Published:Updated:

நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?

நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?
நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?
.
ந.வினோத்குமார், படங்கள்:ஜெ.தான்யராஜூ
நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?
நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?

வன் ஐஸ்க்ரீம் விற்க முடிவு எடுத்தான். தரமான மூலப் பொருட்களைக்கொண்டு

ருசியான ஐஸ்க்ரீம் தயாரிக்கிறான். ஆனாலும், எதிர்பார்த்த விற்பனை இல்லை. சமயங்களில், அளவைக் காட்டிலும் அதிக ஐஸ்க்ரீமை கோப்பைகளில் திணித்தும் கொடுக்கிறான். ம்ஹூம்... எதுவும் வேலைக்கு ஆகவில்லை. ஒருநாள் அவன் மனைவி கடையைக் கவனித்துக்கொண்டாள். அவள் தேர்ந்த ரசனைக்காரி. ஆச்சர்யமாக அந்த நாள் விற்பனை எகிறி மொத்த ஐஸ்க்ரீமும் விற்றுத் தீர்ந்தது. 'எப்படி இது சாத்தியம்?' என்று மனைவியிடம் கேட்டான். "ஐஸ்க்ரீம் பொதுவாகக் குழந்தைகளுக்குத்தான் ரொம்பப் பிடிக்கும். பார்த்ததுமே அவங்களை ஐஸ்க்ரீம் வாங்கத் தூண்டும்படி இருக்கணும். நீங்க வெறுமனே ஐஸ்க்ரீமை மட்டும் கொடுத்தீங்க. நான் அது மேல ஒரு செர்ரி பழம், ஸ்ட்ராபெர்ரி, வேஃபர் பிஸ்கட், சாக்லேட் க்ரீம்னு சின்னச் சின்னதா அழகு சேர்த்தேன். ஆசையா வாங்கிச் சாப்பிட்டாங்க. ஐஸ்க்ரீம் ருசியா இருக்குன்னு சாப்பிட்ட பிறகுதான் தெரியும். ஆனா, பார்த்ததுமே 'அட! இது நல்லா இருக்கே'னு ஒரு நினைப்பை உண்டாக்கணும். நான் உண்டாக்கினேன்!"

நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?

ஒரு வகையில் வேலைவாய்ப்புச் சந்தையில் நீங்களும் அந்த ஐஸ்க்ரீம்போலத்தான். செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் க்ரீம் என ஏதேனும் ஒரு விசேஷ கோட்டிங் கொடுத்தால்தான், உங்களுக்கான சந்தை மதிப்பு அதிகரிக்கும். பள்ளிப் படிப்பு, கல்லூரிப் பட்டம் தவிர, உங்கள் திறமை, ஆர்வத்துக்கு ஏற்பக் கூடுதலாக நீங்கள் படிக்கும் படிப்புதான் (ADD ON COURSES) உங்களுக்கான செர்ரிப் பழம். இன்றைய சூழலில் இந்தச் சிறப்பு இயல்புப் படிப்புகளின் தேவை குறித்துக் கொஞ்சம் விவாதிக்கலாம்!

"பொதுவாக, மனிதர்களை ஸ்கில்டு(skilled), செமி-ஸ்கில்டு(semi-skilled), அன்-ஸ்கில்டு(un-skilled) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இந்த 'ஆட் ஆன் கோர்ஸ்'கள் மூலம் செமி- ஸ்கில்டு மாணவர்களை ஸ்கில்டு மாணவர்களாக மேம்படுத்த முடியும். ஆசிரியர்கள், பாடத்தை மட்டுமே நடத்திவிட்டுச் செல்லாமல், தினமும் தங்கள் வகுப்பில் 15 நிமிடங்கள் ஒதுக்கி, அந்தத் துறை சார்ந்த அப்டேட்கள், துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், அதற்குத் தயார்செய்துகொள்ளும் வழிகள் ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும்!" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்.

மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் 'கெம்பா' கார்த்திகேயன் இது குறித்து இன்னும் விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார், "சிறப்புத் தகுதிப் படிப்புகளை ஸ்கில் ஓரியன்டட் கோர்ஸ் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தம். கணக்குக்கு நான்கைந்து சான்றிதழ் படிப்புகளைப் படிப்பதைவிட, உங்கள் திறனுக்கும் நீங்கள் எதிர்பார்க்கும் வேலைக்கும் தொடர்பு உள்ள ஒரு படிப்பில் சேர்ந்து உங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். உங்கள் திறன், சிந்தனைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் படிப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தொலைநிலைக் கல்வித் திட்டம் மூலம் கட்டணம் செலுத்தினால் ஒரு பட்டம் கிடைத்துவிடும். அதன் மூலம் அறிவைப் பெறலாம். ஆனால், திறன்களைப் பெற முடியாது.

அதேபோல, கட்டணம் அதிகம் உள்ள படிப்புகளைக் கூடுதலாகப் படிப்பதன் மூலம் வேலை கிடைத்துவிடும் என்பதும் தவறான கருத்து. 10 வருடங்களுக்குப் பின் கிடைக்கப்போகும் வேலைவாய்ப்பை மனதில்கொண்டு செயல்படுவதைவிட அடுத்த இரண்டு வருடங்களுக்கு எதில் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்குமோ, அது சார்ந்த படிப்புகளைப் படிக்க வேண்டும். பொதுவாக, பட்ட வகுப்பில் எந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்களோ, அந்தத் துறை சார்ந்த படிப்பை, பிற படிப்பாகத் தேர்ந்தெடுத்துப் படிப்பது நல்லது. உதாரணமாக, வரலாறு படிக்கும் ஒரு மாணவர், சுற்றுலா மேலாண்மை படிப்பைப் பிற படிப்பாகத் தேர்வு செய்யலாம். பொறியியல் மாணவர் ஆட்டோ கேட், கேம் போன்ற படிப்புகளைப் படிக்கலாம்.

முதலில் உங்களுக்கான வேலை (employment) எது என்பதை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதற்குப் பின் அந்த வேலைக்கு ஏற்ப உங்களின் பணித் திறன்களை (employability) வளர்த்துக்கொள்ளுங்கள்!" என்பவர் சிறப்புப் படிப்புகள் குறித்த சில அவசியத் தகவல் பட்டியலும் அளிக்கிறார்.

அக்கவுன்ட்டிங்

நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?

பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவை ஒரு பெரும் வளர்ச்சி காட்டவிருக்கும் சர்வதேசச் சந்தையாகப் பார்க்கின்றன. பல துறைகளிலும் முதலீடுகளைச் செய்து வருகின்றன. இதனால் வங்கி, ஆயுள் காப்பீடு நிறுவனங்கள்போன்ற நிதியியல் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாகி வருகின்ற சூழலில் 'அக்கவுன்ட்டிங்' படிப்பு படித்தவர்களுக்கான தேவைகள் அதிகம். ஆனால், பி.காம்., என்ற ஒற்றைப் பட்டம் மட்டும் உதவாது. கூடவே டேலி, வரி மேலாண்மை, காப்பீடு மேலாண்மை, சர்வதேச புக்-கீப்பிங் முறைகள் ஆகியவற்றையும் தெரிந்துவைத்திருப்பது வேலைவாய்ப்புக்கு உறுதி செய்யும். இந்தப் படிப்புகள் சான்றிதழ் படிப்பாகவும், டிப்ளமோ படிப்பாகவும் ஆறு மாத காலம் முதல் ஒரு வருட காலப் படிப்புகளாக வழங்கப்படுகின்றன!

தியேட்டர் ஆர்ட்ஸ்

பொழுதுபோக்குக்கு நாடகம் போடுவது என்பது பழைய கதை. புரொஃபஷனலாக நாடகங்களில் நடிப்பது, நாடகங்களை நடத்துவது, அதன் மூலம் வெள்ளி, சின்னத் திரை வாய்ப்புகளைக் கவர்வது தற்போதைய டிரெண்ட். தியேட்டர் என்றவுடன் நடிப்பு மட்டுமல்லாமல்; ஸ்டேஜ் டிசைனிங், மேக்-அப் போன்ற பேக் ஸ்டேஜ் பணிகள், ஆடை வடிவமைப்பு, நகை வடிவமைப்பு போன்றவையும் அடங்கும். மேலும், கிராமியக் கலைகளையும் கற்றுக்கொடுக்கும் பல கூத்துப் பட்டறைகள் இன்று தமிழகத்தின் பல கல்லூரிகளிலும் இயங்கி வருகின்றன!

