Published:Updated:

ஸ்டூடன்ட் ஸ்டார்!

ஸ்டூடன்ட் ஸ்டார்!

ஸ்டூடன்ட் ஸ்டார்!

ஸ்டூடன்ட் ஸ்டார்!

Published:Updated:

16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
ஸ்டூடன்ட் ஸ்டார்!
ஸ்டூடன்ட் ஸ்டார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டூடன்ட் ஸ்டார்!
இர.ப்ரீத்தி, படங்கள்:என்.விவேக்
ஸ்டூடன்ட் ஸ்டார்!
ஸ்டூடன்ட் ஸ்டார்!

"மீடியா மூலமா நாட்டுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சுட்டே இருப்பேன். என்

கனவு இவ்வளவு சீக்கிரமா நிறைவேறும்னு எதிர்பார்க்கலை!" - ஹரிப்ரியாவின் குரலில் அத்தனைக் குதூகலம். அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி., எலெக்ட்ரானிக் மீடியா இறுதி ஆண்டு படிக்கும் மாணவி. தேசிய அளவில் நடந்த பருவ மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் சாம்பியன் பட்டம் வென்ற பெண்!

"சின்ன வயதில் இருந்தே எனக்குச் சமூக அக்கறை அதிகம். டிராஃபிக் ரூல்ஸ் மீற மாட்டேன். கண்ட இடத்தில் குப்பை போட மாட்டேன். மீடியா மூலம் மக்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்ல ஆசை. அதனால், ப்ளஸ் டூ படிக்கும்போதே, அடுத்ததா எலெக்ட்ரானிக் மீடியாதான் படிக்கணும்னு, அண்ணா யுனிவர்சிட்டியில் சேர்ந்தேன். சேர்ந்ததுமே அண்ணா சமுதாய வானொலி (90.4)யில் சமூக அக்கறை உள்ள நிகழ்ச்சிகள் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது. அதனால், 'மினிஸ்ட்ரி ஆஃப் யூத் அஃப்பையர் இன் ஸ்போர்ட்ஸ்' எனக்கு 'தேசிய இளையோர் விருது' கொடுத்துக் கௌரவித்தது.

ஸ்டூடன்ட் ஸ்டார்!

என் ஆர்வத்தைப் பார்த்த என் பேராசிரியர்கள், 'பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் 'இன்டர்நேஷனல் க்ளைமேட் சேம்பியன்ஸ்' போட்டியில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். அதில் கலந்துகொள்ள சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும். நான் என் வானொலியைப் பயன்படுத்தி, பள்ளி மாணவர்களின் நாடகம் மூலம் மரம் வளர்ப்பு, மின்சார சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். இறுதிப் போட்டிக்காகத் தமிழகத்தில் இருந்து, ஐந்து பேரில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். நீலகிரியில் ஆறு நாட்கள் கேம்ப். அந்தச் சமயத்தில்தான், அங்கே நிலச் சரிவு ஏற்பட்டது. நாங்கள் ஐந்து பேரும் நிலச் சரிவைத் தடுப்பதற் கான காரணங்களைத் தேடி, சார்ட் போட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத் தோம். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சது. எங்களுடைய சார்ட்படிதான் இப்போ நிலச் சரிவுத் தடுப்பு வேலைகள் நடந்துட்டு இருக்கு.

என்னைப்போலவே உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற சாம்பியன் களுடன் கலந்து பேசி, அவர்களின் திட்டங்களையும் நம் ஊரில் எப்படிப் பயன்படுத்தலாம்னு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதுதான் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஐடியா. இப்படி அடிக்கடி உலகின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள நல்ல விஷயங்களை இங்கே பயன்படுத்த முயற்சி செய்வோம். சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவதோடு, எதிர் காலத்தில் ஓர் அமைப்பு உருவாக்கி, ஊடகம் மூலம் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும். நான் நினைக்கிற மாதிரியே, நீங்களும் நினைக்க ஆரம்பிச்சா, இந்தியா துடைச்சுவெச்ச குத்துவிளக்கு மாதிரி ஆகிடும்!"

ஸ்டூடன்ட் ஸ்டார்!
ஸ்டூடன்ட் ஸ்டார்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism