Published:Updated:

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே...

பிரியம் வளர்க்கலாம்... வாருங்கள்!ப்ரீத்தி, மோ.அருண் ரூப பிரசாந்த்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

##~##
''ம
ணி... சொன்னாக் கேளு. சேட்டை செய்யாம நல்ல பிள்ளையா இருக்கணும். இல்லேன்னா, அம்மாவுக்குக்கெட்ட  கோபம் வரும்!'' - தன் வளர்ப்பு நாயை சொந்தப்பிள்ளை யைப்போல் உரிமையாகக் கண்டிக்கும்அம்மாக்களைத் தெரியுமா உங்களுக்கு? ''ஹ்ம்ம்ம்...'' என்ற சின்ன தொரு முனகலுடன் உடலைக் குழைத்து பணிந்து அடங்கும் எத்தனை மணிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'உன் முகத்தில், ஒரு நாய் அன்பாக நாக்கினால் ஏற்படுத் தும் ஈரத்துக்கு நிகராக இந்த உலகத்தில் எந்தவொரு பரிவையும் நீ ஒப்பிட முடியாது!’ என்ற பென் வில்லியம்ஸின் கூற்றை உண்மை என்கிறார், கால் நடை மருத்துவர் அருண்.

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே...

செல்லப் பிராணிகள் வளர்ப்பது ஃபேஷன் என்ற கட்டத் தைத் தாண்டி இப்போது அவசியமான ஆறுதல் என்ற நிலை நோக்கி நகர்ந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது பிரபலமான பழக்கம். சமீப சர்வே ஒன்று, செல்லப் பிராணிகளைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களாகவே அமெரிக்கர்கள் கருதுவதாக உணர்த்தி இருக்கிறது. கிட்டத்தட்ட அதேமாதிரி யான ஒரு மனநிலை நம் ஊரிலும் பரவி வருவது ஆரோக்கியமான, சந்தோஷமான விஷயம். ஏனெனில், பிராணிகளிடத்தில் அன்பைக் கொடுத்தால், அவை, அந்த அன்பைப் பல மடங்காகத் திருப்பிக் கொடுக்கும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், நாய் மற்றும் பூனை வளர்த்தால், அது அவர்களின் உடல் நலத்துக்கும் மன வளத்துக்கும் மருந்து.

வீட்டில் நாய் அல்லது பூனை இருந்தால், நிச்சயமாக அதைக் கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்குவோம். நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு போகும்போது, நாமும் வாக்கிங் செல்ல நேரிடும்தானே. இது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கும். அவற்றைக் கொஞ்சும்போது மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு குறைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். இதனால், இப்போது கேன்சர் மருத்துவமனை மற்றும் முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களை விலங்குகளோடு பழகவைக்கிறார்கள். செல்லப் பிராணிகள் இருக்கும் வீட்டில் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் வராது என்கிறது மருத்துவ அறிவியல். காரணம், பிராணி களின் உடம்பில் ஆன்ட்டி-பெட்ரோஜெனிக் பாக்டீரியா அதிகமாக இருக்கும். பிராணிகளோடு அதிக நேரம் செல விடும்போது, பெட்ரோஜெனிக் பாக்டீரியாவினால் எற்படும் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற நோய்களை எதிர்க்கும் சக்தி நமக்குக் கிடைக்கிறது!'' என்கிறார் அருண்.

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே...

பிரபலங்கள் வளர்த்த செல்லப் பிராணிகளின் பட்டியல் ரொம்பவே நீளம். எம்.ஜி.ஆர் தனது ராமாவரம் தோட்டத்தில் ராஜா என்ற சிங்கத்தை வளர்த்தார். இன்றும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், பாடம் செய்யப்பட்ட ராஜாவின் உடல் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே...

தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப்பற்றி இங்கே பேசுகிறார்கள் பிரபலங்கள். ''ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் போயிருந்தேன். அங்கே கவனிக்க ஆள் இல்லாம ஒரு நாய்க் குட்டி திரிஞ்சுட்டு இருந்தது. அதை வீட்டுக்குத் தூக்கிட்டு வந்து கேட்பரீஸ்னு பேர் வெச்சேன். அதுகூட விளையாட பீகில் இனத்தைச் சேர்ந்த ஜோரான்னு ஒரு குட்டியை வாங்கிவிட்டேன். வெளியூர் போய்ட் டுத் திரும்பும்போது, என் கார் தெரு முனைக்கு வந்ததுமே ரெண்டும் ஓடி வந்து வாசல்ல குதிக்கும். காரைவிட்டு இறங்கியதும் ரெண்டு பேரையும் கொஞ்சிட்டுத்தான் உள்ளே நுழைவேன். எங்கே போய்ட்டு வந்தாலும், ரெண்டு பேருக்கும் ஏதாவது வாங்கிட்டு வரணும். இல்லைன்னா, பாவமா முகத்தையே பார்ப்பாங்க. ஒரு தடவை நான் மாசக்கணக்கில் வெளியூர் ஷூட்டிங் போயிட்டேன். என்னைப் பார்க்காம கேட்பரிஸ் ரொம்பவே ஏங்கிப்போயிட்டான். சரியா சாப்பிடாம இருந் திருக்கான். நான் வீட்டுக்கு வந்ததும் ஓடி வந்து என் மேல் பாய்ஞ்சு கீழே தள்ளிவிட்டுட்டான். அதனால, வெளியூர் போய்ட்டு வந்தா, இப்ப எல்லாம் உஷாராத்தான் வீட்டுக்குள்ள காலடி எடுத்துவைக்குறேன்!'' என்று சிரிக்கிறார் த்ரிஷா.

ழுத்தாளர் சாரு நிவேதிதா வீட்டில் ஜாரோ, பப்பு என்று இரண்டு நாய்களை வளர்க்கிறார். ''என் வீட்டில் நுழையும் யாரும் அதிர்ச்சி ஆவாங்க. காரணம், இந்தக் குட்டிப் பசங்களோட உயரமும் எடையும்தான். ஜாரோ க்ரேப்டன் இனத்தைச் சேர்ந்தவன். ஐந்தரை அடி உயரத்தில் 50 கிலோ எடையில் பிரமாண்டமா இருக்கும் ரெண்டு வயசுக் குழந்தை. பப்பு லேப்ரடார் வகை. பார்க்க மிரட்டலாக இருந்தாலும் பலாப் பழத்தைப்போல சாஃப்டா பழகுவான். வீட்டுக்குத் திருடன் வந்தா, அவன் கையைப் பிடித்துக் கூட்டி வந்து, பீரோ இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு அப்பாவி. காலையில் நான் தியானம் பண்ணும்போது, என் மடியில் உக்காந்துக்கு வான். ஜாரோ ரொம்ப சுகவாசி. அவன் படுக்க மெத்தை, தலையணை கொடுக்கணும். இல்லைன்னா, என் பெட்ல இடம் பிடிச்சுக்கு வான். இப்படி ரெண்டு பேரும் என்குழந்தை களைப்போல இருப்பதால், எனக்கு ஒவ்வொரு நாளும் எப்போ வீட்டுக்கு வருவோம் என்று இருக்கும்!'' என்று நெகிழ் கிறார் சாரு.

''ஒரு வருடத்துக்கு முன்பு இந்த ரிங்கியை வாங்கி வந்தோம். வரும்போது இரண்டு மாதக் குழந்தை. போன ஜென்மத்தில் மரம் கொத்தியாப் பிறந்திருப்பாபோல. எப்பவும் எதையாவது கொத்திக்கிட்டே இருப்பா!'' என்று விரலில் நடை பழகும் ரிங்கியைப் பார்த்துக்கொண்டே பேசுகிறார் அனிதா குப்புசாமி.

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே...

''என் வீட்டுக்காரரைத் தவிர வேறு யார் கூடவும் ஒட்டவே மாட்டா ரிங்கி. அதனாலயே, இவளுக்கு 'சக்களத்தி’னு பெயர் வெச்சிருக்கேன். நாங்க 'ரிங்கி, ரிங்கி’னு கூப்பாடு போட்டாலும் கண்டுக்க மாட்டா. ஆனா, இவர் சத்தம் கேட்டதும் எங்க இருந்தாலும் பறந்து வந்து, அவர் தோள்ல உக்கார்ந்துக்கிட்டு கொஞ்சிக் கொஞ்சி காதலிப்பா. ஒரு தடவை, இவர் திட்டிட்டார்னு கோவிச்சுக்கிட்டு எங்கேயோ பறந்துட்டா. நாங்க ஊரெல்லாம் இவ பேரைச் சொல்லித் தேடுறோம். கண்டுபிடிக்கவே முடியலை. என் வீட்டுக்காரருக்கும் இவளுக்கும் ஒரு கோட் வேர்டு இருக்கு. அதைவெச்சு இவர் கூப்பிடவும் ஒரு கட்டிலுக்கு அடியில் இருந்து ஓடி வந்தா. சமயத்தில் எனக்கு இவங்க இரண்டு பேரையும் பார்க்க ரொம்பவே பொறாமையா இருக்கும்!'' என்பது அனிதாவின் அன்பு ஆதங்கம்.

