Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ்

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ்

Published:Updated:
##~##

ஓவியங்கள்: சேகர்                                                                                        ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

150

உதவியும்... உபத்திரவமும்!

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த என் தோழி, தன்னுடன் பணியாற்றியவ ரின் மகள் திருமணத்துக்காக வங்கிக் கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டாள். திருமணம் முடிந்து சில மாதங்களில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட, வங்கிக் கடன் அப்படியே நின்றுவிட்டது. இறந்தவரின் ஆண் பிள்ளையோ, திருமணம் ஆன பெண் பிள்ளையோ வங்கிக் கடனை அடைக்க முன்வரவில்லை. வங்கியோ... என் தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டது. தன் குறைவான

அனுபவங்கள் பேசுகின்றன!

வருமானத்தில் இப்போது அந்தக் கடனை மாதா மாதம் செலுத்திக் கொண்டிருக்கிறாள். இதனால் என் தோழிக்கும் அவள் கணவருக்கும் அடிக்கடி சண்டை வேறு.

'உதவி' என்பது வேறு... 'உபத்திரவம்' என்பது வேறு. எச்சரிக்கை தோழிகளே!

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

உழைப்பைச் சொல்லித் தாருங்கள்!

நானும் தோழியும் கடைவீதிக்குச் சென்றபோது, தோழிக்குத் தெரிந்த பெரியவர் ஒருவரை எதேச்சையாக சந்தித்தோம். எங்களிடம் நலம் விசாரித்தவர், தன் மூன்று பையன்களுக்கும் அவர்கள் விருப்பப்படியே தொழில் அமைத்துக் கொடுத்து, வீடு கட்டிக் கொடுத்து, அவர்கள் விரும்பிய பெண்களையே திருமணம் முடித்து வைத்ததாகவும், ஆனால்,

அனுபவங்கள் பேசுகின்றன!

மூவருமே தத்தமது தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறி வருந்தினார். இப்போது அந்த மூன்று குடும்பங்களுக்கும் அவர்தான் படியளந்து கொண்டிருப்பதாகவும் கூறி ஆதங்கப்பட்டார். எனக்கு கேட்க வருத்தமாக இருந்தது. தோழியோ, ''எல்லாம் செஞ்சேன், எல்லாம் செஞ்சேன்னு சொல்றீங்களே... அவங்களுக்கு உழைப்பு பத்தி சொல்லிக் கொடுத்தீங்களா? உழைப்பின் முக்கியத்துவத்தையும். அதனால் கிடைக்கிற பணத்தோட அருமையையும் சொல்லி வளர்த்திருந்தா பொறுப்பா இருந்திருப்பாங்க. ரொம்ப சுகபோகமாக பழக்கி, அவங்க சின்னச் சின்ன விஷயத்துக்கும் உங்களை சார்ந்து நின்னதாலதான் இந்த கதி!'' என்றாள் 'நச்’ என்று.

என்னையும் அறைந்தது அந்த உண்மை!

- ஜி.சசிகலா, ஸ்ரீரங்கம்

பூனை முகத்தில் விழித்தால் 1000 ரூபாய்!

எங்கள் வீட்டின் கீழ்பகுதியில் குடியிருந்த இளம் பெண், ஒருநாள் காலையில் பேயறைந்தது போல வந்தாள். ''தூங்கி எழுந்திருக்கும்போதே ஜன்னல்கிட்ட ஏதோ சத்தம் வருதுனு பார்த்தேன் ஆன்ட்டி. கறுப்பா, பெருசா ஒரு பூனை. பதற்றமா இருக்கு. பூனை முகத்தில் முழிச்சா அபசகுனமாமே?'' என்றாள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

நான் சிரித்துக்கொண்டே, ''அதுவும் ஒரு ஜீவன்தானே? வயிற்றுப்பாட்டுக்காக தேடி வந்திருக்கும். பாலும், தயிரும் திருடிச் சாப்பிடறதால அதை கிருஷ்ணனாகூட நினைக்கலாம். பயப்படாதே...'' என்றேன்.

மாலையில் சிரித்த முகத்துடன் வந்தவள், ''ஆன்ட்டி, பூனை முகத்திலே முழிச்சது அதிர்ஷ்டமா போயிடுச்சு! காலையில பேப்பரோட ஒரு சின்ன துண்டு பிரசுரம் இருந்தது. 'அழகான, கறுப்பான எங்கள் குண்டு பூனை 'பிளாக்கி’யை காணவில்லை. அதிக தூரம் சென்றிருக்காது என்பதால், தெருவில் அனைவருக்கும் இந்த துண்டு பிரசுரம் கொடுக்கிறோம். கண்டுபிடித்துச் சொன்னால் பரிசு!’னு இருந்தது. தோட்டத்தில் போய் பார்த்தா, பிளாக்கி மதில் மேல் தூங்கிட்டு இருந்தது. நான் தகவல் சொன்னதும், உரிமையாளர் வசதியானவர் போல, வந்து எங்கிட்ட 1000 ரூபாய்

கொடுத்துட்டு அதை தூக்கிட்டுப் போயிட்டார்!'' என்றாள் குதூகலத் துடன்!

- ரமணி ரங்கநாதன், விருகம்பாக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன!

துக்கத்தைக் கிளறும் விசாரிப்புகள்!

நான் சென்னை புறநகர் பகுதியில் வசிக்கிறேன். தன் அம்மா வீட்டிலிருந்த என் 37 வயது மருமகள், திடீரென்று இறந்துவிட்டார். செய்தி அறிந்து, என் வீடு தேடி துக்கம் விசாரிக்க உறவினர், நண்பர்கள் வந்தார்கள். அதில் ஒரு பெண் கிளம்பும்போது, ''நான் வீட்டுக்குப் போனதும் குளிக்கணுமா? மருமக அவங்க அம்மா வீட்டுலதானே இறந்திருக்காங்க?'' என்றெல்லாம் கேள்விகளாகக் கேட்க, 'உண்மையில் இவள் வந்தது துக்கம் விசாரிக்கவா... இல்லை துக்கத்தைக் கிளறவா..?' என்று எனக்கு மிகுந்த சங்கடமாகிவிட்டது.

சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதற்கெல்லாம் கூட வகுப்பா எடுக்க முடியும்?

- சாவித்திரி விஸ்வநாதன், போரூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

நோக வைத்த நுங்கு!

பெங்களூரு டு சென்னை பயணம். அரக்கோணத்தில் வண்டி நிற்க, நுங்குகள் பனை ஓலையில் (குடைபோல்) கட்டி விற்கப்பட்டது. ஒரு செட்டில் 10 நுங்குகள் இருக்கும், விலை ரூபாய் 20 என்று நுங்கு விற்பனை செய்த பெண் சொல்ல, ஆர்வத்தில் 100 ரூபாய்க்கு ஐந்து செட்கள் வாங்கினேன். ஒரு ஓலையைப் பிரிக்க, இளம் நுங்குகள். பரவசப்பட்டு சுவைத்தோம். இரண்டாவதைப் பிரிக்க, அதில் ஓட்டையும் உடைசலுமாக நுங்குகள். மற்றவை அதைவிட மோசம். மற்ற பிரயாணிகளின் ஏளனப் பார்வை, கணவரின் கோபப் பார்வையுடன், பிள்ளைகளின் கேலியும் சேர... எனக்கு அவமானமாகிவிட்டது. இனி, எந்தப் பொருளையும் கண்களால் பார்க்காமல் வாங்கக் கூடாது என்று பாடம் கற்றுக்கொண்டேன்.

இப்போது நுங்கு சீஸன் என்பதால், என் இந்த அனுபவம், உங்களுக்கு நினைவிருக்கட்டும் தோழிகளே!

- லஷ்மி, சென்னை-24

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism