Published:Updated:

பேச்சு நம் மூச்சு!

பேச்சு நம் மூச்சு!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
பேச்சு நம் மூச்சு!
பேச்சு நம் மூச்சு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பேச்சு நம் மூச்சு!
கி.கார்த்திகேயன்
பேச்சு நம் மூச்சு!
பேச்சு நம் மூச்சு!

சாதுப் பசுக்களும், பேச்சுத் தீவிரவாதிகளும் சரிவிகித சமானத்தில் உலவும் சமூகம்

நம்முடையது. அவசியத் தருணங்களில் அதீத மௌனம் காப்பதும், அநாவசிய சமயங்களில் லொடலொடப்பதும் நம் பழக்கம். ஓவியம், நடனம், இசைபோல... பேச்சும் ஒரு கலை. பிறர் கவனித்து ரசிக்கும் வகையில் நமது பேச்சு அமைந்தால், அது வரம். அந்த வரத்தைக் கைக்கொள்ள உதவுகிறது How To Talk So People Listen புத்தகம். ஒரு வார்த்தைப் பேச்சில் துவங்கி, பொதுக் கூட்டப் பேருரை வரை பலவகைப்பட்ட உரையாடல்களுக்கான டிப்ஸ்களை விளக்கமாக மிக விரிவாக அலசி ஆராய்கிறார் ஆசிரியர் சோனியா ஹாம்லின். புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்...

கேள்விகளை எதிர்கொள்வது எப்படி?

பேச்சு நம் மூச்சு!

ருநாள் முழுக்க... வேண்டாம் வேண்டாம்... ஒரு மணி நேரம் கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருக்க முடியுமா உங்களால்? '23 சி எப்போது வரும்?', ' 'எந்திரன்' நைட் ஷோ போலாமா?' எனத் தொடங்கி 'பித்தகோரஸ் தேற்றம் என்ன?', 'இந்த புராஜெக்ட் எப்போ முடிப்பீங்க?', 'கலிஃபோர்னியாவில் இருந்து டேவிட் கான்ஃபரன்ஸ்ல வந்தாரா?' போன்றவை வரை கேள்விகள் மூலமான தகவல் பரிமாற்றம்தான் நம்மிடையே அதிகம். பெரும்பாலும் சீனியர்கள், உயர் அதிகாரிகள் போன்ற அதிகாரம் நிரம்பியவர்களின் கேள்விகளைத்தான் நாம் அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கேள்விகளுக்கு ஏற்ற மரியாதையுடன் அவற்றை எதிர்கொள்வதே அவற்றுக்குப் பாதிப் பதில் அளிப்பதற்குச் சமம். அதை எப்படிச் சாதிப்பது?

எந்நேரமும் நம் மனசுக்குள் ஏதேனும் ஒரு நினைவு ஓடிக்கொண்டே இருக்கும். கேள்விகளை எதிர்கொள்ளும் சமயம் மட்டுமேனும், அந்த எண்ண அலைகளுக்குக் கொஞ்சம் அணை கட்டி, முழுக் கவனத்தையும் எதிராளியின் வார்த்தையில் பதியுங்கள்!

பாதியிலேயே இடைமறித்து பதில் அளிக்கத் தொடங்காமல், எந்தக் கேள்வியையும் முழுமையாக எதிர்கொள்ளுங்கள். அந்தக் கேள்விக்கு உங்களைப் பதில் அளிக்கவைப்பதன் மூலம் எதிராளி என்ன சாதிக்க நினைக்கிறார் என்பதையும் ஒரு கணம் யோசித்துவிட்டு, பதில் அளிக்கத் தொடங்குங்கள்!

கேள்வி துவங்கியதுமே அதற்கான பதிலாகப் பல விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும். ஆனால், அந்தக் கேள்விக்கான பதில் என்னவோ, அதை மட்டும் கூறுங்கள். பிற சங்கதிகளை மனதுக்குள்ளேயே எடிட் செய்து டெலிட் செய்துவிடுங்கள்!

பொதுவாக, கேள்வி கேட்பவர் உங்களிடம் இருந்து உடனடி பதிலைத்தான் எதிர்பார்ப்பார். ஆனால், பல சமயங்களில் அப்படிப் பதில் அளிக்க முடியாமல், உங்களுக்குச் சின்ன அவகாசம் தேவைப்படலாம். அப்படியான சமயங்களில், 'இப்படி ஒரு கேள்விக்குக் கச்சிதமாகப் பதில் சொல்ல அறிவுஜீவிகளால்தான் முடியும்!', 'அது ஏன், என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கிறீர்கள்?' என்று சூழ்நிலைக்கு ஏற்ப மரியாதையாகவோ, கலாய்த்தலாகவோ கமென்ட் அடித்து, உங்களுக்கான நேரத்தைப் பறித்துக்கொள்ளுங்கள்!

