ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

நல்லோர் வாக்கு!

பிரார்த்தனைகளுடன் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அர்ச்சனைக்கு நாங்கள் வாங்கிச் சென்றிருந்த தேங்காய் அழுகலாக இருக்க, அதிர்ந்துவிட்டோம். கற்பூரம் காட்டியபோது அது அணைந்துவிட, அழுகை வராத குறைதான். ஆனால் அர்ச்சகரோ எங்கள் அச்சம் நீக்கும்விதமாக, ''அம்மா! இதெல்லாம் எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளே. மனதில் குழப்பம் வேண்டாம்!'' என்று ஆற்றுப்படுத்தியதுடன், வேறு தேங்காய் வாங்கி வரச்சொல்லி அர்ச்சனை செய்து, பெரிய தீபத் தட்டில் கண் நிறைய கற்பூரம் காட்டி, கையில் பிரசாதமும், மனதில் நிம்மதியும் தந்து அனுப்பி

வைத்தார். ஆனாலும் மனதுக்குள் ஒரு நெருடல் இருக்க, குடும்ப ஜோசியரிடம் சென்று நடந்ததைச் சொன்னோம். அவரும் சிரித்துக் கொண்டே, ''தற்செயலாக நடப்பவற்றுக்கு மனதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. கடவுள் தீயவர் அல்ல. எப்போதும் நமக்கு பாதுகாப்பாகவே இருப்பார். இதற்கு மேலும் தெளியவில்லை என்றால் சொல்... ஆயிரம், பத்தாயிரம் ரூபாய்க்குப் பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கிறேன். சரியா?!'' என்றார்.

நல்ல மனிதர்களின் வாக்கே தெய்வம் தரும் நிம்மதி என்று அமைதி ஆனேன்!

- பி.பத்மா, கோயம்புத்தூர்

நிற்கும் வண்டியிலும் துரத்தும் விபத்து!

அன்று என் தோழியைப் பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் அவளுடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். வண்டியின் மெயின் ஸ்டாண்ட் போடுவதில் எனக்கு ஒரு சோம்பேறித்தனம். மொசைக் தரையிலான போர்டிகோவில் பக்கவாட்டு ஸ்டாண்டை போட்டுவிட்டு, அவளுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சத்தம். ஓடிச்சென்று பார்த்தால், தோழியின் 5 வயதுக் குழந்தை மற்றும் பக்கத்து வீட்டுக் குழந்தை இரண்டும் வண்டியில் ஏறி விளையாட, அந்தத் தரையின் வழவழப்பு காரணமாக சட்டென்று ஸ்டாண்ட் விலகி, வண்டி சாய்ந்துவிட்டது. நல்லவேளையாக குழந்தைகள் மேல் விழவில்லை.

அதிலிருந்து... வண்டியை சறுக்காத இடமாக பார்த்து நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், முடிந்தவரை மெயின் ஸ்டாண்ட் போடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுவிட்டேன்!

- அபி மெர்லின், சேலம்

சின்ன உதவி... பெரிய மரியாதை!

இளம் பெண்ணான நான், வங்கியில் சேமிக்க முடிவெடுத்து, பணம் கட்டுவதற்காக ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். சிறுசேமிப்பாக எடுத்துச் சென்ற பணம், ரூபாய் 200. ஆனால், அதை என் கணக்கில் கட்டுவதற்கான வழிமுறை எனக்குத் தெரியவில்லை. மேலும் வங்கிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பெரிய தொகையாக டெபாஸிட் செய்து கொண்டிருந்ததால், என்னுடைய தொகையை நினைத்து கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அப்போது அருகில் இருந்த நபர் ஒருவர், என்னைக் கவனித்து, விசாரித்து, படிவத்தை, எப்படி நிரப்ப வேண்டும் என்று கனிவுடன் கற்றுக்கொடுத்தார். மேலும், ''சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறாய். தொடர்ந்து கடைபிடி!’ என்று வாழ்த்தவும் செய்தவர், தன்னுடைய பெரிய தொகையை டெபாஸிட் செய்துவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

எனக்கு மனதில் பெரும் மகிழ்ச்சி. அங்கிருந்த மற்றவர்களைப் போல் என்னை அலட்சியமாகப் பார்க்காமல், கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்திய அவரின் குணம் எனக்குள் பெரிய மரியாதையை ஏற்படுத்த, அன்றிலிருந்து நானும் என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்.

மகிழ்வித்து மகிழ்வோம்!

- மோ.திவ்யா, வேலூர்

உழைப்போரை ஊக்குவியுங்கள்!

சாமி தரிசனம் முடித்து கோயிலில் இருந்து வெளியே வந்தேன். வாசலில் பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களில் தள்ளாத வயதிலிருந்த ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே திடகாத்திரமானவர்கள் என்பதாகவே தோன்றியது. அவர்கள் அனைவரின் தட்டுகளிலுமே காசுகள் விழுந்தபடி இருந்தன. சற்றுத் தொலைவில் எடை பார்க்கும் மெஷின் ஒன்றுடன் அமர்ந்திருந்தார் ஓர் ஏழைப் பெண். அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இதைப் பார்த்ததும்... 'உழைத்துப் பிழைக்க சோம்பல்பட்டு, பிச்சை எடுப்பவர்களுக்கு, புண்ணியம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தர்மம் செய்கிறார்கள். ஆனால், உழைத்துதான் வாழவேண்டும் என்கிற முனைப்போடு தொழில் செய்து பிழைக்க நினைக்கும் அந்தப் பெண்ணை ஊக்குவிக்கத் தவறுகிறார்களே' என்று வேதனையாக இருந்தது. தேவையோ, இல்லையோ, ஒரு ரூபாய் காசு கொடுத்து எடை பார்த்தால், அவருக்கு ஒரு சொற்ப வருமானம் கிடைக்கும் என்று சொல்லி, உடன் வந்த அனைவரையும் எடை பார்க்க வைத்து, காசைக் கொடுத்துவிட்டு திரும்பியபோது, மனதில் திருப்தி அலைகள்!

ஊதுபத்தி விற்கும் தாத்தா, சுட்டிகளுக்கான ஸ்டிக்கர்கள் விற்கும் பெண்... இப்படிப்பட்ட உழைக்கும் வர்க்கத்துக்கு மரியாதை செய்யுங்களேன்!

- உஷா, மதுரை