ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

ஒரு வார்த்தை!

எங்கள் வீட்டின் மாடியில் ஒரு தம்பதி குடியிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்த ஒரு பெண்மணி, ''உங்க வீடு எப்பவும் சுத்தமா, ஒரு இடத்தில் வெச்ச பொருள் மாறாம அங்கங்க அப்படி அப்படியே இருக்கே!'' என்று ஆச்சர்யமாகப் பேசிக்கொண்டே இருந்தவர், பேச்சுவாக்கில்...

''உங்க வீட்டுல குழந்தைங்களே இல்லைங்கறதாலதான் இவ்வளவு சுத்தமா வெச்சுக்க முடியுது'' என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் பேசிவிட, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் அந்த தம்பதிக்கு முகமும் மனமும் சட்டென்று வாடிவிட்டது. அந்தப் பெண்மணியும் வேண்டுமென்றே இதைச் சொல்லவில்லைதான். ஆனால்... இடம், பொருள், ஏவல் என்று ஒன்று இருக்கிறதுதானே..! இடமறிந்தல்லவா வார்த்தைகளை விட வேண்டும்!

சகோதரிகளே... ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். பேச்சில் வேண்டும் பக்குவம்!

- ஆர்.கௌரி, வேலூர்

தரிசன வரிசையில் ஒரு பாடம்!

திருப்பதிக்கு சென்றிருந்தபோது, நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் சலித்துக்கொள்ளும் நிலை. ''கடவுள் ஏன்தான் நம்மை சோதிக்கிறாரோ'' என்று நான் வாய்விட்டே புலம்பிவிட்டேன். அருகிலிருந்த பெண்மணி ''அப்படி சொல்லாதே. கடவுள் சந்நிதானத்தில் அதிக நேரம் இருக்க வாய்ப்பு கிடைச்சதுக்காக சந்தோஷப்படு. இந்த நிமிடங்களை இறைவனை தியானம் செய்ய பயன்படுத்திக்கோ!'' என்றார் புன்னகை தவழ்ந்த முகத்துடன்.

'நச்’சென்ற இரண்டு வரிகளில் நன்னம்பிக்கையைக் கற்றுக்கொடுத்த அவருக்கு நன்றி கூறினேன்.

எந்தக் கோயிலில் வரிசையில் நிற்க நேரிட்டாலும், இப்போதெல்லாம் சலிப்பதே இல்லை நான். அவர் சொன்னதுபோல், கூட்டத்துக்கு மத்தியிலும் தெய்வத்தை தியானத்தில் காணப் பழகிக்கொண்டேன்!

- விஜயலட்சுமி, பெங்களூரு

சுவர் இருந்தால்தானே..?!

என் தோழி, தன் மகளை சிறு வயதிலேயே பாட்டு கிளாஸ், ஹிந்தி டியூஷன், பாட வகுப்புகளுக்கான டியூஷன், ஸ்லோக கிளாஸ் என்று அனுப்பி வந்தாள். ''அவளுக்கு வாரத்துல அஞ்சு நாளும் ஏதாவது ஒரு கிளாஸ் இருக்கும்'' என்று அதை பெருமையாகவும் சொல்வாள். ஒருநாள் அந்தக் குழந்தைக்கு பல் கிட்டி போக, உடல் நடுக்கம் வந்து, உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டரிடம் சென்றபோது, ''அதிகமான படிப்பு சுமை, அதன் தொடர்ச்சியாக அதிக மன அழுத்தம் ஆகியவற்றால்தான் இது நிகழ்ந்திருக்கிறது. குழந்தைக்கு அதன் உடல், மன திறனுக்கு மீறிய சுமையை திணிக்காதீர்கள்'' என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

நேற்றைய உலகில், தான் பெறாத அனைத்தையும் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆவலிலும்... குழந்தையின் வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலும் இப்படியெல்லாம் இஷ்டம்போல திணிக்கிறார்கள் பெற்றோர் பலரும். ஆனால், சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?!

- ஆர்.சீதா, சீர்காழி

ஆயின்மென்ட் அட்டை உஷார்!

டாக்டர் எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டி, ஒரு மருந்துக் கடையில் சமீபத்தில் மருந்துகளை வாங்கினேன். அதில் சருமத்தில் தடவும் ஒரு ஆயின்மென்ட்டும் இருந்தது. அனைத்து மருந்துகளையும் கவரில் வாங்கிக்கொண்டு வீட்டில் வந்து பார்த்தால், ஆயின்மென்டின் வெளிப்புற அட்டை மட்டுமே இருந்தது, உள்ளே மருந்து டியூப் இல்லை. மீண்டும் கடைக்காரரிடம் சென்று கேட்க, அவர், ''கண்டிப்பா டியூப் இருந்திருக்கும். மிஸ் ஆக வாய்ப்பு இல்ல'' என்று கறாராகக் கூறிவிட்டார். இப்போதெல்லாம் அட்டையில் அடைக்கப்பட்டு வரும் பொருள்கள் வாங்கும்போது, கடைக்காரரின் கண்முன்னே பிரித்துப் பார்த்துதான் வாங்குகிறேன்!

- கண்ணகி, பவானி

80 செ.மீட்டர் வருத்தம்!

சில மாதங்களுக்கு முன் தோழி வீட்டில் வரலட்சுமி விரத பூஜைக்குச் சென்றிருந்தேன். பூஜை முடிந்ததும் வந்திருந்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், பிரசாதம், ஒரு ரவிக்கை துணி ஆகியவற்றைக் கொடுத்தாள். அனைவரும் கலைந்து செல்லும்போது, வாசலில் சற்று உடல் பருமனான இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ''தாம்பூலம் கொடுக்கறவங்க பெரும்பாலும் 80 செ.மீ ரவிக்கை துணியை கொடுத்துடறாங்க. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு பத்தாமப் போயிடுது...'' என்றனர் வருத்தத்துடன்.

அன்றிலிருந்து தாம்பூலம் கொடுக்கும்போது, 1 மீட்டர் ரவிக்கை துணி வைத்துக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டேன்!

- ஜெயலட்சுமி வசந்தராசன், கல்லாவி