அமைதி மற்றும் சச்சரவு மேலாண்மை

உலகில் பெரும்பாலான பகுதிகளில் மனித உரிமைகள் மீறப்பட்டும், நசுக்கப்பட்டும் வருகின்ற நிலையில் யுத்தம், தீவிரவாதம், வன்கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் துணிச்சலும், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கின்ற மாணவர்களுக்கு இந்தப் படிப்பு ஏற்றது. வரலாறு, சட்டம், அரசியல் அறிவியல், அயல் நாட்டு உறவுகள், பொது நிர்வாகம் போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இந்தப் படிப்பைப் படிப்பது அவர்களின் மதிப்பை அதிகரிக்கும். சர்வதேச மேலாண்மை நிறுவனங்கள், ராணுவம், என்.ஜி.ஓ. ஆகியவற்றில் வேலைவாய்ப்பு கள் உள்ளன!

மல்டி மீடியா

மென்பொருள், மருத்துவம், போக்குவரத்து என அ முதல் ஃ வரையிலான அனைத்துத் துறைகளும் இன்று கணினி வலைப்பின்னலில்தான் இயங்குகின்றன. வெப் டிசைனிங், கிராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், எடிட்டிங், கேமிங் மென்பொருட்கள் உருவாக்குதல், இணைய இதழ்கள் தயாரித்தல், இணையப் புத்தகங் கள் பதிப்பித்தல் என இந்தப் படிப்பு தரும் வேலை வாய்ப்புகளின் பட்டியல் நீள்கிறது!

ஆடை வடிவமைப்பு

நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?

'ஆள் பாதி ஆடை பாதி' என்பது கார்ப்பரேட் உலகில் முக்கிய விதி. ஒருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப ஆடைகளை வடிவமைப்பது மிகுந்த கலாரசனையுடன் செய்ய வேண்டிய விஷயம். இந்தப் படிப்பு பட்ட வகுப்பாகவும் வழங்கப்படுகிறது என்றாலும், ஆர்வம் இருந்தும் சேர முடியாத மாணவர்கள் இந்தப் படிப்பை ஒரு வருட டிப்ளமோ படிப்பாகப் படிக்கலாம். கூடவே மெர்க்கன்டைசிங், அப்பேரல் மேலாண்மை போன்ற படிப்புகளும் இதனுடன் சேர்த்து வழங்கப்படுகின்றன. பிரபல ஜவுளித் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைகள் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல படைப்புத்திறன் இருந்தால் சொந்தமாக 'பொட்டீக்' வைத்து பிரபல ஃபேஷன் டிசைனராகவும் ஆகலாம்!

மெடிக்கல் லேப் டெக்னாலஜி

ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, திசுக்கள் போன்றவற்றை வகைப்படுத்தி ஆய்வு செய்தல் என நோயைக் கண்டறிவதிலும், குணப்படுத்துவதிலும், உயிரைக் காப்பாற்றுவதிலும் மிக முக்கியப் பங்காற்றும் பணிகள் கற்றுக்கொடுக்கும் படிப்பு. அறிவியலை ஒரு பாடமாக ப்ளஸ் டூ-விலும், கல்லூரியிலும் படிப்பவர்கள் தவறவிடக் கூடாத 'எக்ஸ்ட்ரா' படிப்பு இது. மருத்துவமனைகள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், உயிரியல் ஆய்வகங்கள் என வேலைவாய்ப்புகள் வழங்கும் தளங்கள் பல இருக்கின்றன!

இயற்கை வேளாண்மை

காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், உணவுகளைப் பதப்படுத்துதல் என்று இயற்கை வேளாண்மையின் பரவலாக்கம் நீண்டது. இது சார்ந்த படிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் அவசியம் என்ற வரம்புகள் இல்லை என்பதால், விருப்பம் உள்ள அனைவரும் இவற்றைப் படிக்கலாம். நேரடிக் களப் பயிற்சிகள் முடிந்தவுடன் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் முடியும்!

பி.பி.ஓ. மேலாண்மைப் படிப்புகள்

'அவுட்சோர்ஸிங்' என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள் தேர்வு செய்வது முதல் எல்லா வகை களிலும் இன்னொரு நிறுவனத்தின் உதவி மிகவும் தேவைப்படும். உலக அளவில் அவுட்சோர்ஸிங்கின் தேவையும், அது ஏற்படுத்தும் புதிய வேலைவாய்ப்புகளும் பெருகியபடியே இருக்கின்றன. மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், கால்சென்டர், டெலி மார்க்கெட்டிங், மெடிக்கல் கோடிங் என 'அவுட்சோர்ஸிங்' வேலைகள் வளர்ந்து வருவது இதன் முக்கிய சிறப்பம்சம். நல்ல ஆங்கில மொழி அறிவு, வேகமாகத் தட்டச்சு செய்யும் திறன் இருந்தால் போதும். பெரும் பாலும் இரவு நேர 'ஷிஃப்ட்'களில்தான் வேலை இருக்கும். பல பி.பி.ஓ. நிறுவனங்கள் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு நேரம் போக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் பணியாற்றினால் போதும் என்று பல சலுகைகளை அளிக்கின்றன!

மின்னணுப் பொறியியல்

நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?

வானொலி, தொலைக்காட்சி, மிக்ஸி போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் இல்லாத வீடுகள் இன்று மிகவும் குறைவு. அதன் பழுது நீக்கும் படிப்புகளைப் பொழுதுபோக்காகக்கூட நீங்கள் படிக்கலாம். பல கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றில் பகுதி நேரமாக ஆறு மாத காலத்துக்கு இந்தப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. படிப்புக்குப் படிப்பும் ஆச்சு, பாக்கெட் மணிக்குக் காசும் ஆச்சு.

அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் ஒரு பட்ட வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கும்போதே, இன்னொரு விருப்பப்பட்ட துறையில் விருப்பப்பட்ட பாடத்தைச் சான்றிதழ் படிப்பாகவோ, டிப்ளமோ படிப்பாகவோ படிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் அறிவித்திருக்கிறார். சுமார் 45 வகையான சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகள் மூன்று, ஆறு மாதங்கள், ஒரு வருடப் படிப்புகளாக வழங்கப்படுகின்றன. செலவும்கூட அதிகபட்சம் 3,000 ரூபாய்க்குள் முடிந்துவிடும். இந்தக் கட்டணங்களைத் தவணை முறைகளில் செலுத்தும் வசதியும் உண்டு.

கூடுதல் படிப்புகளைப் படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச மனித வள மேம்பாட்டுப் பயிற்சி யாளரும், கல்வி வழிகாட்டுதல் நிபுணருமான ராமன். "எந்த ஒரு கூடுதல் படிப்பைப் படிப்பதற்கு முன்பும், எந்தத் துறையில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது, அந்தத் துறையில் சாதிப்பதற்கான தகுதிகள், திறன்கள் ஆகியவை இருக்கின்றனவா என்று ஆராய்வது முக்கியம். கட்டாயத்தின் பேரில் படிக்காமல், உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப படிப்பதும், உங்கள் துறை சார்ந்து படிப்பதும் உங்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும். பல ஐ.டி. நிறுவனங்கள் சி.சி.என்.ஏ., ரெட் ஹாட், சிஸ்கோ சர்டிஃபிகேஷன் போன்ற உலகம் முழுமைக்கும் பொதுவான சான்றிதழ்ப் பயிற்சிகள்கொண்ட கூடுதல் பாடங்களைப் படித்திருக்கிறார்களா என்று பார்க்கின்றன" என்கிறார் ராமன்.

என்ன... உங்கள் ஐஸ்க்ரீமுக்கான செர்ரியை முடிவு செய்துவிட்டீர்களா?

நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?
நாளைக்கு நீங்க யாரு? இப்பவே யோசிக்க ரெடியா?