''ஒரு வருஷத்துக்கு முன் ஒரு சின்ன விபத்துல என் கையில் ஃப்ராக்சர். சோகமே உருவா இருந்த என்னைச் சந்தோஷப்படுத்த என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து இந்த ஹியூகோவைப் பரிசா கொடுத்தாங்க. வோடஃபோன் விளம்பரம் பார்க்கும்போதெல்லாம் 'ச்சோ ஸ்வீட் நாய்’னு தோணும். ஆனா, அதுவே எனக்குப் பரிசா கிடைச்சப்ப ஆச்சர்ய அதிர்ச்சி!'' என்று நெகிழ்கிற ஷில்பா,

''நாள் முழுக்க வேலை பார்த்துட்டு டயர்டா வர்றப்போ, வீட்டுக் கதவைத் திறந்ததும் தாவி வந்து காலைக் கட்டிக்கொள்ளும் அந்தப் பாசம்... சான்ஸே இல்லை! வாக்கிங், ஷாப்பிங்னு எங்கே போனாலும் எனக்கு கம்பெனி ஹியூகோதான்!'' என்று சொல்லி தனது 'நாய்’ஃப்ரெண்ட்டை பெருமை பொங்கப் பார்க்கிறார்!

பின்னணிப் பாடகி சுசித்ரா வளர்க்கும் கபாலீஸ்வரி என்கிற நாய் கேன்சரால் பாதிக்கப் பட்ட குழந்தைகளோடு மாதம் ஒரு முறை விளையாடி உற்சாகப்படுத்தும் சேவகன்!  ''ஆமா, ஒரு வருஷமா கபாலீஸ்வரி கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோட விளையாடிட்டு இருக்கு. இந்த தெரபிக்கு 'டாக்டர் டாக்’னு பேர். பிராணிகளுக்கு வித்தியாசம், கல்மிஷம் எதுவும் தெரியாது. அன்பா இருந்தா, பதிலுக்கு அன்பைக் கொடுக்கும் அற்புதமான ஜீவன்கள். அப்பப்போ ஹாஸ்பிட்டல் போய் குழந்தைகளோட விளையாட விடுவோம். இவளைப் பார்த்ததுமே 'ஹே... கபாலி வந்துட்டா’ன்னு குழந்தைங்க கவலையை மறந்து குதிக்க ஆரம்பிச்சிருவாங்க. கபாலி செய்யும் சேட்டையில் அவங்களுக்குக் கவலை எல்லாம் மறந்துபோகும்!'' என்கிறார் சுசித்ரா.

பிராணிகள் வளர்ப்பதினால் ஏற்படும் மனநல மாற்றங்களைப் பற்றிக் கூறுகிறார் மனநல மருத்துவர் ராஜமோகன்...

''வீட்டில் மனிதர்களைவிட செல்லப் பிராணிகளின் வரவுகள் ஒவ்வொருவரின் மனக்குறைகளையும் போக்கும். என்னிடம் மனஅழுத்தத்தோடு வரும் பெரும்பாலானோருக்கு நான் பரிந்துரைக்கும் மருந்து செல்லப் பிராணிகள் வளர்ப்புதான். குழந்தை இல்லாதவர்கள், வயதானவர்களுக்கு செடி வளர்த்தல், நாய் பூனை வளர்ப்பதில் கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது. அதிகமாகக் கோபப்படும் குணம் கொண்டவன்கூட, ஒரு செல்லப் பிராணி இருந்தால், அனைவரிடத்திலும் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறான். நாய், பூனை, கிளி என வளர்க்க ஆரம்பிக்கும்போது, அவற்றின் சுக துக்கம் பசி போன்றவற்றைப் புரிந்துகொள்வோம். அந்தப் பழக்கமே நம்மைச் சார்ந்தவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளவைக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு முன்னாள் போலீஸ்காரர். பார்ப்பதற்கு 78 வயதுடையவர் என்று யாரும் சொல்ல முடியாத அளவு  கம்பீரமாக இருப்பார். அவருடன் எப்போதும் ஒரு நாய் இருக்கும். ஒரு குழந்தைபோல எங்கு சென்றாலும் அந்த நாயையும் அழைத்துச் செல்வார். ஒருநாள் அந்த நாய் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனது. அதுவரை கம்பீரமாக வலம் வந்தவர், அந்தக் கவலையிலேயே மெலிந்து, இறந்துபோனார். அந்த அளவுக்கு ஐந்தறிவு ஜீவனுக்கு மனிதர்களிடையே பிணைப்பு இருக்கிறது. வாழ்க்கையின் ருசி உணர, இன்னும் ஆழ்ந்து ரசிக்க, அனைவரிடமும் அன்பு மட்டுமே செலுத்த, சின்ன மீனாவது வளர்த்துப் பாருங்கள். ஓர் உயிரின் மதிப்பு புரியும். உலகத்தின் மீது இன்னும் பிரியம் கூடும்!''

செல்லப் பிராணிகளின் உலகம் உங்களையே ஒரு செல்லமாகத் தாலாட்டும். அந்தப் பாசத்தை... நேசத்தை நீங்கள் உங்கள் உலகை நாடி வருபவர்கள் மீது பிரதிபலிக்கத் தயாரா?  

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே...