பிரீமியம் ஸ்டோரி
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
ம.கா.செந்தில்குமார்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!

மத்திய நீர்வளத் துறைப் பணிகள்!

மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தில் சுற்றுச்சூழல் நிபுணர், செகரெட்டரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களுக்கு new.uyrb.nic.in தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பங்களை 10.8.2010-க்குள் அனுப்ப வேண்டும்!

இந்திய ராணுவத்துக்குத் தேவை இன்ஜினீயர்கள்!

இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், டெலி கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் பி.இ., அல்லது பி.டெக்., தேர்ச்சி பெற்றவர்களும் கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 49 வாரங்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை முடித்தவர்களுக்கு லெப்டினென்ட் அந்தஸ்தில் பதவி வழங்கப்படும். விண்ணப்பங்களை 20.8.2010-க்குள் அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு http://indianarmy.nic.in/Index.phpx?flag=LfcULYFlbeQ=

தூர்தர்ஷனில் உதவி இன்ஜினீயர் பணி!

கேரியர் கைடன்ஸ்!

ஆல் இந்தியா ரேடியோ மற்றம் தூர்தர்ஷனில் உதவி இன்ஜினீயராகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரேடியோ, டெலி கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் வயர்லெஸ் அல்லது ரேடியோ இன்ஜினீயரிங்கில் பணிபுரிய போதிய திறன் பெற்றிருக்க வேண்டும். 2.8.2010-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு new.allindiaradio.gov.in

கார்ப்பரேஷன் வங்கியில் கிளார்க் பணி!

கார்ப்பரேஷன் வங்கியில் கிளார்க் பதவிக்கான 1,250 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழகத்துக்கு 120 இடங்கள். 40 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு 12.9.2010 அன்று நடைபெறும். ஆன்லைனில் 31.7.2010-க்குள் விண்ணப்பிக்கவும். விவரங்களுக்கு new.corpbank.com

வி.ஏ.ஓ. பணிக்கு அழைப்பு!

தமிழ்நாடு அமைச்சுப் பணியில் 'கிராம நிர்வாக அலுவலர்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள் உட்பட 2,653 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்த உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப 20.8.2010 கடைசி நாளாகும். விவரங்களுக்கு new.tnpsc.gov.in

கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு