பிரீமியம் ஸ்டோரி

16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
ம.கா.செந்தில்குமார்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!

தமிழக அரசில் உதவி இன்ஜினீயர் பணிகள்

தமிழகப் பொதுப் பணி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் போன்ற துறைகளில் உதவிப் பொறியாளர் பணி, தொழிற்சாலை உதவி ஆய் வாளர், இளநிலை மின்சார ஆய்வாளர் பணி களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் 24.10.10-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பி.இ., படித்தவர்கள் ஆகஸ்ட் 13-க்குள் விண்ணப்பிக்கவும். விவரங்களுக்கு new.tnpsc.gov.in

மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் பணிகள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட் டர், லோயர் டிவிஷனல் கிளார்க் ஆகிய பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஸ்டாஃப் செலெக்ஷன் கமிஷன் நடத்தும் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் டைப்பிங் தேர்வும் நடத் தப்படும். கடைசி நாள் 20.8.10. விவரங்களுக்கு http://ssc.nic.in/ssc.html

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

கேரியர் கைடன்ஸ்!

ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்ற பெண்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாகக் கற்பிக்க கல்லூரிக் கல்வி இயக்ககம் முன் வந்துள்ளது. சென்னை ராணிமேரிக் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசுக் கல்லூரிகளில் மட்டுமே இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எஸ்.சி., எஸ்.டி.பிரிவைச் சேர்ந்த 35 வயதுக்குள் உள்ளவர் களும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 33 வயதுக்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு நடைபெறும். நுழைவுத் தேர்வு 4.9.10 அன்று மேற்கண்ட இரண்டு மையங்களிலும் நடை பெற உள்ளது. விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள் 9.8.10. விவரங்களுக்கு new.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

அண்ணா நூலகத்தில் நூலகர் பணிகள்

சென்னையில் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அதிகாரி, உதவி நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேரடித் தேர்வின் மூலம் ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். ஏதாவது ஒரு பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டத்துடன் நூலக அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்க­ளும், நூலக அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங் களை அனுப்பக் கடைசி நாள் 6.8.10. விரிவான விவரங்களுக்கு new.trb.tn.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்!

கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு