் பையில் இருந்த பணம் காணாமல் போயிருப்பதை. இதற்காக யாரை நொந்து கொள்ள முடியும்? அதிலிருந்து பேருந்தில் தோள் பையை யாரிடமும் கொடுப்பதில்லை. கூடுதல் சிரமம்தான் என்றாலும் நானே வைத்துக் கொள்கிறேன். மேலும் முக்கிய அடையாள அட்டைகளையும் வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்கிறேன். தேவையான நாட்களில் மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

சிரமமான பேருந்துப் பயணத்தை சிக்கலானதாகவும் ஆக்கிக்கொள்வதை தவிர்க்க முடியும்தானே!

- எஸ்.முத்துலெட்சுமி, இருகூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒரு சுற்றுலா கற்றுத் தந்த சந்தோஷ பாடம்!

மீபத்தில் பழனிக்குச் சென்றோம். அருகில்தானே இருக்கிறது என்று அப்படியே கொடைக்கானல் கிளம்பினோம். முதல் முறை செல்வதால் எங்களுக்கு அந்த ஊரில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அங்கு சென்று இறங்கிய பின் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. பின்பு அங்கிருந்த ஓர் உணவகத்தில் விசாரித்து ஓரளவு சுற்றிப் பார்த்து வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும்தான் கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி படித்தறிந்தோம். அங்கு நாங்கள் எத்தனை இடங்களை பார்க்கத் தவறவிட்டிருக்கிறோம் என்பது தெரிந்தபோது... மிகவும் வருத்தமாகிவிட்டது. என்றாலும், 'இனி சுற்றுலா செல்லும் முன் சம்பந்தப்பட்ட இடங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து செல்வது கட்டாயம்' என்கிற பாடம் கற்றது சந்தோஷமே!

- வெ.கிருஷ்ணவேணி, ஓசூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

பூக்காத மரம்... புதுவித மோசடி!

''பூக்காத மரத்துக்கு மருந்து வைக்கிறேன். உங்க வீட்டில மரம் ஏதும் பூக்காம இருக்கா..?'' என கேட்டுக்கொண்டே ஒருவர் வீடு வீடாக வந்தார்.

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாமரம் இந்த வருடம் பூ வைக்கவில்லை என்று, அவரை அழைத்தேன். ஒரு மரத்துக்கு 300 ரூபாய் கட்டணம் என்றவர், ஒரு மண்வெட்டி, கடப்பாரையுடன் மரத்தின் வேர் பகுதியை ஆழப்படுத்தி, அவர் எடுத்து வந்திருந்த மருந்தை ஊற்றி, மூடிவிட்டார். ஒருவேளை மரம் பூக்காவிட்டால் மீண்டும் அவரை தொடர்பு கொள்வதற்காக மொபைல் எண்ணைக் கேட்டேன். அவரும் கொடுத்தார். சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. மரம் பூக்கவில்லை. மாறாக இலைகள் சருகுபோல் காயத் தொடங்கிவிட்டன. அவர் கொடுத்திருந்த எண்ணுக்கு போன் செய்தால், 'ராங் நம்பர்' என்கிற பதில் கோபத்துடன் ஒலிக்கிறது (என் போல ஏமாந்து போன எத்தனை பேர், அந்த நம்பரின் உண்மை யான உரிமையாளரை இப்படி நோகடித்தார்களோ?)

தோழிகளே... இதுபோன்ற ஆசாமிகள் வந்தால் ஏமாறாமல் இருங்கள்!

- எஸ்.புவனா சாமா, சீர்காழி

அனுபவங்கள் பேசுகின்றன!

பட் பட்... பாஸ்போர்ட்!

மீபத்தில் நானும் என் கணவரும் பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டி, தஞ்சா வூர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம். ''4 அல்லது 5 மணி    நேரம் ஆகும்... கையில் தின்பண்டங்கள் மற்றும் தண்ணீருடன் உள்ளே செல்லுங்கள்'' என்றெல்லாம் பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால், அங்கு நடந்ததோ திருப்தியான அனுபவம். நாங்கள் இருவருமே சீனியர் சிட்டிசன்கள் என்பதால் எங்களை வரிசையில் நிற்க வைக்காமல் உள்ளே அனுப்பி, ஆவணங்களை சரிபார்த்து, விரைவாக வேலையை முடித்துக் கொடுத்தனர். மேலும் அங்கு பணியாற்றிய பெண்களும், ஆண்களும் அவ்வளவு சுறுசுறுப்பாகவும், கனிவுடனும் எங்களை அணுகினார்கள். 12 மணிக்கு உள்ளே சென்ற நாங்கள் எந்தக் காத்திருப்பும், பதற்றமும் இன்றி 1.20-க்கு வெளியே வந்துவிட்டோம். ஐந்தே நாட்களில், 'உங்கள் பாஸ்போர்ட்டை விரைவு தபாலில் அனுப்பியுள்ளோம்’ என்று ஒரு குறுஞ்செய்தி பின் தொடர்ந்தது. அந்த 'சபாஷ்’ அலுவலகத்துக்கான பாராட்டை மகிழ்ச்சியுடன் 'அவள் விகடன்’ இதழில் பதிவு செய்துகொள்கிறேன். முக்கியமான விஷயம்... நாம் கொண்டு செல்லும் ஆவணங்கள் அனைத்தும் சரியானதாகவும், உண்மையானதாகவும் இருக்கும்பட்சத்தில்தான் இந்த அனுபவம் சாத்தியம்!

- வேம்பு ராமசந்திரன், சீர்காழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism