Published:Updated:

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கேரியர் கைடன்ஸ்!
ம.கா.செந்தில்குமார்
கேரியர் கைடன்ஸ்!

இந்தியன் வங்கியில் எழுத்தர் பணி:

இந்தியன் வங்கி, சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வரும் முன்னணி அரசு வங்கி. இதில் காலியாக உள்ள 685 கிளார்க் பணியிடங்களைப் பூர்த்திசெய்யத் தேர்வு நடைபெற உள்ளது. இதில், தமிழகத்துக்கு 253 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ப்ளஸ் டூ அல்லது அதற்குச் சமமான படிப்பில் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் அல்லது ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-ல் இருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வு 22.8.10 அன்று நடைபெற உள்ளது. ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை 6.7.10-க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு new.indianban.in

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி:

விவசாயம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சிக்காகச் செயல்பட்டு வருகிறது நபார்டு (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வங்கி) வங்கி. இது காலியாக உள்ள 170 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 21-ல் இருந்து 28 வயது வரை உள்ள இளங்கலை பட்டதாரிகளும், 21-ல் இருந்து 30 வயது வரை உள்ள முதுகலைப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு new.nabard.org

இந்திய ராணுவத்தில் பயிற்சி ப்ளஸ் பணி:

கேரியர் கைடன்ஸ்!

இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய லெப்டினென்ட் ஆகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்த திருமணம் ஆகாக ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம், என்.சி.சி-யில் சீனியர் டிவிஷனில் 2 வருடங்கள் சேவை, என்.சி.சி-யில் பி அல்லது சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தேர்வு பெறுபவர்களுக்கு 11 மாதங்களுக்கு ராணுவ அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு லெப்டினென்ட் அந்தஸ்து பணி வழங்கப்படும். 10.8.2010-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களுக்கு new.indianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

இந்தியக் கடற்படையில் செயிலர் பணி:

செயிலர் பணிக்குத் திருமணம் ஆகாத இந்தியக் குடியுரிமை பெற்ற ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்தியக் கடற்படை. ப்ளஸ் டூ-வில் கணக்கு, இயற்பியல் பாடத்துடன் வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸில் ஏதாவது ஒரு பாடத்தைச் சேர்த்துப் படித்து இருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தில் 5,700 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வுகளின் மூலம் தேர்வு நடைபெறும். new.nausena-bharti.nic.in என்ற தளத்தில் இருந்து விண்ணப்ப மாதிரியைப் பிரதி எடுத்து பூர்த்திசெய்து சாதாரண தபாலில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். உடல் தகுதி, அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கும் மேற்கண்ட இணையதளத்தையே பார்க்கவும். 16.7.10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்!

கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!