Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

150

##~##

'இதுதான் டி.டியா?’

ங்கியில் பணம் கட்டும் கவுன்ட்டரில் வரிசையில் நின்றிருந்தேன். கல்லூரி மாணவி ஒருவர் என்னிடம், ''டி.டி எடுப்பதற்கு பணம் கட்டிவிட்டேன். இதுதான் டி.டி-யா?'' என்று பணம் கட்டிய ரசீதை (சல்லான்) என்னிடம் காண்பித்துக் கேட்டாள். இன்றைய இளம்தலைமுறையின்

அனுபவங்கள் பேசுகின்றன!

பிரதிநிதிகளில் ஒருத்தியான அவள், வங்கியின் அடிப்படை நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளாமலிருப்பது அதிர்ச்சியாக இருந்தது. என்றாலும், அதையெல்லாம் வெளிக்காட்டாமல்... ''இது, பணம் கட்டியதற்கான ரசீது. டி.டி-யை பிரின்ட் எடுத்து, கையொப்பமிட்டு தருவார்கள். காத்திருந்து வாங்கிச் செல்லுங்கள்'' என்று விளக்கினேன்.

பள்ளி, கல்லூரிகளில் வங்கிகளின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாமே!

- கே.சீதாலட்சுமி, பாளையங்கோட்டை

கௌரவம் பார்க்காதீர்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் நண்பர்களுடன் பெரிய உணவகம் ஒன்றில் சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிடாத ஒரு உணவையும் எங்களுடைய பில்லில் சேர்த்துக் கொடுத்தார் உணவு பரிமாறியவர். அந்த உணவை எங்களில் யாரும் சாப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின், அவரை அழைத்து விவரத்தை தெரிவித்தோம். 'ஸாரி’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி, பில்லைத் திருத்தித் தந்தார். அவர் வேண்டுமென்றே செய்தாரா... அல்லது தவறுதலாகச் செய்தாரா... என்று தெரியவில்லை. ஆனால், பொதுவாகவே, ஹோட்டலில் சாப்பிடும் பலரும் பில்லை சரிபார்ப்பதில்லை என்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இதுவே, இதுபோன்ற தவறுகளுக்கு வழிவகுக்கின்றன. ஹோட்டல் மட்டுமல்ல... எல்லா இடங்களிலுமே பணம் கட்டும் முன்பாக பில்களை சரிபார்ப்பதுதான் புத்திசாலித்தனம். இதில், சோம்பேறித்தனபடவோ... கௌரவம் பார்க்கவோ எதுவும் இல்லை தோழிகளே! பறிபோவது நம் பணம் என்பதை மனதில் வையுங்கள்!

- ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை

அனுபவங்கள் பேசுகின்றன!

தரையில் விழுந்தது... தலையில் விழுந்திருந்தால்..?

தெரிந்தவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தோட்டத்தில் அவர் வளர்க்கும் பூச்செடிகளை பார்வையிட்டபடி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது 'படார்’ என்று ஏதோ சத்தம் கேட்க, திடுக்கிட்டுப் பார்த்தோம். மொட்டை மாடியிலிருந்து ஒரு செங்கல், எங்களுக்கு அருகே கீழே விழுந்து நெறுங்கிக் கிடந் தது. உலர்த்துவதற்காக படுக்கைவிரிப்பு, போர்வை போன்றவற்றை மொட்டை மாடி கைப்பிடி சுவரில் விரித்து, விழுந்துவிடாமல் இருக்க மேலே ஒன்றிரண்டு செங்கல் வைப்பது அவருடைய வழக்கமாம். அப்படி ஒரு செங்கலை அன்று பூனை தட்டிவிட்டிருக்க, அதுதான் அந்த 'படார்’ சத்தம். தரையில் விழுந்தது யாருடைய தலையில் விழுந்திருந்தால் என்னாவது?!

ஆபத்தை அவருக்கு எடுத்துச் சொல்ல, ஆமோதித்தவர்... தன் வழக்கத்தை மாற்றிக்கொள்வதாகவும் உறுதி கூறினார்!

- டி.லலிதா, கோயம்பேடு

அனுபவங்கள் பேசுகின்றன!

அட்சய திருதியைக்கு, கடன் வாங்கியாவது தங்கம்..!

வீட்டுக்குப் பழக்கமான பெயின்டர் ஒருவர், அன்று களைப்புடன் வந்து, ''பழைய சோறு இருந்தா போட்டுக் கொடுங்கம்மா'’ என்று கேட்க, தட்டை கையில் கொடுத்தேன். ''பொண்டாட்டிகூட சண்டைம்மா...'’ என்று புலம்பியபடியே சாப்பிட ஆரம்பித்தவர், ''ஏதோ ஒரு திதி வருதாமே... 'அன்னிக்கு தங்கம், வெள்ளி வாங்குனா... செல்வம் சேரும். குண்டுமணி தங்கமாவது வாங்கித்தா, இல்லைனா கொலுசு வாங்கித்தா'னு நச்சரிச்சா. நானே தினக்கூலிக்காரன். ஒரு நாள் வேலை இருக்கும், மறுநாள் இருக்காது. அதெல்லாம் நம்மால முடியாதுடினு சொன்னா, 'கடன் வாங்கியாவது வாங்குனு'னு சொல்லி, சமைக்க மாட்டேன்னு படுத்துகிட்டு அழுகுறா...'' என்றார் வேதனையுடன்.

''அட்சய திருதியை என்பது... திதிகளெல்லாம் ஒன்று சேரும் மிகச் சிறந்த நாள். சக்தி இருப்பவர்கள் தங்கம், வெள்ளி வாங்கலாம். ஏழைகளுக்கு உணவு, உடை, புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம். இல்லாதவர்கள், அன்று கோயிலுக்குப் போய் ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றலாம். அதன் பலன், கடவுள் பன்மடங்கு நமக்கு கிடைக்கும்படி செய்வார். அதற்காக கடன் வாங்கியாவது நகை வாங்கினால், கடன்தான் பெருகும்'' என்று அவரிடம் சொல்லி, மனைவியிடம் போய் விளக்கச் சொன்னேன்.

- லஷ்மி ஸ்வாமி, சென்னை-42

அனுபவங்கள் பேசுகின்றன!

திகில் கிளப்பிய தலைவிரி கோலம்!

குடும்பத்துடன், திண்டிவனம் அருகேயுள்ள திருவக்கரை வக்கரக்காளியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தோம். தரிசனம் முடித்து, திரும்பியபோது பேருந்தில் ஓர் இளம்பெண் கூந்தலை 'ஃப்ரீ ஹேர்’ விட்டபடி ஜன்னலோர இருக்கையில் அமர்ந் திருந்தார். தோழிகளுடன் அரட்டை அடித்தபடி வந்தவரின் கூந்தல், எதிர்பாராத விதமாக பேருந்துக்கு நெருக்கமாக வந்த லாரியின் கம்பியில் மாட்டி இழுக்க, அனைவருக்கும் பேரதிர்ச்சி. அந்தக் குறுகிய சாலையில் வாகனங்கள் இரண்டுமே மெதுவாக நகர்ந்துகொண் டிருந்ததால்... அவை உடனடியாக நிறுத்தப்பட, பெரும் அவஸ்தைக்குப் பின் அந்தப் பெண் கூந்தலை மீட்டார்.

'தலைவிரி கோலம்’ என்று நம் முன்னோர் எச்சரிப்பதன் அர்த்தம் புரிந்தது, அந்த அதிர்ச்சி சம்பவத்துக்குப் பின்!

- ஜெ.மஞ்சுளா தேவி, செங்குன்றம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு