Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

150 

இனிப்பான ஐடியா!

ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். பந்தியில் பரிமாறிய சப்ளையர்களில் ஒருவர் மட்டும் காகிதப் பைகளை கத்தையாக கையில் கொண்டு வந் தார். சாப்பிடுபவர்களிடம், ''பேப்பர் பேக் வேணுமா..?'' எனக் கேட்டு, விரும்பியவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே சென்றார். இது எதற்கு என முதலில் புரியவில்லை. ஸ்வீட் பிடிக்காதவர்கள் மற்றும் அதை சாப்பிடக் கூடாதவர்கள், தங்கள் இலையில் வைக்கப் பட்டிருந்த இனிப்புகளை அந்த பேப்பர் பேக்கில்

அனுபவங்கள் பேசுகின்றன!

போட்டு, கையோடு எடுத்துச் சென்றதை பார்த்தபோது தான், விஷயம் எனக்கும் புரிந்தது. 'இது நல்ல ஐடியா'தானே! இதனால் உணவுப் பொருள் வீணா வதை ஓரளவு தவிர்க்கலாம்தானே! தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்களில் இந்த ஐடியாவைச் சொல்லி பின்பற்றச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டேன்.

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்

 பாலிஸியை கவனித்து எடுக்கலாமே..!

என் தோழி சமீபத்தில் எல்.ஐ.சி. பாலிஸி எடுத் தாள். விவரங்களைத் தெளிவாகக் கேட்டுக்கொள்ளாமல், ஏஜென்ட் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, அவசரமாக ஊருக்கும் சென்று விட்டாள். ஒரு மாதம் கடந்து வீடு திரும்பியபோது, அவளுக்கு ஷாக். இவள் பாலிஸி எடுத்த ஏஜென்ட், தன் 'டெட்லைன்’ கணக்கை முடிக்க வேண்டிய நெருக்கடியில், தோழி பற்றிய விவரங்களை ஏனோ தானோவென்று விண்ணப்பத்தில் நிரப்பிவிட்டார். விளைவு... இன்ஷூரன்ஸ் பத்திரத்தில் ஆண்டு, தொகை, வீட்டு

அனுபவங்கள் பேசுகின்றன!

விலாசம் என்று பல குழப்பங்கள். பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் விவரங்களை சரி செய்வது அத்தனை எளிதல்ல என்பதால், பரிதவித்து நிற்கிறாள் தோழி.

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள், பாலிஸிதாரர்கள்... இரு தரப்பும் தங்களின் அவசரங்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, நிதானமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, சரிபார்த்து, சமர்ப்பிக்கவில்லை என்றால், தோழியின் கதிதான்... ஜாக்கிரதை!

- ஆர்.சீதா, சீர்காழி

 ஆடை ரிகர்சல் அவசியம்!

வெளியூரில் நிகழ்ந்த என் சகோதரியின் மகன் திருமணத்துக்கு சென்றபோது, பட்டுப்புடவை மற்றும் பிளவுஸ் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருந்தேன். திருமண நாளன்று காலையில்

அனுபவங்கள் பேசுகின்றன!

அவற்றை நான் உடுத்தியபோதுதான் தெரிந்தது... அந்த பிளவுஸ் எனக்கு மிகவும் லூஸாக இருந்தது. அந்த பிளவுஸ் நான் கொஞ்சம் குண்டாக இருந்தபோது தைத்தது. ஆண்டுக்கணக்கில் அணியாமல் இருந்த நான், அதை போட்டுப் பார்க்காமல் எடுத்துச் சென்றுவிட்டேன். இறுக்கமாக இருந்தால் இரண்டொரு தையல் பிரித்து உடுத்தலாம். லூஸாக இருந்ததை என்ன செய்வது..? வேறு பட்டுப்புடவை கைவசம் இல்லாத நிலையில், வேறு வழியின்றி அந்த பிளவுஸையே அணிந்த நான், போர்த்திக்கொண்டே திரிந்தது தனிக் கதை!

எனவே தோழிகளே, விசேஷங்களுக்கு உடுத்த நினைக்கும் புடவையின் பிளவுஸை ஒருமுறை போட்டுப் பார்த்துவிட்டு எடுத்து வையுங்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன!

- பிரபா டாக்கர், ஹைதராபாத்

செல்லாக் காசு கடவுளுக்கா..?

குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தோம். கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்த வரிசையில் நின்றிருந்தபோது, எங்களுக்கு முன்னால் நின்றவர், 10 பைசா, 25 பைசா என்று புழக்கத்தில் இல்லாத நாணயங்களை யும், கிழிந்த ரூபாய் நோட்டு களையும் உண்டியலில் போட்டார். அதைப் பார்த்த நான், ''பயன்படுத்த முடியாத சில்லறை, நோட்டுகளை உண்டியலில் போடலாமா..?'' என்றேன் அவரிடம் வேதனையுடன். உடனே அவர், ''தேவஸ் தானத்தில் இருந்து இதை எல்லாம் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்வார்கள்'' என்றார் அலட் சியமாக.

தனக்கு உபயோகப்படாத பொருட்களை கழிப்பதற்கு காணிக்கை என்று பெயரா..?

- பா.பிரதீபா, திருக்கடையூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism