Published:Updated:

நான் சரத் கமல் ஆனது எப்படி?

நான் சரத் கமல் ஆனது எப்படி?


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நான் சரத் கமல் ஆனது எப்படி?
நான் சரத் கமல் ஆனது எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நான் சரத் கமல் ஆனது எப்படி?
இர.ப்ரீத்தி
நான் சரத் கமல் ஆனது எப்படி?

"வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான

ஒரே நியாயமான வழி!" - இரண்டே வரிகளில் சொல்லிச் சிரிக்கிறார் சரத் கமல். 2010 காமன் வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற பச்சைத் தமிழன். இந்தியாவின் தேசிய நாயகன்!

"விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து டேபிள் டென்னிஸ் பார்த்து வளர்ந்த பையன் நான். அப்பா ஸ்ரீனிவாச ராவும் சித்தப்பா முரளீதர ராவும் டேபிள் டென்னிஸ் கோச்சா இருந்தாங்க. அதனால், இயல்பாவே எனக்கும் டேபிள் டென்னிஸ் மேல் ஆர்வம். என்

நான் சரத் கமல் ஆனது எப்படி?

வயசுப் பசங்க கிரிக்கெட் ஆடும்போது, நான் மட்டும் எம்பி நின்னு டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். இதைப் பார்த்துட்டு அப்பாவும் சித்தப்பாவும் எனக்கு டேபிள் டென்னிஸை முறையாக் கத்துக்கொடுத்தாங்க. என்னோட 11-வது வயதிலேயே 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் சாம்பியன் ஆனேன். அதுதான் எனக்குப் பெரிய திருப்புமுனை. அந்த வெற்றி... வெறியா மாறுச்சு. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பயிற்சி எடுத்தேன். நிறையத் தோல்விகளைச் சந்திச்சேன். ஆனால், என் தன்னம்பிக்கையை ஒரு நாளும் இழக்கலை. இந்த உயரம் அவ்வளவு சுலபமா எனக்குக் கிடைக்கலை. காலேஜ் கலாட்டாக்கள், அம்மாவின் சமையல், மனைவியோட அன்பான நேரங்கள்னு பல விஷயங்களை இழந்துதான் இந்த உயரத்தை அடைய முடிந்தது.

இதுவரை நான் விளையாடியதில் என்னைத் திணறடித்தது இந்தியாவில் இப்போது முடிந்த காமன் வெல்த் போட்டிகள்தான். இந்தியாவின் நம்பர் ஒன் ப்ளேயர் என்பதால், என் மேல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனாலேயே எனக்குப் பயமும் பதற்றமும் வந்துவிட்டது. விளையாடத் துவங்கும் முன், எதைப்பற்றியும் யோசிக்காமல் போட்டிக்குத் தயாரானேன். ஒரு சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே யோசித்தேன். அப்படி அமைதியான மனநிலையில் விளையாடியதால், ஒரு தங்கப் பதக்கமும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வாங்க முடிந்தது. இக்கட்டான பல நேரங்களில், 'இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை' என்று நம்பிக்கை கொடுப்பது அப்துல் கலாமின் சுயசரிதைதான். என்னுடைய வாழ்வின் தலை சிறந்த ரோல் மாடல் அவர்தான்.

நான் சரத் கமல் ஆனது எப்படி?

இதுவரை 2004 மற்றும் 2008-ல் நடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொண்டேன். ஆனால், அங்கு சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. ஆனால், அந்தத் தோல்விகள் நல்ல பாடமா, புது அனுபவமா அமைஞ்சது. 2012-ல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்கை... என் தவறுகளைத் திருத்திக்கொள்ளக் கிடைச்ச வாய்ப்பா நான் பார்க்கிறேன். ஒலிம்பிக் தங்கம்தான் என் பல வருடக் கனவு. எனக்காக இல்லாவிட்டாலும், அதை என் மனைவிக்காக வாங்க வேண்டும். அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, 'நான் தனியே சமாளித்துக்கொள்கிறேன். நீங்கள் ஐரோப்பா சென்று பயிற்சி எடுங்கள்' என்று அனுப்பிவைத்தார். இந்த தியாகத்துக்காகவாவது தங்கம் வெல்ல வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 'கடின உழைப்புக்குத் தகுந்த கூலி கிடைத்தே தீரும்!"

நான் சரத் கமல் ஆனது எப்படி?
நான் சரத் கமல் ஆனது எப்படி?