Published:Updated:

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

Published:Updated:

16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேரியர் கைடன்ஸ்!
ம.கா.செந்தில்குமார்
கேரியர் கைடன்ஸ்!

யூகோ வங்கியில் புரொபேஷனரி ஆபீஸர் பணி!

பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான யூகோ வங்கியில் காலியாக உள்ள 1,050 புரொபேஷனரி அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வு 30.1.2011 அன்று நடைபெறும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 30.11.2010. மேலும் விவரங்களுக்கு www.ucobank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

என்.எல்.சி-யில் பல்வேறு பணிகள்!

பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தில் துணை பொறியாளர், உதவிப் பொறியாளர், உதவி நிர்வாகப் பொறி யாளர் உட்பட, பல்வேறு பிரிவுகளில் 138 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 10.11.2010. கல்வித் தகுதி, பணி அனுபவம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங் களுக்கு www.nicindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 'பெல்' நிறுவனத்தில் வேலை!

வேலூர் ராணிப்பேட்டையில் இயங்கி வரும் 'பெல்' (பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்) நிறுவனத்தில், காலியாக உள்ள ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட் உட்பட 173 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.11.2010. மேலும் விவரங்களுக்கு www.artrect.bhelrpt.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

ஓரியண்ட்டல் வங்கியில் கிளார்க் பணி!

ரியண்ட்டல் வணிக வங்கியில் 1,105 கிளார்க் காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிப் பொறியில் பணிபுரியும் திறன் பெற்றிருப்பது அவசியம். எழுத்துத் தேர்வு 9.1.2011 அன்று நடைபெறும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 24.11.2010. மேலும் விவரங்களுக்கு www.obcindia.co என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

ராணுவப் பணி!

ராணுவத்தின் முப்படைகளில் பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெறும். ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற பதினா றரை வயதில் இருந்து 19 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் நிலையங்களில் கிடைக்கும் விண்ணப்பம் மூலமும் விண்ணப்பிக்கலாம். அல்லது www.upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.11.2010.

இந்திய கடற் படைப் பணிகள்!

ந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் பயிற்சியுடன் கூடிய பைலட்டாகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ன. 19 வயதில் இருந்து 23 வயதுக்குள் உள்ள திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.nausena_bharati.nic என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism