Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

Published:Updated:
##~##

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

150

தேங்காய் நீரை வீணாக்காதீர்கள்!

காய்கறி வாங்க கடைக்குச் சென்றிருந்தபோது, அங்கு பலரும் முழு தேங்காய்க்குப் பதில், பாதி மூடியாக கேட்டு வாங்கிக் கொண்டுஇருந்தார்கள். அதற்காக தேங்காய்களை உடைத்த கடைக்காரர், அதன் தண்ணீரை கீழே கொட்டியபடி இருந்தார். அதைப் பார்த்த எனக்கு மனசு தாங்கவே இல்லை. தீமை தரும் குளிர்பானங்களை காசு கொடுத்தும் வாங்கிக் குடிக்கும் மக்கள், மருத்துவ குணங்கள் பல கொண்ட, 100% தூய்மையான தேங்காய் நீரை இப்படி சலனமே

அனுபவங்கள் பேசுகின்றன!

இல்லாமல் வீணாக்குவதை என்னவென்று நோக? தேங்காய் வாங்கும் பெண்களாவது அதை பருகக் கேட்டு குடிக்கலாம். அல்லது கடைக்காரராவது ஒரு பாத்திரத்தில் சேமித்து, தாகத்தில் வருபவர்களுக்கு இலவசமாகத் தரலாமே..?

தேங்காய் வாங்கப் போகும் தோழிகளும், கடைக்காரர்களும் யோசிப்பார்களா..?

- சாவித்திரி விஸ்வனாதன், போரூர்

ஆறாத புண்... ஆபத்து!

தூரத்து உறவினர் ஒருவருக்கு வாயில் புண் ஏற்பட, மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் உறவுக்காரப் பையனிடம் தொலைபேசியில் பேசி, அவன் பரிந்துரைத்த ஜெல்லை வாங்கி உபயோகித்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாகி யும் புண் ஆறியபாடில்லை. இந் நிலையில் பல்லில் ஏற்பட்ட ஏதோ தொந்தரவுக்காக பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது, வாயில் இருந்த புண்ணைக் கவனித்த டாக்டர், புற்றுநோய் போல் இருப்பதாகக் கூறி, அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பினார். ஆய்வுக்கூட முடிவில் உறுதியானது... புற்றுநோய்.

அனுபவங்கள் பேசுகின்றன!

உடனே சிகிச்சைகளை ஆரம்பித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு வருடமாக புண்ணை வைத்துக் கொண்டு உயிரை பலி கொடுத்த அவர், பலருக்கும் பாடமாகிவிட்டார்.

நினைவிருக்கட்டும்... சுயமருத்துவமும் தவறு, ஆறாத புண்ணும் ஆபத்து!

- ஆனந்தி அய்யப்பராஜன், போடிநாயக்கனூர்

எஸ்.எம்.எஸ். டிக்கெட்... உஷார்!

தற்போது ரயில் பயணங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியையே (எஸ்.எம்.எஸ்) பயணச்சீட்டாக பயன்படுத்தும் வசதி வந்துள்ளது. நண்பர் ஒருவர் இப்படி தனக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி, அன்று ரயிலில்

அனுபவங்கள் பேசுகின்றன!

ஏறினார். ஆனால், அதன்பிறகுதான் உணர்ந்திருக்கிறார்... அந்த குறுஞ்செய்தியை தவறுதலாக அழித்துவிட்டதை. நல்லவேளையாக வீட்டில் இருந்த மகளுக்கு போன் செய்து, ரயில் முன்பதிவு இணையதள உதவியோடு மீண்டும் குறுஞ்செய்தியை அனுப்ப வைத்து, பயணத்தை சிக்கலின்றி முடித்திருக்கிறார்.

ரயில்தான் என்றில்லை... வங்கிக் கணக்கு முதல் வண்டி டியூ வரை அனைத்து விவரங்களையும் அலைபேசி குறுஞ்செய்தி வழியாகத்தான் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தற்போது அனுப்புகின்றன. எனவே, அவற்றை அழிப்பதற்கு முன் நிதானம் அவசியம்!

- லஷ்மி பாலசுப்ரமணியம், சாலிகிராமம்

பெண்களைப் பெற்றால் பரிதாபமா?

அனுபவங்கள் பேசுகின்றன!

என்னுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்பது பேர். அதில் எனக்கும் என்னுடைய மற்றொரு சகோதரிக்கும் மட்டும் ஒவ்வொரு ஆண் குழந்தை உண்டு. மற்ற அனைவருக்குமே பெண் குழந்தைகள். அனைவரும் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கின்றனர். என் சகோதரிகளும், பெண் குழந்தைகள் என்கிற வீண் வருத்தம் எல்லாம் இன்றி, பிள்ளைகளை நல்லபடியாக ஆளாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஏதாவது விசேஷ தினங்களில் உறவினர்கள் கூடும்போது, ''இப்படியா எல்லாருக்கும் பொம்பளப் புள்ளைகளா பொறக்கணும்..? வாரிசோ, தலைக்கட்டோ இல்லாம எப்படி குலதெய்வத்தை கும்பிடறது?'' என்றெல்லாம் எங்களுக்காக வருத்தப்படுவதைப் பார்க்கும்போது கோபமாக வருகிறது எங்களுக்கு.

அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைகள் புரிந்துகொண்டிருக்கும் இக்காலத்தில், பெண்ணைப் பெற்றவர்களிடம் இப்படி அபத்தமாக கேள்வி கேட்பவர்களே... திருந்துங்கள்!

- எஸ்.சண்முகசுந்தரி, திருவில்லிபுத்தூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

சீருடை தந்த பாடம்!

என் உறவினர், தன் மகளுக்கு, இந்தக் கல்வி ஆண்டுக்கான சீருடைகளுக்காக 2,500 ரூபாய்க்கு துணி எடுத்து, நான்கு செட் சுடிதார் தைக்கச் சொல்லி டெய்லரிடம் கொடுத்திருக்கிறார். ஒரு வாரம் கழித்து வாங்கச் சென்றவருக்கு ஒரே அதிர்ச்சி. டாப், நீலநிறத்திலும் பேன்ட் வெள்ளை நிறத்திலும் தைப்பதற்கு பதிலாக 4 செட் சுடிதார்களையுமே மாற்றி தைத்துவிட்டார். ''மன்னிக்கவும். ஏகப்பட்ட பள்ளியின் சீருடைகள் தைக்கக் குவிந்திருக்கும் நேரம் இது. அந்த அவசரத்தில், குழப்பத்தில் தவறு நேர்ந்துவிட்டது'' என்றிருக்கிறார் டெய்லர். புலம்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

'அடுத்த முறை சீருடை தைக்கக் கொடுக்கும்போது, மேல் ஆடை, கீழ் ஆடை நிறங்களை ஒரு பேப்பரில் விவரமாக எழுதிக் கொடுப்பதுடன், மாதிரிக்கு ஒன்றை மட்டும் தைக்கச் சொல்லி சரிபார்த்து, பிறகு மற்றவற்றைத் தைக்கக் கொடுக்க வேண்டும்' என்கிற பாடம் கிடைத்தது 2,500 ரூபாய் கட்டணத்தில்!

- திருமூர்த்தி, சிவகாசி