Published:Updated:

கல்லூரிச் சாலை!

கல்லூரிச் சாலை!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
கல்லூரிச் சாலை!
கல்லூரிச் சாலை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கல்லூரிச்சாலை!
கல்லூரிச் சாலை!

இது இளமை, ஏரியா... நிகழ்ச்சிகள், சந்திப்புகள், சாதித்தவர்கள் என நல்ல விஷயங்களை இங்கே அறிந்துகொள்ளலாம்

மிஸ். ஃபர்ஸ்ட்!

டந்த கல்வி ஆண்டில், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட 454 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடந்த தேர்வில் உடல் மருத்துவப் பொறியியல் (பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங்) துறையில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் தட்டியவர், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. (PSNA) பொறியியல் கல்லூரியில் படித்த பிரிட்டி பேபி. இப்போது கோவை அமிர்தா பொறியியல் கல்லூரியில் எம்.டெக்., படித்துக்கொண்டு இருக்கிறார். "ப்ளஸ் டூ முடிச்சதும் மெடிக்கல் படிப்பதா, இன்ஜினீயரிங் படிப்பதான்னு குழப்பமா இருந்தது. அப்போதான் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங்பத்தி

கல்லூரிச் சாலை!

கேள்விப்பட்டேன். இந்தப் படிப்பில் மெடிக்கலும் இன்ஜினீயரிங்கும் சேர்ந்தே இருக்கும். சந்தோஷமா சேர்ந்துட்டேன். பிடிச்ச படிப்புங்கிறதால ரசிச்சுப் படிச்சேன். இதோ, மாநில அளவில் தங்கப் பதக்கம் வாங்கிட்டேன். 'எப்படி தங்கப் பதக்கம் வாங்கினே?'ன்னு எல்லோரும் கேட்கிறாங்க. கடின உழைப்புதான் என்னோட சீக்ரெட் ஆஃப் சக்சஸ். வகுப்பில் நல்லாக் கவனிச்சு குறிப்பு எடுத்தேன். பாடப் புத்தகத்தை மட்டும் படிக்காம, அது தொடர்பான நிறைய புத்தகங்களைத் தேடிப் படிச்சேன். முக்கியமான ஃபார்முலாக்களை அறைச் சுவரில் எழுதி ஒட்டிவெச்சுட்டேன். எந்நேரமும் கண்ணில் படுவதால், அது சீக்கிரமே மனப்பாடம் ஆகிரும். இது மட்டும் போதாது. சஞ்சய் ராமசாமி ஃபார்முலாவையும் ஃபாலோ பண்ணணும். கஷ்டப்பட்டுப் படிக்கக் கூடாது. இஷ்டப்பட்டுப் படிக்கணும்!"-தம்ஸ் அப் காட்டுகிறார் பிரிட்டி பேபி!

உ.அருண்குமார், படம்: வெ.பாலாஜி

பூம்... பூம்... ரோபோடா!

டெக்ரானில் சென்ற மாதம் சர்வதேச அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரோபோ உருவாக்கும் போட்டி நடைபெற்றது. அதில் சிட்டி ரோபோ மாதிரி வீட்டு வேலை பார்க்கும் ஒரு ரோபோவை உருவாக்கி, வெள்ளிப் பதக்கம் வாங்கி வந்திருக்கிறார்கள் ப்ரனவன் மற்றும் சிநேகப்ரியா. அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.

கல்லூரிச் சாலை!

"வீட்டு வேலைகள் பண்ற ரோபோவை உருவாக்கு வதுதான் போட்டியின் விதி. நாங்க உருவாக்கிய ரோபோ கை தட்டினால், நடந்து வரும். பொருட்களைத் தூக்கிட்டு வரும். படி ஏறும். முப்பரிமாணத்தில் கேமரா பொருத்தி இருந்த, லேசர் ஒளியால் இயங்குகிற ரோபோவுக்கு முதல் பரிசு. எங்க ரோபோவுக்கு இரண்டாம் பரிசு கிடைச்சது. முதல் சர்வதேசப் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வாங்கினது சந்தோஷமா இருக்கு. எங்க ரோபோவை இன்னும் மாடர்னா மாத்தப்போறோம். அடுத்ததா நிச்சயம் தங்கம்தான்!"- நம்பிக்கையாகப் பேசுகிறார் ப்ரனவன். தலையாட்டி ஆமோதிக்கிறார் சிநேகப்ரியா!

அ.முகமது சுலைமான், படம்: ச.இரா.ஸ்ரீதர்

பச்சை நிறமே... பச்சை நிறமே!

யோலா கல்லூரியில் சென்ற வாரம் பசுமைப் புரட்சி விழா நடந்தது. பசுமைப் புரட்சிக்காக விழிப்பு உணர்வுப் பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டார்கள். எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத், டி.ஜி.வைஷ்ணவா, அண்ணா ஆதர்ஷ், விவேகானந்தா, பச்சையப்பன், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி உள்ளிட்ட சென்னையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் பசுமைப் புரட்சி குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விநாடி-வினா, கோலப் போட்டிகளில் கலந்துகொண்டார்கள்.

கல்லூரிச் சாலை!

விழாவில் பேசிய துணை முதல்வர் மகாலிங்கம், "உலகத்தில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக் கப்பட்டுவிட்டன. இது மனிதனே மனிதனுக்குத் தோண்டிக்கொள்ளும் குழி" என்று எச்சரித்தார். இணை முதல்வர் டாக்டர் எஸ்.ஆரோக்கியசாமி, " 'மண்ணில் இருந்து வந்தாய் மண்ணாய் போவாய்' என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு உள்ளது. மனிதர்கள் மண்ணுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். ஒரு மனிதனால் பல்லாயிரக்கணக்கான மரங்களை உருவாக்க முடியாது. ஆனால், லயோலா கல்லூரியில் படிக்கும் 7,500 மாணவர்களும் வருடத்துக்கு ஒரு மரம் நட்டால், சென்னையைப் பசுமையாக்க முடியும்" என்று மாணவர்களை யோசிக்கவைத்தார்.

நிறைவு விழாவில் கலந்துகொண்ட சுற்றுச் சூழல் ஆர்வலர் சேக்கர் தத்தாத்ரி, "பசுமைப் புரட்சியை ஒரு தனி மனிதனால் செய்ய முடியாது. அது ஒரு கூட்டு முயற்சியின் விளைவு. எல்லோரும் கூட்டு முயற்சி எடுத்து, இதை வெற்றிபெறச் செய்வோம். முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் இயற்கையை நேசித்தார்கள். இந்த தலைமுறைக்கு அந்த அக்கறை இல்லை. இயற்கை இல்லாமல் மனிதனால் தனித்து இயங்க முடியாது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சி எடுத்து பூமியைப் பாதுகாக்க வேண்டும்!" என்றார்!

க.நாகப்பன்

கல்லூரிச் சாலை!
கல்லூரிச் சாலை!