கேள்விகள் புரியாவிட்டால், இன்னும் தெளிவாக விளக்குமாறு தயங்காமல் கேளுங்கள். 'நீங்கள் குறிப்பிடுவது விக்டரையா அல்லது ஜெயப்பிரகாஷையா?' என்றெல்லாம் விளக்கிக் கேட்பதன் மூலம் பதில் அளிக்கும் அவகாசத்தை நீட்டிக்கொள்ளலாம். மேலும், எதைப்பற்றி குறிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்பதிலும் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்!

பதில் அளிப்பது எப்படி?

பேச்சு நம் மூச்சு!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... கல்லூரி நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, காதல் வெளிப்பட்ட தருணம், நண்பர்களுக்கு இடையிலான மனஸ்தாபம் எனப் பல சூழ்நிலைகளில் உங்களின் ஒற்றைப் பதில்தான் பின்விளைவுகளைத் தீர்மானித்து இருக்கும். அலுவல்ரீதி யாகவோ, விளையாட்டுத்தனமாகவோ... எந்தச் சூழலிலும் வெளிப்படும் உங்கள் பதில் வார்த்தைகளில் கவன மாக இருங்கள்!

எந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதும், அதற்கு நீங்கள் முழு மனதுடன் பதில் அளிக்கும் தொனியுடன் இருங்கள். கேள்வி வந்து விழுந்த பிறகு, அதற்கு எப்படிப் பதில் அளிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கலாம். ஆனால், முன்னரே நீங்கள் இறுக்கமான மனநிலையில் இருந்தால், எதிராளி உங்களிடம் கேட்க விரும்பிய கேள்வியைக் கேட்காமலேயேகூடப் போகலாம்.

ஒரு கேள்விக்கான பதில் உங்களுக்குத் தெரியாவிட்டால், நேர்மையாக 'எனக்குத் தெரியாது' என்று ஒப்புக்கொள்ளுங்கள். அந்த நேர்மைக்கு உங்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் விழும். அதே சமயம், நீங்கள் பொய் சொல்லி மழுப்புவதை எதிராளி உணர்ந்துவிட் டால், அதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கட்டாயம்!

ஏதேனும் தகவல்களைக் கோரும் கேள்விக்குப் பதில் தெரியாத சூழலில், 'மன்னிக்கவும், எனக்கு அது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால், இன்று மாலைக்குள் அதை நான் கண்டுபிடித்துச் சொல்லிவிடுகிறேன்!' என்று நீங்கள் பதில் அளிக்கலாம். இது, 'உங்க ளுக்கு என்ன தெரியாது என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்' என்பதையும், 'தெரியாத ஒரு விஷயத் தைத் தெரிந்துகொள்ளக் கூடிய தன்னம்பிக்கை நிரம்பிய வர் நீங்கள்' என்பதையும் எதிராளிக்கு உணர்த்தும்!

அலுவல்ரீதியிலான உரையாடல்களின்போது கேள்விகள் உங்கள் பெர்சனல் வாழ்க்கையை உரசினால், 'ஸாரி சார்... நாம் எனது பணித் திறனைக்காட்டி லும், பெர்சனல் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக விவாதிக்கிறோம் என்று நினைக்கிறேன். இதோடு அதை நிறுத்திக்கொள்வோம்!' என்று பணிவாக, அதே சமயம் உறுதியாக உங்கள் மறுப்பினைப் பதிவு செய்து விடுங்கள்!

எந்தக் கேள்வி - பதில் உரையாடலுக்கும் ஆரோக்கியமாக முற்றுப்புள்ளி வையுங்கள். 'நிச்சயமாக நீங்கள் விரும்பும் மாற்றம் நிகழும்!', 'உங்கள் கேள்விகளுக்குச் சரியான பதில்களை நான் அளித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்!' என்பதுபோன்ற பாசிட்டிவ் பதில்கள் உங்கள் இறுதி வார்த்தைகளாக இருக்கட்டும்!

எந்த உரையாடலையும் வெற்றிகொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். 'வெற்றி பெற்றதாக' நீங்கள் உணர்வதைக் காட்டிலும் 'அவர் சொல்வது நியாயம்தானே!' என்று எதிராளியை உணரவைப்பதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

பேச்சு நம் மூச்சு!
பேச்சு நம் மூச்சு!